காரைக்கால் மாங்கனி திருவிழா: எளிமையாக நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காரைக்கால்: கொரோனா நோய் தொற்று காரணமாக ஆலயங்களில் பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் காரைக்காலில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது.
சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார்.
ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது. இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும்.
காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்மையார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பின்றி ஜூலை 2ஆம் தேதி எளிமையான முறையில் நடைபெற்றது.

திருக்கல்யாணம் சிறப்பு
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றும் இந்த விழா இந்த ஆண்டு மிக எளிமையான முறையில் கோவிலுக்குள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதன்கிழமை மாலை மாப்பிளை அழைப்புடன் விழா தொடங்கியது. வியாழக்கிழமை காலை பரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்றைழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யம்
காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டத்தில்தான் ஆண்டுதோறும் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆண்டு கைலாசநாதர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. திருமண வைபவம் தொடங்கியதும் மகா மண்டபத்திற்கு புனிதவதியார் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
சிவாச்சாரியார்கள் திருமங்கல்யத்தை எடுத்து அம்மையாருக்கும் பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர். எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடியிருந்த அனைவரும் அட்சதை தூவி காரைக்கால் அம்மையாரை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. 16 வகையான சோட உபசாரங்கள் செய்யப்பட்டன.

மாங்கனி இறைத்தல் வைபவம்
இன்று மாலை பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. நாளைய தினம் காலை 11.30 மணிக்கு பிச்சாண்டவர் கோவிலின் உட்பிரகாரத்தில் மாங்கனி இறைத்தல் வைபவம் நடைபெகிறது. மதியம் 12.15 மணிக்கு காரைக்கால் அம்மையார் மாங்கனியுடன் சிவ பெருமானுக்கு அமுது படைத்தல் வைபவம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பரமதத்தருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறும்.

யு டுயூப்பில் லைவ் மாங்கனித் திருவிழா
வழக்கம் போல பிச்சாண்டவர் நகர்வலம் வரும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாங்கனியை இறைத்து வேண்டிக்கொள்வார்கள். பக்தர்கள் இறைக்கும் மாங்கனியை பிடித்து பிரசாதமாக சாப்பிடுவார்கள். இதன் மூலம் பக்தர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு கொரேனா வைரஸ் தொற்று காரணமாக மாங்கனி திருவிழா கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறுகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications