ராகு கேது பெயர்ச்சி 2023: குருவின் வீட்டில் அமரும் ராகு.. புதன் வீட்டில் அமரும் கேது.. வரமா? சாபமா?
சென்னை: சனி பகவான் பார்வையில் இருந்த ராகு பகவான் குருவை விட்டு விலகி குருவின் வீடான மீன ராசியில் பயணம் செய்கிறார். கேது பகவான் சுக்கிரன் வீட்டில் இருந்து விலகி புதன் வீட்டில் அமர்ந்துள்ளார். ராகு கேது பெயர்ச்சியால் உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பாம்பு கிரகங்கள் பதற்றத்தை ஏற்படுத்தும். ராகு கேது இடப்பெயர்ச்சியால் ராகுவும் கேதுவும் எந்த ராசியில் இருக்கின்றதோ அதுதான் அவர்களின் வீடு. ராகு குரு பகவானைப் போலவும் கேது பகவான் புதன் பகவானைப் போலவும் செயல்படுவார்.

கேது ஆன்ம காரகன் கடன், மன உளைச்சல், மன சஞ்சலம், மன விரக்தியை அதிகப்படுத்துவார். ராகு என்றால் ஆயுள் கண்டம், மரணபயம், நஷ்டம் பிரச்சினை, சிறை போலீஸ் பிரச்சினை உண்டாகும். பண வரவையும் கொடுத்து செலவு செய்ய வைப்பார் ராகு. மன சஞ்சலம் கொடுத்து கஷ்டப்படுத்துவார் கேது.
மீன ராசி கால புருஷ தத்துவப்படி 12ஆம் வீடு. விரைய ஸ்தானத்தில் ராகு அமர்வதால் மக்கள் சேமிக்கும் பழக்கத்தை குறைத்துக்கொண்டு நிறைய செலவு செய்வார்கள். மீன ராசியில் பாம்பு கிரகமான ராகு அமர்வதால் கைத்தொழில் வளர்ச்சியடையும். உணவு உற்பத்தி குறையும். பருவம் தவறிய மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
2015ஆம் ஆண்டு சென்னையில் எப்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோ அதே போல 2023ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடல் கொந்தளிப்புகள் ஏற்படும். கடல் சார்ந்த நகரங்களான சென்னை, நாகப்பட்டிணம், வேதாரண்யம், கோடியக்கரை போன்ற ஊர்கள் எல்லாம் புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடல் சீற்றம் ஏற்படும். சுனாமி போல பாதிப்புகள் ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.
குருவைவிட்டு விலகிய ராகு குரு பகவான் வீட்டிற்கு வந்து அமர்வதால் உலகத்தில் நல்லதே நடக்கும். சுற்றுலா துறை வளர்ச்சி அடையும். நிறைய செலவுகள் அதிகரிக்கும். பாரம்பரிய தொழில் அபிவிருத்தியாகும். தண்ணீர் தொடர்பான தொழில் வளர்ச்சியடையும். வனங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

கேது பகவான் புதன் வீட்டில் பயணம் செய்வதால் சாதாரண பிரச்சினைகள் கூட பூதாகரமாக மாறும். மக்களிடையே விவாதங்கள் அதிகரிக்கும். போராட்டங்கள் வெடிக்கும். சாதாரண விசயங்கள் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகம் பரவி பதற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கல்வித்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். நீட் தேர்வு போல பொறியியல் கல்விக்கும் பொது நுழைவு தேர்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நிறைய பேர் தொழிற்கல்வி படிக்க ஆர்வம் காட்டுவார்கள். யோகா கலை வளர்ச்சியடையும். மருத்துவதுறையில் மாற்றம் ஏற்படும். சித்தா, ஆயுர்வேத படிக்க ஆர்வம் காட்டுவார்கள். சித்த மருத்துவர்கள் வளர்ச்சியடைவார்கள். சித்த மருத்துவதுறை வளர்ச்சியடையும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் உலக மக்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
-
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications