குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பார்வையால் வீட்டில் குவியும் செல்வம்.. திடீர் ஜாக்பாட் யாருக்கு?
சென்னை: குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். குரு பகவானின் நேரடி பார்வை கிடைக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான்: நவ கிரகங்களில் சுபகிரகமான குரு பகவானின் பார்வை பலவித தோஷங்களை நீக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். குரு பகவான் வக்ர நிலையில் அஸ்வினி, பரணி நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகிறார். குருவின் பார்வை துலாம் ராசிக்காரர்களுக்கு லாப வீடு, மூன்றாவது வீடு, உங்கள் ராசியின் மீது விழுவதால் உங்களுக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் நேரடியாக உங்களுடைய ராசியை பார்வையிடுவதால் திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

துன்பங்கள் நீங்கும்: நீங்கள் தொட்டது துலங்கும் காரிய வெற்றிகள் உண்டாகும். நோய்கள் நீங்கும் மனதில் ஏற்பட்ட காயங்கள் ஆறும் மனக்கவலைகள் முடிவுக்கு வரப்போகிறது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆன்மீக பயணம் சென்று ஆலய தரிசனம் செய்வீர்கள். குரு பகவான் வக்ரகதியில் செல்லும் செப்டம்பர் மாதம் முதல் நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் சீராகும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். எதிரிகள் தொல்லைகள் அகலும்.
தைரியம் கூடும்: ஏழாம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு பகவான் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார்.பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும். பல வருடங்களாக நீங்கள் முயற்சி செய்த விசயங்களை எளிதில் முடிப்பீர்கள். முன்னேற்றமான வேலை தொழில் அமையும். வருமானம் அதிகரிக்கும்.
பண வருமானம்: மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும்.வரவேண்டிய பண பாக்கிகள் கைக்கு வரும். கடன்கள் அடைப்படும். வங்கி சேமிப்புகள் சேரும். குரு வக்ர பெயர்ச்சி காலத்தில் வியாழக்கிழமை குருபகவானை வழிபாடு செய்வது நல்லது. வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications