Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சகல நன்மைகளை அருளும் சப்தவிடங்கத் தலங்கள் - சிவனை தரிசிக்க இடர்கள் நீங்கும்

சிவ பெருமானின் வடிவத்தைத் தாங்கிய விடங்கர் எனப்படும் சப்தவிடங்கர் தலங்கள் என புகழ்பெற்ற ஏழு கோயில்கள் திருவாரூரைச் சுற்றிலும் உள்ளன.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: சிவ பெருமானின் வடிவத்தைத் தாங்கிய விடங்கர் எனப்படும் சப்தவிடங்கர் தலங்கள் என புகழ்பெற்ற ஏழு கோயில்கள் திருவாரூரைச் சுற்றிலும் உள்ளன. சப்தவிடங்கர் தலங்களில் உள்ள மூர்த்தங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. அவையனைத்தும் தேவர்களின் தலைவனான இந்திரனால் உருவாக்கப்பட்டு, முசுகுந்த சக்கரவர்த்திக்கு பரிசாக அளிக்கப்பட்டு, இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

சமஸ்கிருதத்தில் சப்த என்றால் தமிழில் ஏழு என அர்த்தமாகும். விடங்கம் என்பதற்கு உளியால் செதுக்கப்படாதது என்று பொருளாகும். எனவே, உளியால் செதுக்காமல் சுயம்புவாகத் தோன்றிய மூலவரை உடைய ஏழு திருத்தலங்கள் இந்த சப்த விடங்கத் தலங்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் வடகரை, தென்கரையில் ஏராளமான சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும், அம்மன், விநாயகர், முருகன் ஆலயங்களும் உள்ளன. பரிகார ஸ்தலங்களான நவக்கிரக கோவில்களும் உள்ளன. அது போலவே, சிவ பெருமானின் வடிவத்தைத் தாங்கிய விடங்கர் எனப்படும் சப்தவிடங்கர் தலங்கள் என புகழ்பெற்ற ஏழு கோயில்கள் திருவாரூரைச் சுற்றிலும் உள்ளன. இந்தக் கோயில்களுக்கெல்லாம் பக்தர்கள் சென்று வந்தாலும் அங்குள்ள மூலவரைப் பற்றிய புராண வரலாறு தெரிந்திருப்பதில்லை.

 இந்திரன் பரிசளித்த விடங்கர்

இந்திரன் பரிசளித்த விடங்கர்

பெரும்பாலான சிவாலயங்களில் எல்லாம், மூலவர் சிலையானது ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்களாலும், மனிதர்களாலும், உருவாக்கப்பட்டு காலம் காலமாக வழிபட்டு வரப்படும். சில கோயில்களில் உள்ள மூலவர்கள் சுயம்பு மூர்த்தியாக தானான உருவான மூர்த்தங்களாக இருக்கும். ஆனால் சப்தவிடங்கர் தலங்களில் உள்ள மூர்த்தங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. அவையனைத்தும் தேவர்களின் தலைவனான இந்திரனால் உருவாக்கப்பட்டு, முசுகுந்த சக்கரவர்த்திக்கு பரிசாக அளிக்கப்பட்டு, இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். விடங்கர் என்பது உளியால் செதுக்கப்படாதது என்பதாகும்.

முசுகுந்த சக்கரவர்த்தி

முசுகுந்த சக்கரவர்த்தி

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் தேவர்களுக்கு உதவி செய்யச் சென்றார் முசுகுந்தச் சக்கரவர்த்தி. போரில் தான் வெற்றி பெற உதவி செய்த முகுந்தச் சக்கரவர்த்திக்கு பிரதி பலனாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் தேவர்களின் தலைவனான இந்திரன். தனது எண்ணத்தை அவரிடம் சொல்ல, அதற்கு முசுகுந்த சக்கரவர்த்தியோ, இந்திரன் அனுதினமும் பூஜிக்கும் சிவபெருமானின் விடங்க மூர்த்தத்தை கேட்கிறார்.

 ஏழு தலங்களில் சிவபெருமான்

ஏழு தலங்களில் சிவபெருமான்

முசுகுந்த சக்கரவர்த்தியின் வேண்டுகோளைக் கேட்ட இந்திரன், தான் வழிபடும் விடங்க மூர்த்தத்தை கேட்கிறாரே, அதை எப்படித் தருவது என்று யோசித்த இந்திரன், தான் பூஜிக்கும் விடங்கரைப் போலவே ஆறு மூர்த்தங்களை உருவாக்கி, ஏழு மூர்த்தங்களையும் முசுகுந்த சக்கரவர்த்தியிடம் காட்டி, தான் பூஜிக்கும் விடங்க மூர்த்தத்தை கண்டுபிடிக்குமாறு சொல்ல, அவரோ மனதில் சிவபெருமானை தியானித்து வேண்ட, சிவபெருமானின் அருளால் உண்மையான விடங்கரை எடுக்க, இந்திரனும் மனம் மாறி ஏழு விடங்கரையும் முசுகுந்த சக்கரவர்த்திக்கே வழங்கினார். அந்த ஏழு விடங்கரையும் திருவாரூர் உள்ளிட்ட ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அந்த எழு தலங்களே சப்த விடங்கர் தலங்களாகும்.

திருவாரூர் - வீதி விடங்கர்

திருவாரூர் - வீதி விடங்கர்

பஞ்சபூத தலங்களில் பிருத்வி தலமான இங்கு தான் புகழ்பெற்ற ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள அம்மனின் பெயர் ஸ்ரீகமலாம்பிகை. சிவபெருமான் இங்கு அஜபா நடனம் ஆடிக்கொண்டு வீதி விடங்கராகக் காட்சியளிக்கின்றார். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல, திருமண வரம் பெற, வேலை கிடைக்க, தொழில் விருத்தியாக, குழந்தை வரம் வேண்டி என பக்தர்கள் இங்கு வந்து வழிபடலாம்.

 திருநள்ளாறு - நகர விடங்கர்

திருநள்ளாறு - நகர விடங்கர்

நாகை மாவட்டம் நாகபட்டினத்தில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில், திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயில். நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சனி தோஷம் நீங்கப் பரிகாரம் செய்யும் புகழ்பெற்ற சனிபகவான் சந்நிதி இருப்பது அனைவருக்கும் தெரியும். இங்குள்ள அம்மனின் பெயர் ஸ்ரீபோகமார்த்த பூமுலையாள். எம்பெருமான் நகர விடங்கராக உன்மத்த நடனக் கோலத்தில் இத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சனீஸ்வர பகவானால் ஜாதகத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கவும், பரிகாரத்தலமாக இது விளங்குகிறது. இங்குள்ள வாணி தீர்த்தத்தில் நீராட கவி பாடும் திறன் வரும் என்பது நம்பிக்கை.

நாகபட்டினம் - சுந்தர விடங்கர்

நாகபட்டினம் - சுந்தர விடங்கர்

திருவாரூரில் இருந்து சுமார் 32 கி.மீ தூரத்தில் நாகை மாவட்ட தலைநகரான நாகபட்டினத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். இவ்வூரின் மற்றொரு பெயர் திருநாகைக்காரோணம் என்று புராணங்களில் புகழப்படுகிறது. இங்குள்ள ஆலயம் தான் ஸ்ரீகாயாரோகணர் ஆலயம். இங்கு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் ஸ்ரீநீலாயதாட்சி. இங்கு எம்பெருமான் வீதி நடனத்தில் சுந்தர விடங்கராக காட்சியளிக்கிறார். இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, செய்த பாவத்துக்கு மன்னிப்பு பெறவும், முக்தி பெறவும் பக்தர்கள் பிரார்த்தித்துக்கொள்கின்றனர்.

திருக்காரவாசல் - ஆதி விடங்கர்

திருக்காரவாசல் - ஆதி விடங்கர்

திருவாரூர் நகரில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது திருக்காரவாசல் எனப்படும் திருக்காறாயில். இங்கு வீற்றிருக்கும் இறைவனின் பெயர் ஸ்ரீகண்ணாயிர நாதர், அம்மனின் பெயர் ஸ்ரீகைலாசநாயகி. இங்கே எம்பெருமான் குக்குட நடன நாயகராக ஆதி விடங்கர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். (குக்குடம் என்பது சேவலின் நடை போன்றது என்று பொருள்). இந்த இறைவனை, மகாவிஷ்ணு, மகாலட்சுமி, இந்திரன், கபால முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் தரிசனம் செய்து பேறு பெற்றுள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி பகவான், 'ஞான தட்சிணாமூர்த்தி'யாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சொர்ணாகர்ஷண கால பைரவர் சன்னிதி உள்ளது. இந்த பைரவரை வழிபாடு செய்தால், இழந்த பொருட்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

 திருக்குவளை - அவனி விடங்கர்

திருக்குவளை - அவனி விடங்கர்

திருக்காரவாசல் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது திருக்குவளை என்னும் திருக்கோளிலி திருத்தலம். படைப்பு கடவுளான பிரம்மன் இங்கு வந்து வழிபட்டு அருள் பெற்ற புண்ணியத் தலமாகும். அதனால் இங்குள்ள மூலவரின் பெயர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், அம்மனின் பெயர் ஸ்ரீவண்டார் பூங்குழலி. இறைவன் இங்கு அவனி விடங்கராக, அதாவது பிரமர நடனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பிரமரம் என்றால் வண்டு பறப்பது போல நடனம் ஆடுதல். நவகிரக தோஷம் நீங்க இங்குள்ள இறைவனையும் இறைவியையும் வழிபடலாம்.

 திருவாய்மூர் - நீல விடங்கர்

திருவாய்மூர் - நீல விடங்கர்

திருக்குவளை நகரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது வாய்மூர் எனப்படும் திருவாய்மூர். இங்குள்ள கோயிலின் மூலவரின் பெயர் ஸ்ரீவாய்மூர்நாதர். இவருக்கு ஸ்ரீவேதாரண்யேஸ்வரர் என்னும் மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறார். அம்மனின் பெயர் ஸ்ரீபாலினும் நன்மொழியாள். பிரம்மன் மற்றும் தேவர்கள் முதலானோர் பூமிக்கு வந்து இங்குள்ள பாபமேக பிரசண்ட தீர்த்தத்தில் நீராடி, இத்தல இறைவனை தரிசித்து பாவங்கள் நீங்கப் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இத்தல இறைவன் நீலவிடங்கராக எழுந்தருளியுள்ளார். இத்தல இறைவனை வழிபடத் திருமணத் தடை நீங்கும் கல்வி மற்றும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

 திருமறைக்காடு - புவன விடங்கர்

திருமறைக்காடு - புவன விடங்கர்

திருவாய்மூர் ஊரிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் உள்ளது வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலம். திருஞானசம்பந்தரால் கோயில் கதவு மூடவும், திருநாவுக்கரசரால் கதவு திறக்கவும் பாடல் பெற்ற தேவரத்தலம் ஆகும். அதோடு நான்மறை எனப்படும் வேதங்கள் இங்கு வந்து சிவபூஜை செய்த தலமும் கூட. எம்பெருமானின் அருளால் வேதங்கள் இங்கு செடி, கொடிகளாக காட்சியளிப்பதால் வேதா-ரண்யம் என்று மருவியாக புராண வரலாறு கூறுகிறது. இங்குள்ள இறைவனின் பெயர் ஸ்ரீவேதாரண்யேஸ்வரர், அம்மனின் பெயர் ஸ்ரீயாழைப் பழித்த மொழியம்மை. இங்கே இறைவன், அன்னப்பறவை நடந்து வருவது போல், ஹம்சபாத நடனக் கோலத்தில் காட்சியளிக்கிறார். மன அமைதி, தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு ஆகியவை வேண்டி இங்குள்ள இறைவனை வழிபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+