மாசி மாத ராசி பலன்கள் (13-02-2015 முதல் 14-03-2015 வரை)

Subscribe to Oneindia Tamil

முனிவர்களும், சித்தர் பெருமக்களும் கொண்டாடும் மாதம் மாசி மாதம். மகா சிவராத்திரி வைபோகத்திற்கு தயாராகும் தேவர்கள், முனிவர்கள் மற்றும் சிவகணங்கள் யாவரும், பூவுலகில் உள்ள சிவாலயங்களில் பிரசித்தி பெற்றவற்றைத் தொழ, கங்கையில் நீராடும் நாள், மாசி மாதம் பிறந்த உடன் முன்நிற்கும் உஷத் காலமாகும்.

இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
கும்ப மாதத்தில் நடைபெறும் விழா என்பதால் இது கும்பமேளா. பொதுவாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், கிரஹண காலம் தவிர்த்து, பௌர்ணமி நாளில் தர்ப்பணம் செய்வது என்பது மாசி மாதத்தில் மட்டுமே.

Masi Matham Rasi Palan

இத்தகைய பெருமை மிகுந்த மாசி மாதத்தின் ராசிபலன்களை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - மாசி 25ம் தேதி (09-03-2015) கும்பம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - மாசி 03ம் தேதி (15-02-2015) மீனம் ராசிக்கு மாறுகிறார்
மாசி 28ம் தேதி (12-03-2015) மேஷம் ராசிக்கு மாறுகிறார்.
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்:

அரசு உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வுக்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம் உண்டு. உடல் ஆரோக்கியம் பேணுவதற்காக செலவுகள் அதிகரிக்கும். நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. படிப்பு மேன்மையடையும்.

கமிஷன் வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். அப்பாவுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மனதில் இனம் புரியாத மன அழுத்தம் இருக்கும். அசட்டு தைரியத்துடன் செயல்படுவீர்கள்.

ஆஞ்சநேயரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

ரிஷபம்:

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆலோசனை தொழில் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். இயந்திரத் தொழில் சிறப்படையும். தகவல் தொடர்பில் தடை உண்டாகும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடன் வாங்கும் நிலை உருவாகும். எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகலாம். இல்லறத்தில் சச்சரவு உண்டாகும். குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். வயிற்றில் அஜீரணக் குறைபாடு உண்டாகும். மூத்த சகோதரி எல்லாவற்றிலும் உதவுவார்.

அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

மிதுனம்:

அரசாங்க விஷயங்களில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கத்திபோன்ற கூர்மையான ஆயுதங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட் தொழில் சுமாராக இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். நுண் கலைகளில் திறமை உண்டாகும்.

பண வரவு அதிகமாக இருக்கும். செல்வச் சேர்க்கையும் அதிகரிக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். வீடு நிலம் போன்றவைகளில் பிரச்சினை உண்டாகும். தொழிலில் போட்டி அதிகரிக்கும். குருவாயூரப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கடகம்:

அரசு அதிகாரிகளுடன் விரோதம் உண்டாகும். வயிற்றில் உஷ்ணம் தொடர்பான பிரச்சினை உண்டாகும். சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். பூர்வீக நிலபுலன்களில் பிரச்சினை உருவாகும். படிப்பில் கவனம் தேவை. காதுதொடர்பான பிரச்சினை உண்டாகும்.

பண வரவு சுமாராக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வீர்கள். விருந்தினர் வருகை உண்டாகும். மதி மயக்கமாகும். சிந்தனையில் தடை உண்டாகும். எல்லாவற்றிலும் தைரியமாக செயல்படுவீர்கள். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிவபெருமானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

சிம்மம்:

தந்தையுடன் கருத்துவேறுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனமாக இருக்கவும். வாகன விபத்துகளுக்கு வாய்ப்புகள் உண்டு, வாகனங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. இயந்திரப் பணியிலும் கவனமாக செயல்படவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும்.

கல்விகேள்விகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். தான தர்மங்கள் செய்வீர்கள். தொழில் உத்தியோகத்திற்க்காக அதிகமாக அலையவேண்டியிருக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சச்சரவுகள் அதிகரிக்கும்.

காலபைரவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கன்னி:

தொழில் உத்தியோகம் மேன்மை நிலையில் இருக்கும். அரசு அதிகாரிகளின் ஆலோசனை தொழில் மேன்மைக்கு உதவும். கணவன் மனைவியிடையே பிரச்சினைகள் அதிகரிக்கும். பிரிவினை உண்டாகும். தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். படிப்பில் கவனம் தேவை.

பண வரவு சிறப்பாக இருக்கும். எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். நீண்ட தூரப் பயணம் உண்டாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் வியாபரத்தில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. மருத்துவ செலவு உண்டாகும்.

ஐயப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

துலாம்:

தந்தை வழி உறவினர்களால் மனகஷ்டம் உருவாகும். உறவினர்களிடமிருந்து தனித்து இருக்கும் சூழ்நிலை உருவாகும். தொழில் சுமாராக இருக்கும். பதவி உயர்வு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். குதற்க்கமான வார்த்தைகளைத் தவிர்க்கவும். சகோதரர்கள் எல்லாவற்றிலும் உதவுவார்கள்.

நிலம் வீடு வகைகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். தாய்வழி பாட்டியின் ஆசிர்வாதம் கிடைக்கும். வெளியூர் பயணம் உண்டாகும். பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களால் யோகம் உண்டாகும்.

சிவசுப்பிரமணியனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

விருச்சிகம்:

பொருளாதார நிலை நன்கு இருக்கும். கடவுளின் ஆசிர்வாதம் பூரணமாக உண்டு. தொழில் உத்தியோகம் சுமாராக இருக்கும். வியாபாரம் மந்தமாக இருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். தகவல் தொடர்பில் தடை உண்டாகும்.

படிப்பில் கவனம் தேவை. விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கால் மற்றும் பாதங்களில் மதமதப்பு உண்டாகும். மூத்த சகோதரத்துடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதையும் தைரியமாக எதிர்கொள்வது நல்லது.

சங்கரநாராயணனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தனுசு:

தொழில் சம்பந்தமாக வெளிநாட்டு தொடர்பு லாபத்தைத் தரும். பணம் கொடுக்கல்வாங்கல் மந்தநிலையை அடையும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை உத்தியோக உயர்வுக்கு வழிவகுக்கும். அரசு சம்பந்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். நிலம் வீடு வகைகளில் பிரச்சினை உருவாகும். மின்சார சாதனங்களை கையாளுவதில் கவனம் தேவை.

சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எடுத்த காரியங்களெல்லாம் தாமதமாகும். ஒப்பந்தத் தொழில் சிறப்பாக இருக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூல் செய்வதற்கு அதிகமாக சிரமப்பட வேண்டியிருக்கும். வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். செலவுகள் அதிகரிக்கும்.

மஹாலட்சுமியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

மகரம்:

தொழில் மிகவும் சிறப்பாக இருக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கமிஷன் வியாபாரத்தில் கவனம் தேவை. படிப்பு மந்தநிலை அடையும். சகோதரர்கள் எல்லாவற்றிலும் உதவுவார்கள். அதிகாரப்பதவி கிடைக்கும்.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அப்பாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. அயல் நாட்டு பயணம் உண்டாகும்.

குலதெய்வத்தை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கும்பம்:

அதிகாரம் செய்யும் எண்ணம் மேலோங்கி நிற்கும். பேசும் வார்த்தைகளில் கோபம் அதிகமாக இருக்கும். தொழில் உத்தியோகம் சீராக இருக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். ஷேர்மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தைத் தரும். வியாபார யுக்திகளில் புதுமையை கடைபிடிக்கவும்.

எதிர்பாடாத விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் போக்குவரத்தில் கவனம் தேவை. விலையுயர்ந்த ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் கணிசமான வகையில் பணம் சேரும்.

மஹாவிஷ்ணுவை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

மீனம்:

பணப் புழக்கம் சரளமாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். கோபத்தைக்கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இல்லறத்துணையுடன் கருத்துவேறுபாடு உண்டாகும். நெருப்பு, கத்தி போன்றவற்றை கையாளுவதில் கவனம் தேவை. தொழில் நிலை சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிற்றில் தொந்தரவு உண்டாகும்.

எதிர்பார்ப்புகள் எல்லாம் எளிதில் நிறைவேறும். அரசு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. படிப்பில் மேன்மை நிலை உருவாகும். கமிஷன் தொழில் சிறப்படையும். நவநாகரீகமான ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். கையில் கையிருப்பும் அதிகரிக்கும்.

சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+