மாசி மாத ராசி பலன் 2022: கடகம், சிம்ம ராசிக்காரர்களுக்கு மாசியில் ராஜயோகம் தேடி வரும்
மாசி மாதம் கும்ப மாதம். இந்த மாதத்தில் நவகிரங்களின் சஞ்சாரம் கூட்டணியால் கடகம், சிம்ம ராசிக்காரர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
சென்னை: மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். தமிழ் மாதங்களில் மாசி மாதம் 11வது மாதம். அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகச்சிறப்பு மிக்க மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். மகாசிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்ட பல பண்டிகைகளை கொண்டாடப்படுகின்றன. இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வையால் கடகம், சிம்ம ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
காலபுருஷ தத்துவப்படி சூரியன் குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் 11வது வீட்டில் நிகழ்கிறது. மாத இறுதியில் புதனும் கும்ப ராசியில் இணையப்போகிறார். மகர ராசியில் செவ்வாய் சனி,சுக்கிரன் இணையப்போகிறது. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் பயணம் செய்கின்றனர்.
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் கேது,ஆறாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், ஏழாம் வீட்டில் சனி, புதன், எட்டாம் வீட்டில் சூரியன் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இதே போல சிம்ம ராசிக்கு பிறந்தவர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் தொழில் ஸ்தானத்தில் ராகு, நான்காம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய், ஆறாம் வீட்டில் சனி,புதன், ஏழாம் வீட்டில் குரு, சூரியன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கடக ராசி
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த மாசி மாதத்தில் பொருளாதார மேன்மை அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். கணவன்-மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறுவதற்கான நேரம் கூடி வந்துள்ளது. பூர்வீக சொத்து விற்பனை மூலம் வருமானம் அதிகரிக்கும் சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் வேலையில் இடமாற்றமும் பிரமோஷனும் கிடைக்கும். தொழிலதிபர்கள் அதிக முதலீடுகள் செய்து அதிக லாபம் சம்பாதிப்பீர்கள்.

பேச்சில் நிதானம் தேவை
வங்கியில் சேமிப்பு உயரும் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும் மறைமுக போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள் புதிய வீடு குடி போகும் நேரம் கூடி வந்துள்ளது வீடு கட்ட வாஸ்து செய்யலாம் பேச்சில் கவனம் தேவை
பொது இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது யோசித்துப் பேசுவது பிரச்சனையை தவிர்க்க உதவும் வெளியூர் வெளிநாடு செல்வதற்கு ஏற்ற நேரம் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு யோகம் கைகூடி வந்துள்ளது தேர்வுகளை சிறப்பாக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பகை நீங்கும்
எதையும் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள் பகை நீங்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள் பூர்வீக சொத்துப் பிரச்சினை நீங்கும் அரசாங்கம் மூலம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். திடீர் பணவரவு வந்து திக்கு முக்காட வைக்கும். வங்கி சேமிப்பு உயரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும் பணிச்சுமை குறைந்து நிம்மதி அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும் உங்கள் வார்த்தைகளுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும் நீண்ட தூரத்திலிருந்து நல்ல செய்தி தேடி வரும்.

சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு மாசிமாதத்தில் உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குருவின் பார்வையால் குதூகலம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் சில சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கெடுத்து செல்வது நல்லது. எண்ணங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட நற்காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வேலை தொழிலில் அவசரப்பட வேண்டாம். பொறுமையாகவும் நிதானமாகவும் வேலை விசயத்தில் அடி எடுத்து வைப்பது நல்லது. சுக்கிரன் செவ்வாய் கூட்டணியால் சுகமான பயணம் அமையப்போகிறது.

ராஜயோக காலம்
உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் ராசிநாதன் சூரிடன் குரு உடன் அமர்ந்து உங்களை பார்வையிடுவது ராஜயோகம். உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. உறவினர்கள் சொந்தங்களின் வருகையால் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். பரிசுகள் வந்து திக்கு முக்காடப்போகிறது. வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். குரு பார்வையால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தெம்பும் தைரியமும் கூடும். பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கப் போகிறது. புது வண்டி வாகனம் வாங்கலாம். பெண்களுக்கு நகை வாங்கும் யோகம் கை கூடி வந்துள்ளது. சனியின் சஞ்சாரத்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் கனிவான பேச்சு தேவை. குரு தட்சிணாமூர்த்தியை வணங்குவது நல்லது.












Click it and Unblock the Notifications