பச்சைப்புடவைக்காரி..கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை வேண்டுமா? ஆடியில் இந்த பரிகாரம் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: படித்து முடித்தும் வேலை இல்லாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். வேலை கிடைத்தும் சம்பள உயர்வும் புரமோசனும் கிடைக்கவில்லையே என்று ஏங்குகின்றனர் சிலர். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

வேலையும் ஜோதிடமும்: ஜோதிடப்படி தொழில் காரகன் அல்லது கர்ம காரகன் எனப்படும் சனிபகவான் ஜாதகத்தில் எந்த கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறாரோ, அவர் எந்த கிரகத்தை பார்க்கிறாரோ அதற்கேற்ப தொழில், வேலை ஒருவருக்கு அமையும் என்பது விதி. பிறந்த ஜாதகத்தில் சனி சூரியனுடன் சேர்ந்தால் அரசு சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது.

Nalla Velai kidaika parikaram: How to get good Job and Promotion astrology remedies

சனிபகவான்: சந்திரனுடன் சனி சேர்ந்து இருந்தாலோ, சந்திரன் சனி பார்த்துக்கொண்டாலோ மனம் சார்ந்த தொழில்கள், நீர் சார்ந்த தொழில்கள், பயணம் சார்ந்த தொழில்கள், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்கள் அமையும். சனி செவ்வாயுடன் சேர்ந்து இருந்தால் கடின உழைப்பு சார்ந்த தொழில்கள், இயந்திரங்களின் உபயோகம் சார்ந்த தொழில்கள், நெருப்பு சார்ந்த தொழில்கள், சக்தி சார்ந்த தொழில்கள், மருத்துவம் சார்ந்த தொழில்கள் அமையும். சனி பகவான் புதனுடன் சேர்ந்து இருந்தால் மூளையை உபயோகித்து செய்யும் நுட்பமான அறிவு சார்ந்த தொழில்கள், தகவல் தொடர்பு, கால் செண்டர், ஜோதிடம், பள்ளி கல்லூரிகள், முகவான்மை, தரகு, கதை, கவிதை, எழுத்து, மீடியா சார்ந்த தொழில்கள் அமையும்.

என்ன வேலை கிடைக்கும்: ஜாதகத்தில் சனி குரு சேர்ந்து இருந்தால் ஆன்மீகம், கோயில், நீதி, போதனை, ஆய்வு, பொன், நிதி சார்ந்த தொழில்கள். சனி சுக்கிரன் சேர்க்கை வாகனம், பணம், அழகு, சினிமா, அதிர்ஷ்டம், ஆபரணங்கள், நவரத்தின கற்க்கள் மற்றும் நகை சார்ந்த தொழில்கள் அமையும். சனி ராகு சேர்ந்தால் பரிகார கர்மங்கள், மருத்துவம், வெளிநாட்டு வேலை, மந்திர மாந்திரீக வேலைகள், விஷம் மற்றும் மருந்து சார்ந்த தொழில்கள் அமையும். சனி கேது சேர்ந்தால் மோக்‌ஷ கர்மங்கள், இறுதி காரியங்கள், ஜோதிடம், ஞானம், ஆன்மீகம், பரிகாரம், சித்து, மந்திர கட்டு, ரசாயனம் சார்ந்த தொழில்கள், எளிமை, இழப்பு, துறவு சார்ந்த தொழில்கள் அமையும்.

புரமோசன் எப்போது கிடைக்கும்: நல்ல வேலை கிடைப்பது அவரவர் கர்ம நிலை அடிப்படையிலேயே அமைந்துவிடுகிறது. எல்லோரும் ஏறக்குறைய ஒரே மாதிரி கல்வி தகுதி பெற்றாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரி வேலை அமைந்துவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடன்களை தவறாமல் செய்வது வேலையிழப்பை தடுக்கும். பொதுவாகவே குருவும் சனியும் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் வேலைகளில் மாற்றம் ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கர்ம காரகனான சனீஸ்வர பகவானை குரு பார்த்தாலோ அல்லது குரு பகவானை சனி பகவான் பார்த்தாலோ, சேர்க்கையால் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் சம்பள உயர்வுடன் கூடிய வேலைமாற்றம் ஏற்படும் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

ஆடியில் அம்மன் வழிபாடு: நல்ல வேலை கிடைக்க ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு, குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது. வளர்பிறை புதன் மற்றும் வெள்ளிக் கிழமை தினத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். அம்மனுக்கு ஏதேனும் ஆபரணம் செய்து அணிவிப்பதும் அற்புதமான பலன்களை கொடுக்கும். அம்மனுக்கு புடவை மற்றும் ஆபரணம் சாற்றி வழிபடுபவர்களின் வம்சத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்று, சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவார்கள். நன்றாக படித்தும் தகுதியான வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களுக்கு அம்மனின் அருளால் அந்த பச்சைப்புடவைக்காரி அருளினால் நல்லவேளை கிடைக்கும்.

தீபம் ஏற்றலாம்: நல்ல வேலை கிடைக்க செவ்வாய்கிழமைகளில் அரச மரத்தடி விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அரச மரத்தடி விநாயகர் இல்லையென்றால் மற்ற எந்த விநாயகர் சந்நிதியிலும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வியாழக்கிழமை வியாழ ஹோரையில் குரு பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதே போல சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி லட்சுமி நரசிம்மரை வழிபடுவதும் சிறப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+