தாமிரபரணி ஆற்றங்கரை திவ்யதேசங்கள் - நவ கிரக தோஷங்கள் நீக்கும் நவதிருப்பதி ஆலயங்கள்
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் 6 திவ்யதேசங்களும், தென்கரையில் 3 திவ்யதேசங்களும் உள்ள இந்த நவதிருப்பதிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வோம்.
திருநெல்வேலி:கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நவக்கிரகக் கோவில்கள் எப்படி சைவ, வைணவ பேதம் இல்லாமல் இரு சமயத்தாருக்கும் பரிகாரத் தலங்களாக விளங்குகின்றனவோ, அதே போல் தென் மாவட்ட மக்களுக்கு நவக்கிரக பரிகாரத் தலங்களாக கருதப்படுபவை இந்த நவ திருப்பதி கோயில்கள். தாமிரபரணி ஆற்றின் வடகரையில் 6 திவ்யதேசங்களும், தென்கரையில் 3 திவ்யதேசங்களும் உள்ள இந்த நவதிருப்பதிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வோம்.
வைணவ சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கும் அனைவருக்கும் முக்கியமானவை திவ்யதேசங்கள் எனப்படும் 108 திருப்பதிகள். ஆந்திர மாநிலத்தின் திருமலையில் ஏழுமலையான் எனப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி இருந்தாலும், பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களுமே திருப்பதியாத் தான் பயபக்தியுடன் பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்ட மற்றும் மத்திய மண்டலத்தில் உள்ள மக்களுக்கு, பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறதோ, அதே முக்கியத்துவம், தென் மாவட்ட மக்களுக்கு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென் திருப்பேரை, தொலைவில்லிமங்களம், திருக்குளந்தை, திருப்புளியங்குடி, திருக்கோளூர், வரகுணமங்கை, அரவிந்தலோசன் ஆகிய நவ திருப்பதி கோவில்கள்.

ஸ்ரீவைகுண்டம் (சூரியன் தோஷ நிவர்த்தி தலம்)
தூத்துக்குடி மாவட்டத்தில், அறுபடை வீடகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு வெகு அருகாமையில், திருநெல்வேலி செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நவ திருப்பதிகளில் முதல் திருப்பதி ஆகும். பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நவ திருப்பதிகளில் முதல் திருப்பதி ஆகும். நவ கிரகங்களின் நாயகனான சூரியன் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள மூலவர் ஸ்ரீவைகுண்டநாதர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். தாயார் ஸ்ரீவைகுண்டவல்லி. உற்சவர் கள்ளபிரான், ஸ்ரீசோரநாதர், உற்சவ தாயார் ஸ்ரீசோரநாயகி. நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்ட தலத்தை வைப்புத் தலமாக பாடியுள்ளார் என்பது இக்கோயிலின் சிறப்பாகும்.

ஸ்ரீவரகுணமங்கை (சந்திரன் பரிகாரத் தலம்)
நத்தம் என்றழைக்கப்படும் ஸ்ரீவரகுணமங்கை ஸ்ரீவிஜயாசனப் பெருமாள் கோயில் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது. மூலவர் பெயர் ஸ்ரீவிஜயாசனப் பெருமாள், தாயார் பெயர் ஸ்ரீவரகுணவல்லித்தாயார். இத்தலத்தின் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்ததாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில். சந்திரன் தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
இக்கோயில் 108 திவ்யதேசங்களில் 53ஆவது திவ்யதேசம் என்பதோடு, இத்தலத்தில் உள்ள யோகநரசிம்மருக்கு பிரதோஷ நாட்களில் அனைத்து வகையான திருமஞ்சன வைபவமும் நடைபெறுகிறது.

திருக்கோளூர் (செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்)
நவ திருப்பதிகளில் மூன்றாம் திருப்பதியான திருக்கோளூர் ஸ்ரீவைத்திமாநிதி பெருருமாள் செவ்வாய் பரிகாரத் தலமாகும். ஆழ்வார்திருநகரியில் இருந்து சுமார் 2.கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மூலவர் பெயர் ஸ்ரீவைத்தி மாநிதிப்பெருமாள், தாயார் பெயர் குமுதவல்லி. இக்கோயிலின் விமானம் ஸ்ரீகரம் என்ற அமைப்பில் உருவான விமானமாகும். நம்மாழ்வார் 12 பாடல்களையும் மணவாள மாமுனிகளாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இக்கோயிலின் மற்றொரு சிறப்பு பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் அவதாரத் தலமாகும். தர்ம தேவதை இங்கு தங்கி தினமும் பெருமாளை வணங்கி வழிபட்டு வந்தபோது, அதர்மம் வலிய வந்து சண்டையிட்டு, தோற்று ஓடிவிட்டது. இதனால் இத்தலத்திற்கு அதர்ம பிசுனம் என்று ஒரு பெயரும் உண்டு. இத்தல இறைவனான வைத்த மாநிதிப் பெருமாளை மனமுருக வேண்டிக்கொண்டால் வறுமை அகலும். காரியத் தடை அகலும்.

திருப்புளியங்குடி (புதன் பரிகாரத் தலம்)
தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கை தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இத்தலம் புதன் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள மூலவர் பெயர் பூமிபாலகர், தாயார் பெயர் மலர்மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார், புளியங்குடி வள்ளித் தாயார். இத்தலத்தில் உள்ள லட்சுமி தேவி, பூமிப்பிராட்டி நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகப்பெரியவை என்பது சிறப்பாகும். 108 திவ்யதேசங்களில் 83ஆவது திவ்யதேசம், நவ திருப்பதிகளில் 4ஆவது திருப்பதி ஆகும்.
இங்கு புதனுக்கு தனி சன்னதி கிடையாது. பெருமாள் புதன் கிரகமாக இருந்து அருள்பாலித்து வருகிறார். ஆகவே, புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலக இத்தல பெருமாளை வணங்கி தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஆழ்வார் திருநகரி (குரு பரிகாரத் தலம்)
திருக்குருகூர் என்றழைக்கப்படும் ஆழ்வார் திருநகரி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது நவ திருப்பதிகளில 5ஆவது திருப்பதி ஆகும். ஆதிநாதர் கோயில். மூலவர் பெயர் ஆதிநாதன், தாயார் ஆதிநாதவல்லி, குருகூல்வல்லி. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மாறன், சடகோபன் எனப்படும் நம்மாழ்வார் அவதாரத் தலமாகும். இத்தலத்தில் உள்ள புளியமரம் உறங்காப்புளி என்றழைக்கப்படுகிறது. இம்மரம் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மரமாகும். மற்ற புளிய மரங்களைப் போல் இம்மரத்தின் இலைகள் இரவில் மூடாது. அதோடு, இம்மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் பழுக்காது. இம்மரத்தின் அடியில் தான் நம்மாழ்வார் தவம் செய்துகொண்டிருந்த போது, மற்றொரு ஆழ்வாரான மதுரகவி ஆழ்வார் அவரை தரிசித்து "செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்" என்று கேட்க, அதற்க நம்மாழ்வார் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று விளக்கி அருளாசி கொடுத்த தலம் ஆகும்.

தென்திருப்பேரை (சுக்கிரன் பரகாரத் தலம்)
திருச்செந்தூரில் இருந்து திருநகரி செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன் ஆலயம். 108 திவ்யதேசங்களில் 53ஆவது திவ்யதேசம், நவ திருப்பதிகளில் 7ஆவது திருப்பதி ஆகும். இத்தல மூலவரின் பெயர் மகர நெடுங்குழைக்காதன், தாயார் பெயர் குழைக்காத நாச்சியார் மற்றும் திருப்பேரை நாச்சியார். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் என்பதோடு, சுக்கிர தோஷ நிவர்த்தி தலமும் கூட. இத்தல பெருமாள் காதுகளில் நெடிய குண்டலம் அணிந்திருப்பதால் நெடுங்குழைக்காதர் என்று அழைக்கப்படுகிறார். வழக்கமாக பெருமாள் கோயில்களில் கருடன் பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் இருப்பார். ஆனால் இங்கு சற்று தள்ளி விலகி இருக்கிறார். வேதம் ஓதும் சப்தங்களையும், விழாக்களில் நடைபெறும் ஓசைகளையும், சின்னஞ்சிறு பிள்ளைகளின் விளையாட்டு சப்தங்களையும் நாள்தோறும் பெருமாள் கேட்க வேண்டும் என்று பெருமாள் விரும்பியதால் தான் கருடன் சற்று விலகியிருப்பதாக தல புராணம் சொல்கிறது.

திருக்குளந்தை (சனி தோஷ நிவர்த்தி தலம்)
திருக்குளந்தை என்னும் வரலாற்றுப் பெயர் கொண்ட இவ்வூர் பெருங்குளம் என்றே தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. சனியின் அமசமாகப் பார்க்கப்படும் இத்தலம் நவ திருப்பதிகளில் சனி தோஷப்ரீதி தலம் ஆகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திவ்யதேசமும் கூட. இத்தல மூலவரின் பெயர் வேங்கடவாணன் என்ற ஸ்ரீநிவாசன், தாயார் ஸ்ரீதேவி, பூதேவி. இக்கோயில் விமானம் ஆனந்த நிலைய விமானம் ஆகும். இங்கு நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னதி உண்டு. கருடனின் ஆணவம் நீங்கி அருள் பெற்ற தலமாகும்.

இரட்டைத் திருப்பதி (ராகு பரிகாரத் தலம்)
இரட்டைத் திருப்பதிகளாக வணங்கப்படும் திருத்தொலைவில்லி மங்கலம் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகயில் இருந்து சமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் 56ஆவதுதிவ்யதேசம், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். ராகு கேது பரிகாரத் தலம் ஆகும். தெற்குக் கோயில் மூலவரான ஸ்ரீதேவப்பிரான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். வடக்குக் கோயில் மூலவர் பெயர் அரவிந்தலோசனன். தாயார் பெயர் கருத்தடங்கண்ணி. தேவர்களின் தலைவனான இந்திரன், வருணன் மற்றும் வாயு பகவானுக்கு காட்சி கொடுத்த தலம். இத்தலத்தில் கோபுரங்கள் கிடையாது. தேவர்களின் தலைவன் இந்திரன், வருணன், வாயு பகவானுக்கு பெருமாள் காட்சியளித்த தலம் ஆகும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications