கருங்கூந்தல் அழகு..இளமையிலேயே வழுக்கையா? இளநரை நீங்க எளிமையான ஜோதிட பரிகாரம் இருக்கு
சென்னை: ஆணோ, பெண்ணோ அழகான கருமையான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிலருக்கு இளமையிலேயே முடி நரைக்கும். சிலருக்கு இளமையிலேயே முடி உதிர்ந்து வழுக்கை தலையாக காட்சி அளிக்கும். தலைக்கு முடி என்பது மிகவும் முக்கியமானதாகும். தலை நிறைய முடி இருந்தால் மட்டுமே முகத்திற்கும் அழகு உண்டாகும். தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு ஜோதிட ரீதியான காரணங்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.
தலை முடி நீளமாக அழகாக உள்ள பெண்களை எல்லா ஆண்களும் விரும்புவார்கள். தற்போது நிறைய முடி வளர்த்து குடுமி போட்டுக் கொள்ளும் ஆண்களும் உள்ளார்கள். தலைவாரி பூச்சூட்டிக் கொள்வது என்பது பெண்களுக்கே தனி அழகு தான். பெண்களுக்கு முடி கொட்டும் என்றாலும் வழுக்கை என்பது அவ்வளவாக ஏற்படாது. ஆனால் முடி கொட்டி வழுக்கையால் ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அழகான கருமையான முடி வளர வேண்டும் எனில் பிறந்த ஜாதகத்தில் லக்னமும் சுக்கிரனும் பலமாக இருக்கவேண்டும். சாதாரணமாக முடிக்கு காரகன் கேது என்றாலும் அழகிய கருமையான கூந்தலுக்கு காரகன் சுக்கிரன். சுக்கிரன், சந்திரன் இருவரும் முக அழகிற்கு முக்கியமானவர்கள். குறிப்பாக இவற்றிற்கு ஜென்ம லக்னம் முக்கிய பங்கு வகிக்கிறது. இலக்னம் பலமாக இருந்தால் நல்ல உடலமைப்பு, முக அழகு, அழகான தலை முடி வளரும்.
லக்னம் மற்றும் லக்னாதிபதியின் பலமும் முடிவளர்ச்சியை தீர்மானிக்கின்றன. பிறந்த ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றாலும் நீச்சம் பெற்றாலும் சூரிய சுக்கிர சேர்க்கை நெருங்கிய பாகையில் ஏற்பட்டாலும் முடி கொட்டுகிறது. சூரியன்-குரு-செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டாலும் முடி கொட்டும். ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தாலும் முடி கொட்டுவதோடு வழுக்கையும் ஏற்படும்.
அதிக முடியை கொண்டவன் எனும் பொருளுடைய கேசவ பெருமாளை வணங்குவது முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும். கேச என்னும் சொல் அதர்வண வேத காலத்திலிருந்து பயன்படுத்தப்படுகிறது. அநேகமாக கேசம் என்றால் என்ன என்பது எல்லா இந்தியருக்கும் தெரியும். முடி வளர் தைலங்கள் அனைத்தும் 'கேச' என்ற பெயருடனேயே துவங்கும். நீண்ட முடி வளர்த்தால் பெண்போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அடர்த்தியான முடிக்கான பிரார்த்தனை அதர்வண வேதத்தில் உள்ளது.

தினசரி காலையில் குளித்து விட்டு ஆதித்ய ஹிருதயம் கூறி சூரிய நமஸ்காரம் செய்வதோடு தாமிர பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து பச்சை மரத்திற்கு ஊற்றலாம். இதன் மூலம் உடல் சூட்டினால் முடி உதிர்வது தடுக்கப்படும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனை வணங்க மறக்காதீர்கள். அழகான கூந்தலை தருபவரே சுக்கிரன்தானே.
கேது ஸ்வரூபமான வராக மூர்த்தியை வணங்குவதும் முடிவளர்ச்சியை அதிகரிக்கும். ரத்தம், இரும்புச்சத்து ஆகியவற்றின் காரகனான செவ்வாய் பகவானை வணங்குவது முடிவளர்ச்சியை அதிகரிக்கும். கருமையான கூந்தலுக்கு சனீஸ்வர பகவானை வணங்கலாம் சனிக்கிழமைகளில் அவர் காரகம் பெற்ற நல்லெண்ணை தேய்த்து குளிக்கலாம். செம்பருத்யாதி தைலம், மருதானி தைலம், பொண்ணாங்கன்னி தைலம், கரிசலாங்கண்ணி தைலம் போன்றவற்றை கூந்தலில் உபயோகிப்பது நல்ல பயனளிக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications