Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2021 : இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்குமா

2020 முடிந்து 2021ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களில் யாருக்கு உயர் கல்வி சிறப்பாக இருக்கும், நிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020ஆம் ஆண்டு முடிந்து 2021ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. கொரோனா முடக்கத்தில் நிறைய பேரின் வேலை கேள்விக்குறியானது. பல ஆயிரம் பேர் வெளிநாட்டில் கை நிறைய வாங்கிய சம்பளத்தை விட்டு சொந்த நாடு திரும்பினர். புதிதாக பிறக்கப் போகும் 2021ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்குமா என்ற ஏக்கம் அனைவருக்குமே இருக்கும். பிறக்கப்போகும் 2021ஆம் ஆண்டில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களில் யாருக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று பார்க்கலாம். எந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

2021ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனி பத்தாம் இடமான மகரம் ராசியில் அமர்ந்துள்ளார். தற்போது பத்தாம் வீட்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குருவும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று கும்பம் ராசியில் அமரப்போகிறார். பின்னர் வக்கிரமடைந்து மகரம் ராசிக்கு சென்று நவம்பர் மாதத்தில் கும்பம் ராசிக்கு செல்வார். இந்த கிரக மாற்றம் எந்தெந்த ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகத்தை அளிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

வெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும். சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கோள்கள். இந்த கிரகங்களின் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி நாதனானக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த புத்தாண்டில் குருபகவான் இரண்டாம் இடத்தில் இருந்து உங்களுக்கு நல்ல சுபபலன்களை வாரி வழங்க காத்து கொண்டு இருக்கிறார். குருபகவான் இரண்டாம் இடத்திலே சஞ்சாரம் செய்யும் போது லட்சுமி கடாட்சம் உண்டாகும். இதன்மூலம் உங்களுக்கு பணம் நிறைய வரும். பத்தாம் வீட்டை குரு பார்வையிடுவதால் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். இதுநாள் வரை இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். அரசாங்க உதவி, மேலிடத்து அனுகூலம், பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றமும் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். தொழில் முதலீடுகளில் செய்யும் லாபத்தை கொடுக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராசியில் இருந்த சனியும், கேதுவும் குருவும் விலகி விட்டதால் இப்போது உங்களுக்கு இருந்த சுமைகள் விலகும் தடைகளும் விலகும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். வராத கடன்கள் கைக்கு வரும். இளைய சகோதரர்களால் நன்மைகள் இருக்கும் ஆண்டாக 2021 ஆம் ஆண்டு இருக்க போகின்றது.எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தைரியத்துடன் சமாளிப்பீர்கள்.

மகரம்

மகரம்

சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, 2021ஆம் ஆண்டு உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இழந்த பொருட்களை மீண்டும் பெருவீர்கள். எதிர்பார்த்திராத பதவிகள் கிடைக்கும். வேலையில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். உயரதிகாரிகளிடம் இருந்த பிணக்குகள் சரியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த டிரான்ஸ்பர் கிடைக்கும். குருவும் சனியும் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றனர். ஜென்ம ராசியிலே சஞ்சரிப்பதால் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஈசியாக முடியக்கூடிய வேலைகள் கூட இழுத்தடிக்கும் என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள். ஜென்ம சனி நடக்கும் காலம் என்பதால் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக்கூடாது. வேலைப்பளு கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்பதால் டார்கெட் பிரச்சனை இருக்கும் என்பதால் அதிகமாக உழைக்க தயாராக இருங்கள். இந்த ஆண்டில் எதற்காகவும் அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் கவனமுடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைய முடியும்.

கும்பம்

கும்பம்

சனியை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே... இந்த ஆண்டு உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பது யோகமான ஆண்டாக அமைந்துள்ளது. குருபகவான் பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு பத்தில் வரும் போது பதவி பறிபோகும் என்ற கூற்று உள்ளது. அதன்படி சிலருக்கு வேலைப்பளு கூடும். சிலருக்கு விரும்பிய இடங்களுக்கு பணி இடமாற்றம் இருக்கும். ராகு கேது பெயர்ச்சியும் நல்ல முறையில் அமைந்துள்ளது. நான்காம் வீட்டில் ராகுவும், பத்தாம் வீட்டில் கேதுவும் அமர்ந்துள்ளதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பத்தில் ஒரு பாவி வேண்டும் என்பார்கள் சனி, கேது என இரண்டு பாவிகள் சஞ்சரிப்பது நல்லது. கேதுவால் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும்.சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஏழரை சனியின் முதல் சுற்று ஆரம்பித்துள்ளது. நடுத்தர வயதில் இருப்பவர்கள் பொங்கு சனி மூலம் ஆதாயம் அடைவார்கள். ஏந்த முயற்சி எடுத்தாலும் தடங்கள் எற்பட்டு வெற்றி பெரும். அலுவலகத்தில் அலைச்சல் எற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வேலை இடமாற்றம் கிடைத்தால் விரும்பி ஏற்று கொண்டு சென்றால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு இது நன்மை தரக்கூடிய ஆண்டாக அமைகிறது. அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். மேற்படிப்பு யோகம் அமையும் காரணம் குரு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டினை பார்க்கிறார். கேட்ட இடத்தில் கல்விக்காக வங்கிக் கடன் கிடைக்கும். உயர்கல்வி யோகம் கைகூடி வந்துள்ளது. நவம்பர் மாதம் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் நிறைய சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் வரும். உயர் பதவியும்,சம்பளமும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

மீனம்

மீனம்

குருவை ராசிநாதனாகக் கொண்ட 2021 ஆண்டில் உங்களின் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும் ஆண்டாக அமையப்போகிறது. யோகமான ஆண்டாகவும் அமையப்போகிறது. இந்த ஆண்டில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டு உள்ளார். உங்கள் ராசிநாதன் குருபகவான் பதினொன்றாம் வீட்டில் இருந்து இருந்து உங்களுக்கு சாதகமான பலன்களை தந்து கொண்டு உள்ளார்.செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் வாங்கக்கூடிய யோகமும், லட்சுமி கடாட்சத்தால் பொன், பொருள் சேர்க்கையும், அரசாங்க உதவியும் கிடைக்கும். தொழில் இடமாற்றம் ஏற்படும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் இளைஞர்கள் வெளிநாடு செல்ல முடியும். சனிபகவான் உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் நீங்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியும். சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் அமையும். மாணவர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவைப்படும் காலம். கடைசி நேரத்தில் விரும்பிய படிப்பு கிடைக்காமல் போகும் என்பதால் சுதாரித்துக்கொள்ளது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+