2023 புத்தாண்டு ராசி பலன்: மேஷ ராசிக்காரர்களே..திடீர் ஜாக்பாட்.. ஹேப்பியா என்ஜாய் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கில புத்தாண்டு பிறக்கப்போகிறது. வரப்போகும் ஆண்டில் நம்முடைய வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப்போகும் புத்தாண்டு எந்த மாதிரியான பலன்களைத் தரப்போகிறது? என்று பார்க்கலாம்.

பொதுவாகவே மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக சனிபகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்தார். குருவின் பயணமும், ராகு கேதுவின் பயணமும் பெரிய அளவில் எந்த நன்மைகளையும் கொடுக்கவில்லை.

இந்த ஆண்டு உங்களுக்கு 100க்கு 100 நன்மையை செய்யப்போகின்றன. சந்தோஷம் பொங்குதே என்று பாடப்போகிறீர்கள். அந்த அளவிற்கு உங்களுக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. வேலை, கல்வி, குடும்ப வாழ்க்கை, உடல் ஆரோக்கியம், பொருளாதார நிலை எல்லாமே 2023ஆம் ஆண்டில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

2023ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக உள்ளது சனி பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வார். குரு பகவான் 12ஆம் வீட்டிலும் உங்கள் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவார். ராகு பகவான் ராசியிலும் கேது பகவான் ஏழாம் வீட்டிலும் பயணம் செய்வார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. ராகு 12ஆம் வீட்டிற்கும் கேது ஆறாம் வீட்டிற்கும் செல்கிறார்.

பொருளாதார நிலைமை

பொருளாதார நிலைமை

2023ஆம் ஆண்டில் நவ கிரகங்களுமே மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. பொருளாதார வளம் அற்புதமாக உள்ளது. உங்களுக்கு செலவுகள் அதிகம் வந்தாலும் சேமிப்புகள் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவதற்கான நேரமும் கை கூடி வந்துள்ளது. பணம் பல வழிகளில் இருந்தும் வரும். எனவே வரும் வருமானத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடந்த சில ஆண்டுகளாக வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. இனி உங்கள் வாழ்க்கையில் பொற்காலம்தான்.

வேலையில் உற்சாகம்

வேலையில் உற்சாகம்

வேலை, தொழிலில் நேர்மறையான செயல்கள்தான் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு பிசினஸில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி நடைபெறும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சனிபகவான் சாதகமான நிலையில் இருப்பதால் வருமானம் இரட்டிப்பாக இருக்கும். சனி பகவான் அள்ளிக்கொடுப்பார். சிலருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்.

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை

இந்த ஆண்டு அதிகம் பயணங்கள் செல்வீர்கள். எனவே குடும்பத்தில் உள்ளவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாது. குடும்ப வாழ்க்கையில் எப்போதுமே சின்னச் சின்ன சஞ்சலங்கள் வந்து செல்லும் காரணம் ராகு கேதுவின் பயணம் சில சலசலப்புகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற விசயங்களுக்கு கணவன் மனைவி விவாதம் செய்வதை விட விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

திருமணம் சுப காரியம்

திருமணம் சுப காரியம்

திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களுக்கு சுப காரியங்கள் எல்லாமே உங்களுக்கு தடைகளை தாண்டி வெற்றி கிடைக்கும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்குப் பிறகு அற்புதமாக உள்ளது காரணம் குருபகவான் பார்வை உங்கள் ராசியில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பது இடங்களின் மீது விழுவதால் நல்ல வாழ்க்கை துணையும், குழந்தை பாக்கியமும் கை கூடி வரும். எனவே குடும்ப வாழ்க்கையிலும் காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

சொத்து சேர்க்கை ஏற்படும்

சொத்து சேர்க்கை ஏற்படும்

சொத்துக்கள் வாங்கலாம். கார், வண்டி வாகனம் வாங்க இது ஏற்ற ஆண்டு. கடந்த காலங்களில் நகைகளை விற்று விட்டு கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த ஆண்டு பெண்களுக்கு பொன் நகைகள் வாங்குவதற்கு ஏற்ற ஆண்டாக உள்ளது. நோயற்ற வாழ்க்கை அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கை கால் வலி, நரம்பு பிரச்சினைகள் நீங்கும். உடம்பும் மனமும் உற்சாகமாக இருக்கும். மன நிறைவோடு இருப்பீர்கள்.

கல்வியில் உற்சாகம்

கல்வியில் உற்சாகம்

மாணவர்களுக்கு இது அற்புதமான ஆண்டு வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அப்ளை செய்யலாம். கல்வி கடன்கள் வங்கியில் எளிதில் கிடைக்கும். நல்ல உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியத்துடனும் இருப்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு இது ஏற்ற ஆண்டு. எனவே உங்களின் பயணத்தை உற்சாகத்துடன் தொடருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+