மன்மத ஆண்டு: மிதுனம் ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர் சுப்ரமணியன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மிதுனம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் பலன்களை பார்ப்போம். இரட்டை சிந்தனை உள்ள மிதுனம் ராசி அன்பர்களே உங்கள் காரியங்களை பூர்த்தி செய்து கொள்ள பலவகையான யோசனைகளையும், தந்திரங்களையும் கையாள்வதில் சாமர்த்தியம் உள்ளவர்களே, வார்த்தைகளால் பிறரிடத்தில் தன் மதிப்பை காட்டிக்கொள்பவர்களே கள்ளத்தனமும் போலி ஆடம்பரமின்றி நடந்து கொள்ளும் மிதுனம் ராசி அன்பர்களே.

சனிபகவானால் நன்மை
இந்த ஆண்டு முன்னேற்றத்துக்கு உறுதுனையாக நிற்கப் போகிறவர் சனிபகவான் தான். அவர் தற்போது விருச்சிகம் ராசியில் இருக்கிறார். பணப்புழக்கத்தையும், செயல்பாட்டில் வெற்றியையும் கொடுப்பார். எதிரிகளை இருக்கும் இடம் தெரியமல் பறந்தோடச்செய்வார். தொழிலில் கடந்த காலத்தில் இருந்த மந்த நிலை மாறி வளர்ச்சியான போக்கு தென்படும். மேலும் சனியின் பத்தாம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுப்பார்.

குருபகவானால் சிறப்பு
குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அது மிகவும் உகந்த சிறப்பான நிலை எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது ஆற்றல் மேம்படும். துணிச்சல் அதிகரிக்கும், பணவரவு கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சி நிறைவேறும் சமூக அக்கறை கொண்ட மனிதராக விளங்குவீர்கள். உங்களால் இயன்ற உதவியை பிறருக்கு செய்து மகிழ்வீர்கள். குரு ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு செல்கிறார். இந்த நேரத்தில் அவரால் நன்மை தர இயலாது. முயற்ச்சிகளில் தடை ஏற்படும். எதிர்பார்த்த உயர்வு இருக்காது. மனதில் அவ்வப்போது குழப்பம் உருவாகலாம். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படுவது நல்லது.

ராகுவினால் குழப்பம்
நிழல் கிரகமான ராகு தற்போது நான்காமிடமான கன்னியில் இருக்கிறார். இங்கு அவரால் நன்மை தர இயலாது. மனைவி மக்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை உருவாக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு வாக்குவாதம் போன்றவற்றின் மூலம் அமைதி குறையும். அதே சமயம் கேது பத்தாமிடமான இடமான மீனத்தில் தற்போது இருந்து வருகிறார். இதனால் உஷ்ணம் மற்றும் தோல் தொடர்பான உபாதையை தரலாம். மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி தேவைப்படும். ஒவ்வாத உணவுகளை அறவே தவிர்ப்பது அவசியம். வீட்டில் பொருட்கள் காணாமல் போகலாம். வீட்டில் பாதுகாப்பு தொடர்பான விசயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். அமாவாசை அன்று ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திக்கு வடைமாலை சாற்றி மலர்களால் அர்ஜித்து வர இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் கிட்டும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications