குரு பெயர்ச்சி 2023: குரு பகவான் உதயம்..உச்சம் தொடப்போகும் தங்கம்..ஆளும்கட்சிக்கு அடி தூள்
சென்னை: குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவான் ராகு உடன் இணைந்திருக்கிறார். குரு பகவானுக்கு கேதுவின் பார்வையும் கிடைக்கிறது. இதனால் நாட்டில் என்ன மாதிரியான பொதுவான பலன்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.
சூரியனுக்கு 11 டிகிரிக்குள் குரு வரும் போது குரு பகவான் அஸ்தங்க நிலையை அடைவார். அதே டிகிரியில் குருவை சூரியன் கடக்கும் போது குரு உதயமாவார். முழு சுபரான குரு அஸ்தங்கம் ஆகும் போது பெரிய அளவில் பலன்கள் நடைபெறாது.
இதுநாள் வரை அஸ்தமனமாகியிருந்த குரு பகவான் இனி உதயமாகப்போகிறார். வெயிலின் தாக்கம் குறையும் கோடை மழை அதிகரிக்கும். தடை பட்டிருந்த திருமண சுபகாரியங்கள் இனி மளமளவென நடைபெறும். தங்கம், வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அற்புதமான காலகட்டம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். தொழில்துறையில்,வியாபாரத்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகவாதிகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து குறையக்கூடும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத சரிவு உண்டாகும். ராகு திசை ராகு புத்தி நடப்பவர்களுக்கும், கேது திசை கேது புத்தி நடப்பவர்களுக்கும் எதிர்பாராத தன லாபம் உண்டாகும்.
ஜூன் 30,2023 முதல் நவம்பர் 11,2023 வரை குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்வார். அப்போது தங்கம் வெள்ளி விலைகள் எதிர்பாராமல் குறையும். திருமணம் சுப காரியங்கள் நாட்டில் அதிகரிக்கும். நாட்டில் மழைவளம் அதிகரிக்கும். நாட்டு மக்கள் சுகமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள்.
பெண்கள் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியாகவும் இருப்பார்கள். அதிகம் ஏற்றம் உண்டாகும். ஜவுளித்தொழில் விருத்தியடையும். வெண்பட்டு, பட்டு சேலை வியாபாரம் அதிகரிக்கும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நாட்டில் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். குறிப்பாக ஆண் குழந்தைகள் அதிகம் பிறப்பார்கள்.
குரு பகவான் செப்டம்பர் 04ஆம் தேதி திங்கட்கிழமை முதல் டிசம்பர் 31 வரைக்கும் மேஷ ராசியில் வக்ர கதியில் பயணம் செய்வார். அப்போது நாட்டில் அதிகமழை பொழியும். அதீத மழையால் பயிர்கள் சேதமடையும். கார்த்திகை மாதத்தில் உலகின் வடக்குப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும். தங்கம் வெள்ளி விலைகள் குறையும். பங்கு வர்த்தகம் ஸ்திரமாக இருக்கும்.
கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல யோகம் உண்டு. தொழில்துறை நன்கு வளர்ச்சி அடையும். புதிய கனரக தொழில்கள் வளர்ச்சியடையும். விவசாயத்தொழில் வளர்ச்சியடையும். பொதுமக்கள் கடுமையாக உழைத்து அதிக பணம் சேர்ப்பார்கள். நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகும். சேமிப்பும் அதிகமாகும்.
நவம்பர் 25,2023 முதல் பிப்ரவரி 02 வரைக்கும் குரு பகவான் மீண்டும் வக்ர கதியில் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் பயணம் செய்யும் போது பங்குவர்த்தகம் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி ஸ்திரமாக விலை உயரும். மருத்துவ உதவியுடன் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். பொதுமக்களின் ஆரோக்கியத்திற்காக அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவிப்பார்கள்.

வக்ர நிவர்த்தி அடைந்து குரு பகவான் மீண்டும் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்ய ஆரம்பிக்கும் போது 2024 மே மாதம் வரைக்கும் தங்கம், வெள்ளி விலை உயரும். தங்கத்தில் முதலீடு செய்யலாம். பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தை தொடும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். வேலையில் இருக்கும் பெண்களுக்கு பதவியில் உயர்வும் புது அந்தஸ்தும் கிடைக்கும்.
நாட்டில் திருமணங்கள் அதிகம் நடைபெறும். திருமணமான பெண்கள் இயற்கையாகவே அதிகம் கருத்தரிப்பார்கள். ஆண்குழந்தைகள் பிறப்பு இயற்கையாகவே அதிகரிக்கும். நாட்டில் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். நாட்டில் ஆன்மீக காரியங்கள் அதிகம் நடைபெறும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications