மார்ச் மாத ராசிபலன் 2022: அஷ்டமத்தில் 4 கிரகங்கள் கூட்டணியால் மிதுன ராசிக்காரர்கள் கவனம்
மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்னமாதிரியான பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: சூரியபகவான் கும்ப ராசியில் பாதி நாட்களும் மீன ராசியில் பாதி நாட்களும் பயணம் செய்கிறார். சனி, செவ்வாய், சுக்கிரன்,புதன் என கிரகங்கள் மகர ராசியில் இணைந்திருக்கின்றன. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிக ராசியிலும் பயணம் செய்கின்றன. கிரகங்களின் கூட்டணி பார்வையால் மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கும் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மார்ச் 6 புதன் பெயர்ச்சி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி. மார்ச் 24ஆம் தேதி மீன ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். 15ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
மழை காலமும் பனி காலமும் முடிந்து இன்னும் சில நாட்களில் வசந்த காலம் தொடங்கப்போகிறது. மாசி, பங்குனி இணைந்த மார்ச் மாதத்தில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும். பண வரவு வருமா? வேலையில் புரமோசன் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

மிதுனம் ராசிக்காரர்கள் வாக்கு வன்மை கொண்டவர்கள். மார்ச் மாதம் தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். மகிழ்ச்சியான மாதமாக அமைந்துள்ளது. எட்டாம் வீட்டில் 5 கிரகங்கள் கூடியுள்ளன. உங்கள் ராசிநாதன் புதனின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இந்த மாத இறுதியில் உங்கள் ராசிநாதன் நீச்சமடைகிறார். வாழ்க்கையில் சுகமும் சந்தோஷமும் நிறைந்த மாதம். ராசிநாதன் இந்த மாதம் 8,9,10ஆம் இடங்களில் பயணம் செய்கிறார்.
உங்களின் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. ராசி அதிபதி 8ஆம் வீட்டில் இருக்கிறார். செவ்வாய் சனி 8ஆம் வீட்டில் இருப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஐந்து கிரகங்களின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து நீங்கும்.
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பொருளாதார நெருக்கடிகள் வந்து நீங்கும். வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தொழில் முதலீடுகளில் அதிகம் பண முதலீடு செய்ய வேண்டாம். பொருளாதார ரீதியாக நல்ல உயர்வைத் தரும். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். சுக்கிரன் எட்டில் பயணிப்பதால் பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. அதே நேரத்தில் திடீர் யோகங்கள் தேடி வரும்.
வேலை செய்யும் இடத்தில் அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பேச்சைக்குறைத்து செயலை அதிகரிக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதிய படிப்பினை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 6ஆம் தேதிக்குப் பிறகு வேலை தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை வழிபாடு செய்வது அவசியம். மாசி அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications