புத்தாண்டு பலன் 2025: திடீர் பணவரவு, ராஜயோகத்தால் திணறப்போகும் கன்னி ராசி.. இனி ஏறுமுகம்தான்

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு 2025: தன்னம்பிக்கை, தைரியம், நேர்மையை கொண்ட கன்னி ராசிக்காரர்களே வரும் 2025 புத்தாண்டு என்ன விதமான நற்பலன்களை தரப் போகிறது, எந்த விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (New year rasi palan for kanni)

யாருக்காகவும், எதற்காகவும் பயப்படாத கன்னி ராசிக்காரர்களே. மடியில் கனம் இல்லை. வழியில் பயமில்லை. நான் நேர்மையாக இருப்பதால் தப்பை சுட்டிக் காட்டுகிறேன் என்று நேர்மையாகவும், தைரியமாகவும் இருப்பீர்கள். உண்மையை உரக்கச் சொல்பவர்களாகவும், அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பீர்கள்.

new year rasi palan astrology


2025 ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு அமோகமாக ஆண்டாக இருக்கும். யோகாதிபதி சுக்கிரனுடைய நட்சத்திரத்தில் தான் இந்த ஆண்டு உங்களுக்குப் பிறந்திருக்கிறது. நான்காவது வீட்டில் சந்திரன் இருக்கும்போதும், ஒன்பதாம் வீட்டில் குரு உட்கார்ந்திருக்கும் போதுதான் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனால், திடீர் வருமானம் பெருகும். திடீர் ராஜயோகங்கள் உண்டாகும். (Puthandu rasi palan)

வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு, கார் போன்ற சொத்துகளை வாங்குவீர்கள். சொந்த தொழிலை தொடங்கும் யோகங்கள் உண்டாகும். குரு பகவானின் அனுக்கிரகம் கூடிக் கொண்டே போவதால் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கும். மகளுக்கு திருமண வரன்கள் வரும் வாய்ப்பு உருவாகும். மகனுக்கு இருந்து வந்த பொறுப்பற்ற போக்கு சற்று மாறும். (2025 eppadi irukum)

உங்களுடைய ராசிநாதன் புதன் மூன்றாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி காண்பீர்கள். வெற்றி பெறுவதற்கான புது வழியைக் கண்டறிந்து அதனை செயல்படுத்துவீர்கள். அதேபோல, குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் தீரும். உங்கள் ராசியில் கேது அமர்ந்திருப்பதால் பெரிய நோய்கள் நமக்கு இருக்குமோ என்று குழப்பமடைவீர்கள்.

இந்த ஆண்டில் உங்களுடைய ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். குறிப்பாக, மே 18 ஆம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு கேது விலகுவதால் அழகு, ஆரோக்கியம் அதிகரிக்கத் தொடங்கும். சுறுசுறுப்பாக இருந்து வேலைகளை முடிப்பீர்கள். மே 18 முதல் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த ஈகோ சரியாகி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

அதேநேரத்தில், சனி பகவான் தற்போது சாதமாக இருப்க்கிறார். சனிப்பெயர்ச்சியின்போது சனி இடம் மாறும்போது உங்களுக்கு கோபங்கள் வர ஆரம்பிக்கும். அந்த கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. நட்பு வட்டாரம் பெரியதாகும். புதிய நண்பர்கள் கிடைக்க ஆரம்பிப்பார்கள். வியாபாரத்தைப் பொருத்தவரை நல்ல லாபம் கிடைக்கும்.

மே 14 ஆம் தேதி முதல் குரு பகவான் பத்தாவது வீட்டில் உட்காருவதால் உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது. விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 2025 ஆம் ஆண்டு எல்லா வகையிலும் முன்னேறுவதற்கு, மறக்காமல் ஸ்ரீ விநாயகப் பெருமானை தரிசனம் செய்வது நல்லது. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்வது நல்ல பலனைத் தரும். துவரம் பருப்பு தானமாகத் தருவது அனுகூலத்தை உண்டாக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+