• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரு கோடி குபேர ஜப யக்ஞம்

|

வேலூர்: ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெறுகிறது.

14.11.2018 புதன்கிழமை தொடங்கிய இந்த யாகம் வருகிற 25.11.2018 ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது. இந்த யாகத்துடன் 22.11.2018 வியாழக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகமும், 23.11.2018 வெள்ளிக்கிழமை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு ஸ்கந்த ஹோமமும் நடைபெறுகிறது.

குபேரன் என்றாலே நமக்கு நினைவில் வருவது தங்கமும், வைடூரியமும், பொற்காசுகளும் நிறைந்த திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்த கடவுள் என்பதே. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது நம்பிக்கை. குபேர யந்திரம், குபேர யாகம் போன்றவை நம்மை செல்வத்தின் அதிபதியாக்கும் என நம்பப்படுகிறது.

லட்சுமி குபேரர் திருக்கோவில்

லட்சுமி குபேரர் திருக்கோவில்

ஆரோக்ய ஐஸ்வர்ய பீடமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் செல்வத்திற்காக ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரையும், குபேர சம்பத்திற்காக ஸ்ரீ லட்சுமி குபேரரையும் பிரதிஷ்டை செய்து சீரான செல்வம் நமக்கு வந்தடையவும், இழந்த செல்வத்தை மீட்கவும் தினசரி பூஜைகளும் யாகங்களும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க செல்லும் அனைத்து பக்தர்களும், திருப்பதி செல்லும் முன் வாலாஜாபேட்டை - திருப்பதி மார்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற லட்சுமி குபேரரை நீங்கள் வழிபட்டு திருப்பதி செல்வது மிகவும் மேலான பலன்களை தரும்.

வாஸ்து சாந்தி ஹோமம்

வாஸ்து சாந்தி ஹோமம்

24.11.2018 சனிக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமமும், 25.11.2018 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு நவக்கிரக ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமத்துடன் கோடி ஜப குபேர யக்ஞம் நிறைவு பெறுகிறது.

செல்வம் பெருகும் யாகங்கள்

செல்வம் பெருகும் யாகங்கள்

இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் ,முன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆன்ந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது.

பணவரவு அதிகரிக்கும்

பணவரவு அதிகரிக்கும்

இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.

ஒரு கோடி தாமரை விதைகள்

ஒரு கோடி தாமரை விதைகள்

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோமங்கள் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும்.

குடும்பத்துடன் பங்கேற்கலாம்

குடும்பத்துடன் பங்கேற்கலாம்

இந்த யாகம் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இந்த யாகங்களில் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ குபேர லக்ஷ்மி அருள் பெறலாம். இன்று வரை இந்த யாகத்தில் முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆர்.நந்தகோபால் ஐஏஎஸ் அவர்கள், இந்து முன்னணி திருநெல்வேலி மாவட்டசெயலாளர் திரு. எம்.பால்மாரியப்பன் அவர்கள், திரு. சோளிங்கர் பிரகாஷ் அவர்கள், ஸ்ரீராம் பட்டாசாரி, தென் இந்திய புரோகித சங்க தலைவர் வி.ஆர்.சீதாராமன் மற்றும் நிர்வாகிகள், ராணிப்பேட்டை விக்னேஷ் மோட்டார் உரிமையாளர், வாலாஜாபேட்டை முரளி, முன்னாள் தலைவர் நித்தியானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 
 
 
English summary
Lakshmi Kubera yagam this Fire Lab is targeted to bless you with luxuries,financial growth and success. According to the scriptures invoking the Goddess of Wealth and Banker of Heaven through the sacred fire ritual can bestow the following blessings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more