களவு போன பொருளை திரும்ப மீட்டு தரும் கடவுள் ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர்

களவு போன பொருட்களை மீட்டுத்தரும் கண் கண்ட கடவுளாக திகழ்கிறார் ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனரை வணங்கி விட்டு, அவருக்கு உண்டான ஹோமத்தை சிரத்தையோடு செய்தால், காணாமல் போன பொருட்கள், இழந்த சொத்துக்கள், கிடைக்காமல் போன நியாயங்கள் மீண்டும் கிடைக்கும் என்று வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் நிறுவனர் ஸ்ரீமுரளிதர சுவாமிகள் கூறியுள்ளார்.

எல்லாரது வாழ்விலும் பொருட்கள் திருடு போவதில்லை. ஜோதிடப்படி ஒரு சிலரது ஜாதகத்தில் 6 ஆம் வீட்டிற்குரியவர் லக்னத்துக்கு 8-ல் இருந்தால் அந்த ஜாதகரின் பொருட்களை அந்த தசா புக்தி, அந்தரம் வரும்போது மற்றவர்கள் திருடிக் கொள்வார்கள். திருட்டு போனவுடன் காவல் துறையில் புகார் செய்கிறோம்.

சில நேரங்களில் அவர்களால் கண்டுபிடித்துத் தர தாமதமாகும். திருட்டு சம்பந்தமாக புகார் கொடுக்கும் அதே நேரத்தில், மற்றவர்கள் பொருளை அபகரித்து வைத்துள்ளவர்களைக் கண்டித்து தண்டித்து, திருடிய பொருளைத் திரும்பக் கொடுக்கச் செய்யும் தெய்வத்திடமும் கோரிக்கை வைக்க வேண்டும்.

வீட்டுக்கு அருகே வெளியிடத்தில் ஒரு சனிக்கிழமை ஒன்பது சூடத்தை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து ஏற்றி, தெற்குப் பக்கமாக சூடத்தைப் பார்த்து நின்று, எமதர்மராஜாவை நினைத்து கோரிக்கையைச் சொல்ல வேண்டும். இதேபோல ஒன்பது சனிக் கிழமைகள் செய்ய வேண்டும். இதே போல இழந்த பொருளை மீட்டுத்தரும் தெய்வமாக கார்த்தவீர்யார்ஜுனர் திகழ்கிறார்.

க்ருதா யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார். இவர் முதலில் ஸ்ரீ அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார். ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும் அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரின் சீடராவர்.

க்ஷத்ரிய மாமன்னர்

க்ஷத்ரிய மாமன்னர்

ஸஹஸ்ரார்ஜூனர் , ஆயிரம் கையுடையான், கார்த்தவீர்யார்ஜுனர் என்ற பல்வேறு பெயர்களில் பக்தர்களால் அழைக்கப்படுபவர் மகா விஷ்ணுவின் சுதர்சன பகவானின் மறு அவதாரமாக போற்றி வழிபடுகின்றனர்.

கத்ரி சமுதாய குலாதிபதியுமானவரும், மனித க்ஷத்திரியனாகிய கார்த்தவீர்யர்ஜுனரே க்ஷத்ரிய மாமன்னராவார். இவரை ஆயிரம் கையுடையான் என்றும் ராஜ ராஜேஸ்வரன் என்றும் பரசுராமரிடம் போரிட்டு தோல்வி கண்டவர், மகாராஜா என்றும் போற்றி வழிபடுகின்றனர்.

16 விதமான ஆயுதங்கள்

16 விதமான ஆயுதங்கள்

ஆத்ரேய கோத்திரகாரர்களின் குல தெய்வமாக விளங்குகின்றவரும், ஸ்ரீ தத்தாத்ரேயரின் நம்பிக்கையுடைய சீடருமான ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர்க்கு இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு பச்சைகல்லில் 4அடி உயரத்தில் நின்ற கோலத்தில் இழந்த பொருட்களை மீட்டுக் கொடுக்கும் இறைவனாக 16 விதமான செல்வங்களை போற்றும் விதத்தில் 16 திருக்கரங்களைக் கொண்டு 16 விதமான ஆயுதங்களுடன் சுதர்சன சக்கரங்களுடன் காலில் பாதரக்ஷை கொண்டு பார்த்தசாரதி பெருமாள் போன்று மீசையுடன், கதையுடன், சங்கு சக்கரத் தாரியாக கார்த்தவிர்யார்ஜூனர் யந்திரத்துடன் 16 செல்வங்களும் நாம் பெறும் விதத்தில் காட்சித்தருகிறார்.

கடன் தொல்லை நீங்கும்

கடன் தொல்லை நீங்கும்

கார்த்தவீர்யார்ஜுனரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும். இவரை வழிபட்டு, இவருடைய பூஜை மற்றும் ஹோமங்களில் கலந்துகொண்டால் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைப்பர், இழந்த செல்வ நிலையைத் திரும்பப் பெறலாம், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், அடகு வைத்த நிலம், நகையை விரைவில் மீட்டலாம், கடன் தீரும், பதினாறு வகையான செல்வங்களை பெற்று வாழ்வில் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இழந்த செல்வம் கிடைக்கும்

இழந்த செல்வம் கிடைக்கும்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 11.02.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஏகாதசி திதியை முன்னிட்டு உலக நலன் கருதி நீண்ட ஆயுள் பெறவும், இழந்த பொருள்களை திரும்ப பெறவும், தடைபட்ட காரியங்களில் வெற்றி பெறவும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம் நடைபெற்று அதனை தொடர்ந்து பால், தயிர், கரும்புச்சாரு போன்ற 16 விதமான பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் கார்த்தவீர்யார்ஜுனர்க்கு உரிய மலர்களை கொண்டு அஷ்டோத்தர நாமாவளி நடைபெற்று கார்த்தவீர்யார்ஜுன இரக்ஷையுடன் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

திரும்ப வரும் பொருட்கள்

திரும்ப வரும் பொருட்கள்

பொதுவாக ஹோமங்கள் என்பது இழந்த ஒன்றைத் திரும்பப் பெறுவதற்கும், முறையாக வர வேண்டியதை மீண்டும் பெறுவதற்கும் மற்றும் திருமணம், குழந்தைப்பேறு, உத்தியோக வாய்ப்பு, மன மகிழ்ச்சி, குடும்ப க்ஷேமம், குழந்தைகளின் கல்வி, போன்ற பல காரணங்களை முன்னிலைப்படுத்திச் செய்யப்படுகின்றன. திருடு போன பொருளை மீட்கவும் ஹோமங்கள் செய்யலாம்.

நிச்சயம் கிடைக்கும்

நிச்சயம் கிடைக்கும்

எல்லாவற்றுக்கும் மனம் ஒன்ற வேண்டும். மருத்துவரிடம் போனால் அவர் தருகிற மருந்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். குருவிடம் போனால் அவர் சொல்லித் தருகிற மந்திரத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதுபோல் ஒரு ஹோமம் செய்கிறீர்கள் என்றால், முதலில் நம்பிக்கை வேண்டும். இந்த ஹோமத்தை செய்தால், நிச்சயம் நாம் வேண்டுவது கிடைக்கும் என்கிற உறுதி வேண்டும் என்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். மேலும் விபரங்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,வாலாஜாபேட்டை.

தொலைபேசி : 04172-230033 / 09443330203.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+