குரு பெயர்ச்சி பலன் 2023: ராஜாதி ராஜ யோகம்..இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகுமாம்
சென்னை: குருபகவான் கால புருஷ தத்துவப்படி ஒன்றாம் வீடான மேஷ ராசியில் பயணம் செய்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக சிம்மம் ராசியையும், ஏழாம் பார்வையாக துலாம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியையும் பார்க்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெறும் என்பதே உண்மை. அதே போல இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் ராஜாதி ராஜ யோகம் பெறப்போகின்றனர்.

மிதுனம்: மிதுனம் ராசிக்கு குரு பகவான் லாப குருவாக பயணம் செய்கிறார். 11வது வீடு சுப ஸ்தானம் ரொம்ப நன்மைகள் நடக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். மன அழுத்தம் நீங்கி தைரியம் தன்னம்பிக்கை நீங்கும். வியாபாரம் தொழிலில் நஷ்டப்பட்டவர்களுக்கு நன்மைகள் நடக்கும். குடும்ப சூழ்நிலைகள் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சசினைகள் தீரும். குருபகவான் நிறைய லாபத்தை தரப்போகிறார். கடந்த கால சிக்கல்கள் தீரப்போகிறது. மேலும் நன்மைகள் நடக்க சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருபகவானை வணங்கலாம். அதே போல வியாழக்கிழமைகளில் அகத்தியரை வணங்கலாம் நன்மைகள் நடக்கும். வியாழக்கிழமைகளில் உளுந்த வடை செய்து ஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவித்து அனைவருக்கும் தர நன்மைகள் கொடுக்கும்.
சிம்மம்: குரு பகவான் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நிறைய நன்மைகள் நடைபெறும். பதவியில் முன்னேற்றம் குடும்பத்தில் சந்தோஷம் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுக்கு மிகப்பெரிய நல்ல யோகமான பலன்களை பெறப்போகிறது. வேலையில் நல்ல மாற்றம் அதிர்ஷ்டம் நிகழும். சுபிட்சமான நிலை உண்டாகும். உங்களின் வீடு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனமும் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கும். பெற்ற அம்மா அப்பாவை வணங்குவதன் மூலம் குரு பகவான் மகிழ்ச்சியடைவார் நன்மைகள் அதிகம் நடைபெறும். திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள்.

துலாம்: குரு பகவான் 7ஆம் இடம் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வது அதிக நன்மையை கொடுக்கும் ஸ்தானம். திருமண பாக்கியம் கைகூடி வரும். நல்ல பலன்கள் தரும் நேரடி குரு பார்வை துலாம் ராசிக்கு கிடைக்கிறது. திருமணம் நடைபெறும். ஏழாம் வீட்டில் இருந்து நேரடி பார்வையால் இருப்பதால் கணவன் மனைவி இடையே பிரச்சினை தீரும் ஒற்றுமை ஏற்படும். விவாகரத்திற்கு அப்ளை செய்தவர்கள் கூட ஒன்று சேர்வார்கள். காதல் வயப்பட்டவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குரு பகவான் உங்களை பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கப் போகிறார். வயதானவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும்.
தனுசு: ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்தில் குரு பயணம் செய்வதால் காரிய சித்தி உண்டாகும். இந்த ஆண்டு குரு மிகப்பெரிய நன்மைகளை தரப்போகிறார். பூர்வ புண்ணியத்தில் குரு பயணம் செய்வதாலும் குருவின் அருள் பார்வை கிடைப்பதாலும் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது. எடுத்த முயற்சிகள் வெற்றியில் முடியும். மனோ பலம், உடல் ஆரோக்கியம், பண பலத்தையும் தருவார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். திருமணம், குழந்தைபேறு போன்ற சுப விசயங்கள் நடைபெறும். நினைத்த காரியம் நடக்கும். பதவியில் உயர்வு கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கு காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகம் தருவார் குரு பகவான். அற்புதமான யோகத்தை தருவார்.

மீனம்: உங்களுடைய இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம், குரு இரண்டாம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் குதூகலத்தை தரப்போகிறார். கேதுவின் நட்சத்திரத்தில் பயணம் செய்த குரு இனி சுக்கிரன் நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போவதால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் குடும்பத்தோடு சேருவார்கள். பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும். உடல்நலக்கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். மனநிலை உடல்நிலையில் நல்ல மாறுதால் ஏற்படும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். மனதில் நிம்மதி பிறக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய நன்மையை தரப்போகிறது. தன ஸ்தானத்தில் ராகு உடன் குரு இணைந்துள்ளதால் பண வருமானம் கொட்டும். நல்ல வேலை கிடைக்கும். துன்பங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications