அக்டோபர் மாத ராசிபலன்கள் 2019: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம்
சென்னை: அக்டோபர் மாதம் அற்புதமான மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். மாத துவக்கத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சுக்கிரன், செவ்வாய் மாத பிற்பகுதியில் துலாம் ராசிக்கு நகர்கின்றனர். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் புதன் மாத இறுதியில் விருச்சிக ராசிக்கு புதனும் சுக்கிரனும் பெயர்ச்சியடைகின்றனர். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம்.
சனிபகவான் உங்க ராசிக்கு யோகதிபதி உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் சுக்கிரன், ஆறாம் வீட்டில் புதன்
களத்திர ஸ்தானத்தில் குரு, எட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. செவ்வாய் சுக்கிரன் சூரியன் ஐந்தாவது வீட்டில் இணைகின்றனர். அக்டோபர் 4ஆம் தேதி முதல் நீசம் பெற்றிருந்த சுக்கிரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருந்து ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று புதனோடு சேருகின்றனர். இது விபரீத ராஜயோக காலம்.
18ஆம் தேதிக்கு மேல் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். ஆனால் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் மாத இறுதி வரை இணைவதால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். அக்டோபர் மாத முற்பகுதியில் ஐந்தாம் வீட்டில் இருந்த கிரகங்கள் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் இணைவது நன்மை. அக்டோபர் 23ஆம் தேதி துலாமில் இருந்து புதன் ஏழாம் வீடான விருச்சிகத்திற்கு நகர்கிறார். மறைந்த புதன் நிறைந்த கல்வி செல்வம். சுக்கிரன் 28ஆம் தேதி ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டில் இணைகின்றனர். புதன் சுக்கிரன் குருவோடு இணைந்து பார்வையிடுவது நன்மையையும் லாபத்தையும் தரும்.

மகிழ்ச்சியும் சந்தோஷம்
ரிஷபம் ராசிக்கு சனி யோக கிரகம். ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுநாள்வரை நிறைய பிரச்சினைகள் படுத்தி எடுக்கிறது. எதிர்பார்த்து நடக்காதது நிறைய பிரச்சினையை தருகிறது. உங்க ராசி அதிபதி சுக்கிரன் புதனுடன் சேர்ந்து ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் பிரச்சினைகள் வரும்.
விபரீத ராஜயோகம். நடக்கப் போகிறது. காரணம் ராசி அதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியுமான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. எதிர்ப்பில் நிறைய சாதிப்பீர்கள். மகிழ்ச்சியான சந்தோஷம் நடக்கும். சுக்கிரன் புதன் மாத கடைசியில் ஏழாம் வீட்டிற்கு நகர்வது நன்மையை நடக்கும்.

காரிய வெற்றி
சுக்கிரன் ஆறாம் வீட்டில் ஆட்சி பெறுகிறார். ஐந்தில் இருந்த சூரியன் 18ஆம் தேதிக்கு மேல் ஆறாம் வீட்டிற்கு வருவது சாதகம். தனவரவு திருப்தியாக இருந்தாலும் செலவுகள் அதிகமாகவே இருக்கும் சனி லாப ஸ்தானதை பார்ப்பது சிறப்பு. உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் சிந்தனை செயல்பாடுகளால் காரிய வெற்றி நடக்கும். குரு பார்வையால் முயற்சியால் தன லாபம் கிடைக்கும்.

திருமணம், குழந்தைபேறு
வேலை செய்பவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும். வெற்றிகள் கிடைக்கும். மேலதிகாரிகள், சக ஊழியர்களினால் நன்மைகள் நடக்கும். திருமணமான பெண்களுக்கு அன்பு மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு இணக்கமாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். சனி செவ்வாய் பார்வையால் நன்மை மேன்மை நடக்கும். சுக்கிரன் புதன், குரு சேர்க்கையால் கல்வியில் மேன்மை கிடைக்கும்.

அஷ்டமத்தில் சனி கேது
சனி கேது எட்டாம் வீட்டில் நிற்பதால் வேலை, திருமணத்தில் தடை தாமதங்களை தரும். பயணங்களின் போது கவனமாக இருங்கள். கடன் வாங்காதீங்க பிரச்சினைகள் அதிகம் வரும் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். சூரியன் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் அமர்வது பரம்பரை சொத்துப்பிரச்சினைகள் வரும். விழிப்புணர்வு தேவை.

தடை தாமதங்கள் கவனம்
மாணவர்கள் கொஞ்சம் கவனமாக படிங்க. குழப்பமாகவே இருப்பீர்கள். காரணம் புதன் ஆறாவது வீட்டில் இருப்பது சிறப்பானதல்ல. இரண்டில் ராகு, எட்டில் சனி கேது என்பதால் இழுபறிகளும் தடை தாமதங்களையும் தரும். பிரச்சினைகள் தரும் நிதானமாக முடிவு பண்ணுங்க. வீடு மாற வேண்டாம். புது வேலை வேண்டாம். அகலக்கால் வைக்காதீங்க.

எச்சரிக்கையான நாட்கள்
மாத பிற்பகுதியில் சூரியன் நீசம் பெற்றாலும் சுக்கிரன் உடன் சேர்ந்து நீசபங்க ராஜயோகம் அடைவதால் மேன்மையும் நன்மையும் நடக்கும். ஏழில் அமர்ந்த குரு பதற்றத்தை தனிப்பார். இந்த மாதம் சகலவிதமான நன்மைகளும் மேன்மைகளும் கிடைக்கும். சந்திராஷ்டமம்: அக்டோபர் 4 ஆம் தேதி பகல் 12.10 அக்டோபர் 6ஆம் தேதி இரவு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications