குரு பெயர்ச்சி பலன் 2024: அசுர குரு வீட்டில் தேவ குரு பயணம்.. குரோதி ஆண்டில் யாருக்கு ஜாக்பாட்
சென்னை: குரோதி ஆண்டில் சித்திரை மாதம் முதல் அசுர குரு சுக்கிரன் வீட்டில் பயணம் செய்யப்போகும் குருபகவானின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு யோகமும் அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பார்வை யாருக்கு: குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அசுர குரு சுக்கிரன் வீடான ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார் குரு பகவான். ரிஷப ராசியில் பயணம் செய்யப்போகும் குருபகவானின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் பண வரவும் கோடீஸ்வர யோகமும் யாருக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கோடீஸ்வர யோகம்: குரு அமர்ந்த இடத்தை விட குரு பார்க்கும் இடங்கள்தான் அதிக பலன் கிடைக்கும். மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குருபகவானின் பார்வை கன்னி, விருச்சிகம்,மகரம் ராசிகளின் மீது விழுகிறது. தனது ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும், சம சப்தம பார்வையாக ஏழாம் வீடான விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரம் ராசியையும் பார்வையிடுகிறார் குருபகவான்.
மேஷம்: ஜென்ம குருவாக பயணித்த குருபகவான் மே மாதம் இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி குடும்ப குருவாக பயணம் செய்யப்போகிறார். இதுநாள் வரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். ராகுவின் பயணமும் சாதகமாக உள்ளதால் பல வழிகளில் இருந்தும் பணம் வரும். ஆடை ஆபரணங்கள் பொன்நகை சேர்க்கை அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறு,எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்களுக்கு இது மகிழ்ச்சியான குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது.
கடகம்: தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்துள்ள குருபகவான் மே மாதம் முதல் லாப ஸ்தானத்திற்கு வந்து அமரப்போகிறார். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனக்குழப்பங்கள் நீங்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுவதால் முயற்சிகள் பலிதமாகும். திருமண சுபகாரியம் கைகூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
கன்னி: உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருபகவான் மே மாதம் முதல் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குருபகவான் அமர்ந்த இடம் அற்புதமான இடம். அதே போல குருபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன உளைச்சலில் இருந்து மீள்வீர்கள். கழுத்தை நெரித்த கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். பெரிய அளவில் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரப்போகிறது.
விருச்சிகம்: அர்த்தாஷ்டம சனி ஆட்டிப்படைக்கிறதே என்று கவலையோடு இருந்த உங்களுக்கு சந்தோஷமும் மன நிம்மதியும் கிடைக்கப்போகிறது. மே மாதம் முதல் ஏழாம் வீட்டிற்கு வந்து அமரப்போகும் குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாக கிடைப்பதால் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. ராகு கேதுவின் பயணமும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. யாருக்கோ கொடுத்து ஏமாந்து போன பணம் வீடு தேடி வரும். குருவின் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் 3ஆம் வீடான முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, மே மாதம் முதல் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவான் பயணம் செய்கிறார். பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். சுப காரியங்கள் நடைபெறும். உங்கள் ராசியின் மீது குருபகவானின் பார்வை விழுகிறது. குருவின் பார்வையால் கடந்த சில ஆண்டுகாலமாக பட்ட கட்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது. ஏழரை சனியால் பட்ட கஷ்டமும் நீங்கப்போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீது விழுகிறது நன்மை தரும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications