மார்கழி மாத ராசி பலன்: குருவின் வீட்டில் சூரியன் கூட்டணி.. குரு பார்வையால் கோடீஸ்வர யோகம் யாருக்கு?
சென்னை: மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் பயணம் செய்வதால் தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் செவ்வாய் கூட்டணி சேரும் போது அந்த இரண்டு கிரகங்களுக்கும் குருவின் பார்வையும் கிடைக்கிறது. மார்கழியில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு யாருக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: சூரியன் செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் அரசு ஊழியர்களுக்கு பணியிடமாற்றம் உண்டாகும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு அரசாங்க விருது கிடைக்கலாம். வாக்கு வன்மை அதிகரிக்கும் கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். திருமணம் சுப காரியம் பேசி முடிக்கலாம். சுக்கிரன் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் பெண்களுக்கு பொன்நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

விருச்சிகம்: உங்கள் ராசியில் ராசிநாதன் செவ்வாய் உடன் பயணம் செய்த சூரிய பகவான் மார்கழி 1ஆம் தேதி முதல் குருவின் வீடான தனுசு ராசியில் பயணம் செய்யப்போகிறார். இரண்டாம் வீட்டில் கூட்டணி சேரப்போகும் சூரியன், செவ்வாயினால் வேலை செய்யும் இடத்தில் சம்பளம் அதிகரிக்கும் அப்பாவின் மூலம் பண வருமானம் வரும். அரசாங்க வேலை கிடைக்க யோகம் கை கூடி வரப்போகிறத. புதன் உங்கள் ஜென்ம ராசிக்கு வரப்போவதால் புத்தி கூர்மை அதிகரிக்கும் கலைகளில் நிபுணத்துவம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பொன்னகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும், பெண்கள் உற்சாகமாக இருப்பீர்கள். குல தெய்வ கோவிலுக்கு சென்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு: சூரியன் உங்களுடைய ஜென்ம ராசியில் செவ்வாயுடன் பயணம் செய்யப்போவதால் பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வீடு மாறும் நிலை உண்டாகும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். செலவுகள் கட்டுப்படும். ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது
குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு உண்டாகும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் பயணம் செய்வதால் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். குரு பகவானின் பார்வை குதூகலத்தை ஏற்படுத்தும்.
மகரம்: சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் பயணம் செய்வதால் வேலையில் இடமாற்றம் ஏற்படும். வேலைக்காக வெளியூர் செல்வீர்கள் செய்யும் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்ல யோகம் கைகூடி வரும். வீடு நிலம் விற்பனை மூலம் பண வருமானம் வரும். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் உண்டாகும். அதிகார பதவி யோகம் தேடி வரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் தேடி வரும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குடும்ப சனி காலமாக இருப்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
கும்பம்: சூரியன் செவ்வாய் உடன் இணைந்து பதினொன்றாமிடத்தில் லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். அதிகாரப் பதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் உண்டாகும். அரசாங்க ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றிகரமாக முடிவடையும். கோயில்களுக்காக அதிக செலவுகள் செய்வீர்கள். சிவ ஆலயங்களுக்கு மாலை நேரங்களில் சென்று தரிசனம் செய்ய நன்மைகள் நடைபெறும்.
மீனம்: சூரியன் உங்களுடைய ராசிக்கு பத்தாமிடத்தில் செவ்வாயுடன் பயணம் செய்வதால் பதவி யோகம் தேடி வரப்போகிறது. வியாபாரம் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அதிகாரப்பதவி கிடைக்கும். புதன் ஒன்பதாமிடத்தில் பயணம் செய்வதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் அன்ன தானத்திற்கு நிதி உதவி செய்வீர்கள். சுக்கிரன் எட்டாமிடத்தில் பயணம் செய்வதால் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும், மாத பிற்பகுதியில் பெண்களால் நன்மை உண்டாகும். வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்ய நன்மைகள் அதிகம் நடைபெறும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications