குரு பெயர்ச்சி பலன் 2022 : விபரீத ராஜயோகம்...கவலைகளை போக்கும் குரு பகவான் யாருக்கு தெரியுமா?
குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். குருவின் பார்வைகள் மற்றும் பயணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மதுரை: குரு பகவான் இப்போது மீன ராசியில் பயணம் செய்கிறார். குரு பகவானின் சொந்த வீடு மீன ராசி. தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரும் குரு பகவான் அனைத்து ராசியினருக்கும் நன்மைகளையே செய்வார். சிலருக்கு ஜாதகத்தில் உள்ள தசாபுத்திப்படி சோதனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு விரைய குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று பார்க்கலாம்.
நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான்.
நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். இப்போது மேஷ ராசிக்கு குரு பகவான் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஆட்சி பெற்று அமர்ந்துள்ள இடம் என்பதால் சிலருக்கு விபரீத ராஜ யோகமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேஷம்
குரு 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். 12ஆம் வீட்டு அதிபதி நன்மைகள் செய்வார். சுப விரையங்களை ஏற்படுத்துவார். ஆலய தரிசனம் செய்வீர்கள். மகன்களின் உயர்கல்விக்கு உதவி செய்வார். கல்வி லோன்களை எடுக்கலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு சுப காரியம் செய்யலாம். வீடு கட்ட தொடங்கலாம். மேஷ ராசியில் குருவின் பார்வை 4ஆம் வீட்டில் விழுவது பலம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

குருவின் பார்வையால் பலன்
உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் குருவின் பார்வை விழுவதால் கடன் வாங்கலாம், நீண்ட நாட்கள் கடனை அடைக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்ப்புகள் விலகும். எதிரிகள் தொல்லை நீங்கும். எந்தவொரு காரியத்திலும் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம்.

நன்மைகள் நடைபெறும்
8ஆம் வீட்டில் விழும் குருவின் பார்வையால் சங்கடங்கள் நீங்கும். கஷ்டங்கள் கவலைகள் நீங்கும். தந்தை வழி உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்; மகனுக்கு வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அதேநேரம் தன்னிச்சையாக திடீர் முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். வீண் பிரச்னைகள் ஏற்படலாம். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். உடல் வலி, சோர்வு வந்து செல்லும்.

விபரீத ராஜயோகம்
குரு 12ஆம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோகத்தை தரும். திடீர் பண வரவு வரும். எதிர்பார்க்காத செலவு வரும். திடீர் மாற்றங்கள் வரும். குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். திடீர் அலைச்சல் வரும். வேலையில் பளு அதிகரிக்கும். அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரிகளிடம் கவனம் தேவை. உயரதிகாரியின் கவனத்தை பெறுவீர்கள். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்குமுன் நிதானிப்பது நல்லது.

திடீர் செலவுகள் அதிகரிக்கும்
காதல் கை கூடாது என்பதால் இப்போதைக்கு சொல்ல வேண்டாம். செலவினங்கள் துரத்தும். கடன் வாங்குவீர்கள். விபத்து, வீண்பழி வந்து நீங்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் கொஞ்சம் தள்ளிப்போடவும். இந்த ஒரு ஆண்டை வெற்றிகரமாக கடந்து விடுவீர்கள்.












Click it and Unblock the Notifications