மார்கழியில் சூழ் கொண்ட மேகம்.... ஐப்பசியில் மழையாய் பெய்யும் - கர்போட்ட ஆரம்பம் கணிப்பு
மார்கழி மாதத்தில் கர்ப்போட்ட நாட்களில் மேகம் முறையாக சூல் கொண்டால், ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி, கார்த்திகையில் மழைப்பொழிவு அளவும் முறையாக இருக்கும்.
மதுரை: மார்கழியில் சூழ் கொண்ட மேகம் என்ற தலைப்பை பார்த்த உடனே ஆச்சரியப்படுகிறீர்களா? தினசரி காலண்டர் கிழிப்பவர்களுக்கு 'கர்ப்போட்ட ஆரம்பம்' என்று குறித்திருப்பார்கள். கரு ஓட்டம் என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி காலப்போக்கில் கர்ப்போட்டம் என்று ஆகி விட்டது. தனூர் மாதம் எனப் படும் மார்கழியில், சூரியன் தனுர் ராசி மண்டலத்தைக் கடக்கும் போது பூராட நட்சத்திரத்தை கடக்க 14 நாட்களை எடுத்து கொள்கிறது. இந்த நாட்களில் கரு மேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை காணலாம். இந்த 14 நாட்களும் கர்போட்ட நாட்கள் ஆகும். அதாவது மழை கரு கொள்ளும் நாள் மேகம் சூலாகும் நாள்.
இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால், ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி, கார்த்திகையில் மழைப்பொழிவு அளவும் முறையாக இருக்கும். மாறாக கர்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக் காற்று வீசினாலோ, கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கரு கலைந்து விட்டது என்று பொருள்.

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்றப்படுகின்றன. சித்திரையில் சூரியன் மேஷ ராசியில் தனது சஞ்சாரத்தை தொடங்குவார். வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர். அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனுர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது. இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்.
இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது. இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும் அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள் இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்
அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால் ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக சரியாக இருக்கும்.
ஒரு எளிய விவசாயிக்கு தனுர் மாதம் பூராடம் நட்சத்திரம் எல்லாம் தெரியாது எனவேதான் மார்கழி மாதம் அமாவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் பவுர்ணமிக்கு முதல்நாள் வரை "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள். இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள். அதைப்பார்த்து சந்தோஷப்படுவார்கள் விவசாயிகள்.
எனவே அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்
மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள் எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்
இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் பல பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications