புத்தாண்டு ராசி பலன் 2023..மேளம் கொட்டி தாலி கட்ட நேரம் வந்தாச்சு..பாடப்போவது யார் தெரியுமா?
சென்னை: புத்தாண்டு என்பது புதிய வரவாக இருக்கும். சிலரது வாழ்வில் புது வசந்தத்தை தரும். மகிழ்ச்சியும் நிம்மதியும் மன நிறைவும் தரவேண்டும் என்று இறைவனை வேண்டி புத்தாண்டினை பலரும் வரவேற்பார்கள். பிறக்கப்போகும் 2023ஆம் ஆண்டு புத்தாண்டிலாவது கல்யாண வரம் கிடைக்குமா என்று 90 கிட்ஸ் பலரும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலரும் யாருடைய வாழ்க்கையில் கெட்டிமேளம் கொட்டப்போகிறது என்று பார்க்கலாம்.
நவகிரகங்களில் சில கிரகங்கள் கல்யாண யோகத்தை தரக்கூடியது. சில கிரகங்கள் புத்திர பாக்கியத்தை தரும். குடும்ப வாழ்க்கையில் மன நிம்மதி இருந்தாலே போதும் அனைத்து மகிழ்ச்சியும் தானாக தேடி வரும். எத்தனையோ பெண் பார்த்தும் வரன் அமையாத 90 கிட்ஸ் இந்த ஆண்டாவது நமக்கு கல்யாணம் கைகூடி வருமா என்று காத்திருக்கின்றனர்.
2023ஆம் புத்தாண்டு அசுவினி நட்சத்திரம் மேஷ ராசியில் கன்னி லக்னத்தில் பிறக்கிறது. சனிப்பெயர்ச்சி ஜனவரி மாதம் நிகழப்போகிறது. குரு பெயர்ச்சி மே மாதம் நிகழப்போகிறது. ராகு கேது பெயர்ச்சி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. புத்தாண்டில் நமக்கெல்லாம் காதல் என்ற வசந்தம் வீசுமா என்று ஏங்கித் தவிக்கும் ராசிக்காரர்கள் பலர் இருக்கின்றனர். 2023ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் காதல் மலரும்?யாருடைய காதல் திருமணத்தில் முடியும்? மேளம் கொட்டி தாலி கட்ட நேரம் வந்தாச்சு என்று எந்த ராசிக்காரர்கள் பாடப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு 2023ஆம் ஆண்டில் நவ கிரகங்களும் சாதகமாக உள்ளன. அர்த்தாஷ்டம சனி முடியப்போகிறது. மே மாதத்திற்கு மேல் குரு பகவானின் பார்வையும் கிடைக்கப்போகிறது. குருபலன் வந்து விட்டதால் கல்யாண யோகமும் கைகூடி வரப்போகிறது. வைகாசி மாசத்தில் பந்தல் போட்டு கெட்டி மேளம் கொட்டலாம். காதல் பூக்கள் பூக்கத் தொடங்கும் மனதிற்குப் பிடித்த வரனும் வாசல் தேடி வரும் என்பதால் பிறக்கப்போகும் புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராகுங்கள். உங்களின் நிதி நிலைமையும் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விட்டது. 2023ஆம் புத்தாண்டில் உங்களின் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் கிடைக்கும். எத்தனையோ பிரச்சினைகளை குடும்பத்தில் சந்தித்து அதன் மூலம் வேறு வேறு திசை நோக்கி பயணப்பட்டிருப்பீர்கள். இனி உங்களுக்கு வசந்த காலம் வரப்போகிறது. பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரப்போகிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையேயான காதல் உறவு அதிகரிக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாண வாழ்க்கையில் இணைவீர்கள்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்டவர்களே..உங்களுக்கு நிம்மதியும் உற்சாகமும் பிறக்கும். ஏழரை சனி முடியப்போகிறது. கூடவே குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து இருப்பீர்கள் இனி ஒற்றுமையும் நிம்மதியும் அதிகரிக்கும். மனதில் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் ரொமான்ஸ் உணர்வுகள் கூடும். குரு பலன் வரப்போவதால் கெட்டி மேளம் கொட்டப்போகிறது. காதலுடன் கல்யாண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கப்போகிறீர்கள். மனதில் உற்சாகத்துடன் புத்தாண்டினை வரவேற்க தயாராகுங்கள்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஜென்ம சனியாக ஆட்டி வைக்கிறார் உங்கள் ராசி நாதன். சனிபகவானின் இடப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் இருந்த மன உளைச்சல்கள் நீங்கப்போகிறது. எத்தனையோ சோதனைகளை சந்தித்து இருப்பீர்கள். விரைய செலவுகள் முடிவுக்கு வரப்போகிறது. வில்லங்கமான நபர்கள் உங்களை விட்டு விலகி ஓடப்போகிறார்கள். தடைபட்டு வந்த திருமணம் 2023ஆம் ஆண்டு தடைகளைத் தாண்டி நடைபெறப்போகிறது. மண வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் அடிஎடுத்து வைக்கப்போகிறார்கள். திருமணமானவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்கியமும் கிடைக்கப்போகிறது.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு ஜென்ம சனி காலம் என்றாலும் குருவின் பயணத்தாலும் பார்வையாலும் ஜெயிக்கப்போகிறீர்கள். கல்யாண வாழ்க்கையில் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் நீங்கும். எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்து இருப்பீர்கள். இனி உங்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடியப்போகிறது. கணவன் மனைவி இடையேயான காதல் வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். கல்யாணத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த ஆண்டு குருவின் பார்வையால் குடும்ப வாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கப்போகிறீர்கள். உங்கள் ராசிக்கு ஏழாவது வீடான சிம்ம ராசியின் மீது குருவின் பார்வை விழுவதால் உங்களின் காதல் வாழ்க்கை கல்யாணத்தில் முடிவதற்கு இந்த ஆண்டு வாய்ப்புகள் கைகூடி வந்துள்ளது.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு நவகிரங்களும் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. கல்யாணத்திற்காக காத்திருக்கும் 90 கிட்ஸ்க்கு சந்தோஷ சம்பவங்கள் அதிகம் நடைபெறும். காரணம் வைகாசி மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தின் மீது விழுவதால் குரு பலன் கைகூடி வந்துள்ளது. சிங்கிளாக இருந்தவர்கள் இந்த ஆண்டு முதல் குடும்ப வாழ்க்கையில் மிங்கிளாகப்போகிறீர்கள். எத்தனையோ முறையே வரன் பார்த்தும் அமையவில்லையே என்று நினைத்து ஏங்கியவர்கள் இந்த ஆண்டு முந்தானை முடிச்சு போட்டு அக்னி பகவானை வலம் வந்து குடும்ப வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கப்போகிறீர்கள். மொத்தத்தில் 2023ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு அற்புதமான காதல் வாழ்க்கையை தரப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.












Click it and Unblock the Notifications