குரோதி தமிழ் புத்தாண்டில் குபேர யோகம்.. குரு பெயர்ச்சியால் சித்திரை முதல் யாருக்கு திருப்பு முனை?
மதுரை: மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரோதி தமிழ் புத்தாண்டில் சில ராசிக்காரர்களுக்கு குரு பகவானால் குபேர யோகம் கிடைக்கப்போகிறது. குருவின் அருளால் சித்திரை முதல் யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: ஜென்ம குரு பொருளாதார ரீதியாக சில சங்கடங்களை ஏற்படுத்தி வந்த நிலையில் குரு பெயர்ச்சி மிகப்பெரிய செல்வத்தையும் செல்வாக்கையும் தரப்போகிறது. எவ்வளவுதான் பணம் வந்தாலும் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்த உங்களுக்கு சித்திரை முதல் சிறப்பான யோகம் தேடி வரப்போகிறது. சித்திரை முதல் குரு பகவான் இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் அற்புத யோகங்கள் வரப்போகிறது. பணம் பல வழிகளில் இருந்தும் வரும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் குபேர யோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.

கடகம்: குருபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீடான கர்ம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சித்திரை முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடு ஐந்தாம் வீடு, மற்றும் ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பண வருமானம் பல வழிகளிலும் வரும். பழைய கடன்கள் அடைபடும். மே மாதம் முதல் குரு பகவான் லாபத்தை அள்ளித்தரப்போகிறார். குருவின் அருளால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. குரோதி தமிழ் புத்தாண்டில் இருந்து உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனைகளை சந்திக்க தயாராகுங்கள்.
சிம்மம்: குரோதி தமிழ் புத்தாண்டில் இருந்து 10ஆம் வீட்டில் குரு பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் திடீர் திருப்பு முனை உண்டாகும். வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் மதிப்பும் மரியாதையும் கூடும். இரண்டாம் வீட்டில் உள்ள கேதுவின் மீது குருவின் பார்வை விழுவதால் ஆன்மீக தலங்களுக்கு பயணம் செய்வீர்கள். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் வீடு, ஆறாம் வீடுகளின் மீது விழுவதால் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கன்னி: குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குருவின் பார்வையும் உங்களுக்கு கிடைப்பதால் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. குரோதி தமிழ் புத்தாண்டு முதல் குரு பகவான் குபேர யோகத்தை தரப்போகிறார். குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. பல வழிகளில் இருந்தும் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும், வீடு, நிலம் வாங்குவீர்கள். சித்திரை முதல் சிறப்பான யோகமும் உங்களுக்கு வேலையில் திடீர் மாற்றமும் உண்டாகும்.
விருச்சிகம்: குரோதி தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகத்தை கொடுக்கப்போகிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். குரு பலன் குபேர யோகத்தை தரப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடு,லாப ஸ்தானத்தின் மீது விழுவதால் தொட்டதெல்லாம் பொன்னாகும். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். திடீர் திருப்புமுனைகளை எதிர்பாருங்கள்.
மகரம்: குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குரோதி தமிழ் புத்தாண்டில் சித்திரை மாதம் முதல் குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் கவலைகள் நீங்கப்போகிறது. உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமரப்போகும் குருபகவான் உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் கூடும். பல வழிகளில் இருந்தும் பணம் வந்து திக்குமுக்காட வைக்கும். உங்களை தேடி வரும் பணத்தை எண்ணி வைக்க இடம் தேடுவீர்கள். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சித்திரை முதல் உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனைகள் உங்கள் வாழ்க்கையில் நிகழப்போகிறது.












Click it and Unblock the Notifications