மதுரை சித்திரை திருவிழா... சாமி, அம்மனுக்கு இந்த பூ மாலைகள் ஏற்றுக்கொள்ளப்படாது - கோவில் நிர்வாகம்
சித்திரை திருவிழா நாட்களில் சாமி அம்மனுக்கு கேந்திபூ, மருதை வேர்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படிக்கு ஏற்று கொள்ளப்படமாட்டாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை : சித்திரை திருவிழா நாட்களில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருக்கு மாலை சாத்தும் பக்தர்கள் இறைவனுக்கு உகந்த மாலைகள் சாத்துப்படி செய்யலாம் என்றும் கேந்திபூ, மருதை வேர்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படிக்கு ஏற்று கொள்ளப்படமாட்டாது என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 5 தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் மீனாட்சிசுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். நகரில் விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ள வேண்டும். மேலும் வேப்பிலைத் தோரணங்களையும், சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சமாக எட்டாம் நாள் 12ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அன்று மீனாட்சியம்மன் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். பத்தாம் நாள் திருவிழாவான 14ஆம் தேதி அன்று மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்
15ஆம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. நான்கு மாசி வீதிகளில் சுவாமிகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப் பார்கள். மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 16ஆம் தேதி நிறைவடையும் நிலையில், தொடர்ந்து அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சார்பில் 15ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நடக்கிறது. தொடர்ந்து 16ஆம் தேதி சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மாலைகள்
மேலும் சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வரும் நேரங்களில் பக்தர்களால் சுவாமிக்கு சாத்துப்படி செய்ய இறைவனுக்கு உகந்த மாலைகள் சாத்துப்படி செய்யலாம். ஆனால் கேந்திபூ, மருதை வேர்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படிக்கு ஏற்று கொள்ளப்படமாட்டாது. திருக்கல்யாண தினத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன், சுவாமிக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டு பரிவட்டங்கள் சாத்தப்படும்.

தங்கரம் உலா ரத்து
உபயதாரர் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை பரிவட்டங்கள் வாமாலையாக சூட்டப்படும். இந்த உற்சவம் தொடக்கம் முதல் அழகர்கோவில் கள்ளழகர் திருவிழா முடியும் 20ஆம் தேதி வரை கோவில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபயதிருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகிய சேவைகள் பதிவு செய்து நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் அன்னதானம்
திருவிழாவில் நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் இதர அனைத்து பொருட்களையும் கோவில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி உரிய ரசீது பெற்று கொள்ளலாம். இந்த பொருட்கள் தொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் தனிப்பட்ட நபர்கள் அணுகினால் கோவில் நிர்வாகத்திடமும், 0452-2349868, 2344360 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications