Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023.. மேஷத்தில் தனித்த குரு.. பார்வையால் கோடி நன்மைகளை பெறும் 3 ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷ ராசியில் உள்ள ராகு குரு கூட்டணி பிரியப்போகிறது. கடந்த ஆறு மாதகாலமாக குரு ராகு கூட்டணியால் பலவித பிரச்சினைகளை சந்தித்த ராசிக்காரர்கள் இனி நிம்மதியையும் மகிழ்ச்சியும் அடையப்போகிறார்கள். திடீர் அதிர்ஷ்டமும் கோடீஸ்வர யோகத்தால் வாழ்வின் உச்சத்திற்கும் செல்லப்போகின்றனர். குரு பகவான் வக்ரநிலையில் பயணம் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Guru peyarchi palan 2023 : Guru Vakra Peyarchi Kodi Nanmai tharum Guru Parvai

துலாம்: குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்க்கிறார். குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறார்.குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும்.பல வருஷங்களாக முயற்சி செய்த விசயங்களை எளிதில் முடிப்பீர்கள்.முன்னேற்றமான வேலை தொழில் சம்பாதித்தியம் அமையும்.வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும்.பகைமைகள் மாறும்.உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். தனித்த குரு உங்களுக்கு கேந்திராதிபதி தோஷத்தை கொடுக்க மாட்டார் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார். பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும்.முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும்.வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.சேமிப்புகள் சேரும் மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடைபெறும். வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது. பிரதோஷ காலங்களில் நந்திக்கு சந்தனம் வாங்கி கொடுப்பது நன்மையைத் தரும்.

விருச்சிகம்: ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்கு குரு பகவான் வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரெல்லாம் பகை என்பது பழமொழி. உங்களுடைய ராசிக்கு பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது ஒரு வகையில் நன்மையே. அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் வரலாம். வெளிநாட்டு பயணம் செல்வீர்கள். இது வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும் .பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும்.தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது.சுபவிரயமாக மாற்ற வீடு மனை. வாங்கும் வாய்ப்பும் வரும்.வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும்.உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது. இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். மேலும் தாங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தை தனகாரகன் குரு பகவான் பார்வையிடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும். அர்த்தாஷ்டம சனியால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்கள் குணமடையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மொத்தத்தில் 60 சதவிகிதம் நன்மைகள் நடைபெறும். வியாழக்கிழமை சித்தர்கள் ஜிவசமாதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் கோயில்களில் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது பாதிப்புகளை குறைத்து பலன்களை அதிகரிக்கும்.

தனுசு: உங்கள் ராசி நாதன் குரு பகவான் ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு பகவான் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தருவார்.குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
11 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதி குருவே பார்ப்பதால் வழக்கு வியாஜ்யங்களில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள்.சாதகமான திர்ப்பை எதிர்பார்க்கலாம்.பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம்.சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும்.பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும்.வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும்.எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம்.புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும்.நீங்கள் செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழுது தான் கிடைக்க போகிறது. தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதீர்கள்.நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுங்கள். கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது

மகரம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். 4 ஆம் வீட்டில் வரும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் 8 ஆம் பாவம் அபகீர்த்தி ஸ்தானம் என்று பெயர். அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் தங்களை நாடி வரும் காலம். புது நண்பர்கள் ஆதரவு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும் மனைவி வகையில் சிறுசிறு வைத்திய செலவுகள் வரலாம். பத்தாம் வீட்டை குரு பார்வையிடுவதால் தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரத்தில் முடங்கிய லாபம் எல்லாம் வரும். உத்யோக உயர்வு பதவி முன்னேற்றம் வெளிநாட்டு தொடர்பு. வேலை கிடைக்கலாம். மாற்றம் முன்னேற்றத்தை தரும். 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடக்கும். வண்டி வாகன விரைய செலவுகள் வரும். சிலருக்கு சொந்த வீடு சொகுசாக இருக்கும். பணி நிமித்தம் காரணமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். இன்பத்தில் துன்பம்,துன்பத்தில் இன்பம் மாறிமாறி வரும் நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்வது நல்லது.

கும்பம்: குரு பகவான் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவத்தில் பயணம் செய்கிறார். குரு பகவான் உங்களுக்கு யோகத்தை மட்டுமே செய்வார். குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்களுக்கு இனிதே திருமணம் நடைபெறும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். கூட்டு தொழில் வெளிநாட்டு பயணம் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் பாக்கியதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கப் போவதால் இது நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம் அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்விக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை இரண்டாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். சிலர் பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். குரு 6 பாவத்துக்கு 6 ஆம் பாவமான 11ஆம் வீட்டை பார்க்க போவதால் ஆரோக்கியம் நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்வீர்கள். கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பது நல்லது.

மீனம்: குரு பகவான் உங்கள் ராசி அதிபதி. ராசி அதிபதியே தனஸ்தானத்தில் வருவதால் பண வருமானம் அதிகரிக்கும். வருமானமும் பல வழிகளிலும் வந்து கொண்டே இருக்கும். குரு பகவானின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளை பார்க்க போவதால் வரும் பிரச்சனைகள் பெரிதாக தெரியும். ஆனால் சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும். வாக்கு ஸ்தானத்தில் குரு பயணம் செய்வதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும்.செல்வ நிலை திருப்தி தரும்..திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். அதே போல் நோய் நொடி சீக்கு பிணி கேடுகள் மறையும் கடன் தொல்லைகள் குறையும். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் இப்பொழுது பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை உத்தியோகம் முன்னேற்றம் மாற்றமும் வரும்.சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும், வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசனம் செய்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+