குரு பெயர்ச்சி பலன் 2023: கவனமாக இருக்க வேண்டிய 2 ராசிக்காரர்கள்..பண விசயத்தில் ஜாக்கிரதை!
குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் நல்ல வாய்ப்புகளும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம். யார் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
சென்னை: குரு பகவான் இயற்கை சுபர். எல்லா ராசிக்காரர்களுக்கும் நல்லது மட்டுமே செய்வார். கோச்சார ரீதியாக குரு பகவான் நல்ல இடத்தில் பயணம் செய்தாலோ குரு பார்வை கிடைத்தாலோ நல்ல பலன்கள் கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறும். ஏப்ரல் மாதம் குரு பகவான் மீன ராசியில் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகு உடன் இணைந்து பயணம் செய்யப்போகும் குரு பகவான் யாருக்கெல்லாம் ராஜயோகத்தை தரப்போகிறார். செல்வம், செல்வாக்கினை அதிகரிக்கப்போகிறார் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் கவனமாகவும் இருப்பது நல்லது.
நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். தனுசு மீனம் ராசிகள் குருவிற்கு ஆட்சி வீடு. கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல. கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 9,11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார்.
குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலம் பெறும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஓராண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைவார் குருபகவான். தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார் குரு. பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே.. உங்களுக்கு ஜென்ம குரு நல்ல மாற்றத்தை தரப்போகிறது. குரு பகவான் பார்வையால் தொழிலில் மாற்றம் ஏற்படப்போகிறது. அப்பா வழியில் சொத்துக்கள் கிடைக்கும். ராகு குரு சேர்க்கையால் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. அதிகார பதவிகள் தேடி வரும். கௌரவம், புகழ், செல்வம், செல்வாக்கு தேடி வரும். முடிவு செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்து கொள்வது நல்லது. வேலை மாற்றம் செய்யும் முன்பாக வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குரு பார்வையால் புத்திரபாக்கியம் கிடைக்கும் சுப செய்திகள் தேடி வரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குருதசை,குருபுத்தி நடப்பவர்கள் வியாழக்கிழமை குருபகவானை வணங்குவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு சுப விரையம் நடைபெறும். பண வருமானம் அதிகரிக்கும். அதே நேரத்தில் வந்த பணம் கரைந்து காணாமல் போகும். ராகு குரு சேர்க்கையால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயத்தில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். வண்டி வாகனம் வாங்கலாம். புது வீடு கட்டலாம் கட்டிய வீட்டினை வாங்கலாம். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். கடன் பிரச்சினைகள் நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே..குரு பகவான் உங்களுக்கு லாப குரு வருவதால் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகத்தை தரப்போகிறார். ராகு உடன் சேரப்போகும் குரு பகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறார். நல்ல பண வருமானத்தை தரப்போகிறார். வேலை செய்பவர்களுக்கு நல்ல புரமோசன் கிடைக்கும். புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல முன்னேற்றம் உண்டாகும். சகோதரர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குருவின் அருளால் வரம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே.. உங்களுக்கு குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் ராகு இணைவதால் எதிர்பாராத மாற்றம் நிகழப்போகிறது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைக்காத திடீர் மாற்றங்கள் வரும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம். மிகவும் புத்திசாலித்தனமாக எதையும் யோசித்து செய்ய தயாராகுங்கள். அஷ்டமத்து காலமாக இருப்பதால் ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து முடிவு செய்வது நல்லது. குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அதே நேரத்தில் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து ஏமாந்து போகாதீர்கள். வீடு இடம் மாற்றம் உண்டாகும். பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புது வாகனங்களை வாங்கலாம். இதுவும் கடந்து போகும் என்று மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். சவால்கள் நிறைந்த குரு பெயர்ச்சியாக இருக்கப்போகிறது.

சிம்மம்
பாக்ய ஸ்தான குரு ராகு உடன் இணையப்போகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு கவுரவ பதவிகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு அதிகார பதவி தேடி வரும். செல்வம், செல்வாக்கு தேடி வரும். நல்ல பொருளாதார வரம் தேடி வரப்போகிறது. புகழும் கவுரமும் தேடி வரப்போகிறது. அதிர்ஷ்டமும் அற்புதங்களும் நிகழப்போகிறது. எதிர்பாராத பக்கங்களில் இருந்தெல்லாம் பணம் வரப்போகிறது. அறிவு தெளிவடையும். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். காதல் மலரும் கல்யாண யோகம் கைகூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் நீங்களே எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு வளர்ச்சியையும் செல்வாக்கையும் தரப்போகிறது. மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி நீங்கள்தான். அனுபவிக்கத் தயாராகுங்கள்.

கன்னி
குரு பகவான் ராகு உடன் இணைந்து எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். பணத்தை பத்திரப்படுத்துங்கள். அதிக கடன் ஆபத்தை ஏற்படுத்தும். பங்குச்சந்தை முதலீடுகள் தேவையில்லை. லாட்டரி, ஊக வணிகத்தில் பணத்தை ஈடுபடுத்த வேண்டாம். குரு பார்வை உங்களுக்கு சுப விரையத்தை தரப்போகிறது. சொந்த வீடு, வாகனம் வாங்கலாம். இடமாற்றம் நிச்சயம் ஏற்படும். அஷ்டமத்து குரு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்துவார். சரியான நேரத்தில் சத்தான ஆரோக்கியத்தை சாப்பிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.












Click it and Unblock the Notifications