குரு பெயர்ச்சி பலன்.. முடிவுக்கு வந்த குரு சண்டாள தோஷம்.. குருவின் வலிமையால் யாருக்கு ராஜயோகம்
சென்னை: சுப கிரகமான குரு அமரும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெரும். குரு பெயர்ச்சியால் கல்வி, வேலை வாய்ப்பு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும், சிலருக்கு திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கை கூடி வரும். குரு சண்டாள தோஷம் முடிவுக்கு வந்த நிலையில் குருவினால் கிடைக்கப் போகும் சந்தோஷத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்: ஜென்ம குரு என்று பயப்பட வேண்டாம். குருவின் பார்வையால் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கைகூடி வரும் பாக்கியங்கள் தேடி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் லாபம் கிடைக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். குரு பார்வையால் சீக்கிரம் சரியாகி விடும். குரு அருள் புரியும் ஆலய தரிசனம் அற்புதங்களை ஏற்படுத்தும்.

ரிஷபம்: நிறைய பண வருமானம் வரும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க பாடு பட்டாலும் முடியாது மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க மவுன விரதம் இருப்பது நல்லது. குருவின் சுப பார்வை ராசிக்கு நான்கு, ஆறு, எட்டு, ஆகிய இடங்களில் விழுவதால் நோய்கள் தீரும் கடன்கள் அடைபடும். வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள். குரு பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் பாதிப்புகள் நீங்கும்.
மிதுனம்: லாப ஸ்தானத்தில் குரு பகவான் வலிமையுடன் பயணம் செய்வதால் இனி முழுமையான யோகம் கிடைக்கும். குருவின் பார்வை உங்களுடைய தைரிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. செய்யும் தொழிலில் லாபம் வரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேலையில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். திருமணம் நடைபெறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களின் வீட்டில் மழலை சத்தம் கேட்கும் நேரம் வந்து விட்டது. வியாழக்கிழமை விரதம் இருந்து குரு பகவானை வணங்குங்கள்.
கடகம்: தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டில் குரு பயணம் செய்வதால் பதவி பறிபோகும் என்று பயம் வேண்டாம். வலிமையான குருவின் பார்வையால் பணம் தாராளமாக வரும். அதே நேரத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாமல் போகும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும் கவனமாக இருங்க. வியாழக்கிழமை விரதம் இருங்க நன்மை தரும்.

சிம்மம்: ஒன்பதாம் வீட்டு குரு பாக்யங்களை அள்ளித்தரப்போகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தான குருவினால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். குருவின் பார்வையால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசியின் மீது விழுவதோடு மட்டுமல்லாது ராசிக்கு முன்று ஐந்தாம் வீடுகளின் மீது விழுகிறது. உங்களின் தைரியம் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். குருபகவானை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்க மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.
கன்னி: எட்டாம் வீட்டில் பயணம் செய்யும் குரு உங்களின் கஷ்டங்களை போக்குவார். இருக்கிற பதவியை தக்க வைத்துக்கொள்ளுங்கள். ஏப்ரல் மாதம் வரை பொறுமையும் நிதானமும் அவசியம். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசியின் மீது விழும் குருவின் பார்வையால் பணவரவு கூடும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உறக்கமின்றி தவித்த உங்களுக்கு சுகமான உறக்கம் வரும். பாதிப்புகள் குறைய குருபகவானை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். மஞ்சள் வஸ்திரம் தானம் பண்ணுங்க.












Click it and Unblock the Notifications