Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ருது ஜாதகத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்க்கலாமா?

Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

திருமணப் பொருத்தம் என்பது ஜெனன ஜாதகம் எனப்படுகின்ற பிறக்கும் நேரத்தை வைத்து எழுதப் படுகின்ற ஜாதகத்தை வைத்து மட்டுமல்ல, ஒரு பெண் ருதுவாகும் நேரத்தை வைத்து எழுதப்படுகின்ற ஜாதகத்தை வைத்தும்

இன்னமும் கிராமங்களில் சில ஜோதிடர்களால் பார்க்கப்படுகின்றது. ருது ஆதல் என்றால் என்ன? புஷ்பவதி ஆவது, சடங்காகுதல், பெண் பெரிய பிள்ளை ஆதல், பூப்பு அடைதல் என்று பல பெயர்களில் அழைக்கப் படுகின்ற ஒரு நிகழ்வு. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு 12 அல்லது 13 வயதில் ஏற்படுகின்ற முதல் மாத விடாய்.

Ruthu Horoscope And Marriage Matching

குழந்தையாக இருந்தவள் வளர்ந்து கர்ப்பப் பையில் முட்டைகள் உற்பத்தியாகி, முழுமை பெறாத முட்டைகள் இரத்தத்தோடு கழிவாக வெளியேறும் நிகழ்வு. 12,13 வயதில் பையனுக்கு மீசை வளர ஆரம்பிக்கின்றது. குரல் மாறுகின்றது. அதனைப் போலவே பெண்ணுக்கு உடம்பு ரீதியாக மாதவிடாய் என்பது ஆரம்பிக்கின்றது.

ஜாதகம் இல்லாததாலும் பிறந்தநாள் சரிவர குறிப்பிடப்படாததாலும் அவரவர்களின் மனதிற்குட்பட்டபடி சாதகமாக ஜோதிடத்தை பயன்படுத்தியதால் அதற்கு ஜாதகம் என்று பெயர் மருவியது. அதில் ஒன்று

இடைசெறுகலான ருது ஜாதகமும் ஒன்று. இக்கலையை பூரணமாக கணிக்க வல்லுனர்கள் இல்லாத காரணத்தினால் இந்த செறுகல்கள் அதிகமாக்கப்பட்டது. ஆகவே, சரிவர கணிக்க இயலாத காரணத்தால் மக்களிடையே சிறுகச் சிறுக நம்பிக்கை இழக்க நேரிட்டது. அதன் பிறகு, சில போலி ஜோதிடர்கள் அவரவர்கேற்றார்படி நம்பிக்கை யூட்டும்படியான இடைச் செறுகல்களை ஏற்படுத்தினர். அதில் இந்த ருது ஜாதகமும் ஒன்று.

ஜாதகம் முறையான கணக்குப்படி துல்லியமாக கணித்தால் மூன்றுகாலத்தையும் உறுதியாக துல்லியமாக அறுதியிட்டு சொல்லி விட முடியும். மெய்ஞான காலத்தில் உருவாக்கப்பட்ட இக்கலை தற்போதுள்ள விஞ்ஞான காலத்திற்கும் பொருந்தும். இதைத்தான் ஜோதிட ரீதியாக கால தேச வர்த்தமான ஜாதி மத நிற பேத யுக்தி ஸ்ருதி அனுபவம் தான் ஜோதிடம் என்று கூறப்பட்டுள்ளது. ஜாதகம் என்றாலே பிறந்த நேரத்தை ஒட்டிதான் கணிக்கப்படுகிறது. ஜாதகம் இல்லாதவர்களின் மனக்குறையைப் போக்க ருது ஜாதகம் என்ற பெயரில் உருவாக்கிவிட்டனர். அதாவது ருது ஜாதகம் என்றால் பெண்கள் வயது வந்த நேரத்தை வைத்து கணிக்கும் ஜாதகம் ஆகும்.

மேலும் இக்காலத்தில் குழந்தைகள் ருது ஆகுவது அவர்களுக்கே தெரியாது. பெரியவர்கள் மற்றும் வழிபோக்கர்கள் பார்த்து சொல்லும் போதுதான் பார்க்க நேரிடுகிறது. அந்த பார்த்த நேரத்தை வைத்துக் கொண்டு கணிக்கும் ஜாதகம்

எப்படி சரியாகும்? என்பதை சிந்தித்து பார்த்தால் உண்மை விளங்கும். அதுமட்டுமல்லாமல் ஒரு பெண்ணின் அந்தரங்கமான தருணத்தை இப்படி விளம்பரபடுத்துவதும் சரிதானோ?

ஆகவே ருது ஜாதகம் என்பது இடைக்காலத்தில் ஏற்பட்டதே தவிர மற்றபடி இவை ஏற்புடையதல்ல. மேலும், அக்காலத்தில் கல்வி அறிவு குறைந்திருந்த காரணத்தினால் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாததாலும் அவர்களுக்கு ஜாதகக் குறிப்பு பெரும்பாலும் கணிக்கப்பட வில்லை. இவை எல்லாம் சில கிராம ஜோதிடர்கள் தங்கள் பிழைப்புக்காக, பிறந்த ஜாதகம் இல்லாவர்களுக்கு ருது ஜாதகம் தயார் செய்து திருமணப் பொருத்தம் பார்க்கிறார்கள். ஆகவே, பெற்றோர்களே ருது ஜாதகத்தை வைத்துக் கொண்டு திருமணப் பொருத்தம் பார்ப்பதை தவிர்த்து, பிறந்த ஜாதகத்தை வைத்துப் பொருத்தம் பார்ப்பது தங்கள் பிள்ளைகளின் மணவாழ்க்கைக்கு நன்மையைத் தரும். சரி! பெண்கள் ருது ஆவது பற்றியும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளயும் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என இங்கு பார்ப்போம்!

ஜோதிடத்தில் மாதவிலக்கு மற்றும் அது சம்பந்தமான பிரச்சனைகள்:

ஜோதிடத்தில் மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு முக்கிய கிரகமாக கூறப்படுபவர் ரத்தத்தின் ரத்ததின் காரகர் மற்றும் பெண்களின் ஜாதகத்தில் களத்திர காரகனான செவ்வாய்தாங்க! மாதவிடாய் பிரச்சனைக்ளுக்கான பாவம் காலபுருஷனுக்கு ஏழாம் பாவமான துலாம், மற்றும் எட்டாம் பாவமான விருச்சிகமும் மற்றும் ஜெனன ஜாதக ஏழு எட்டு பாவங்களும் முக்கிய தொடர்புள்ள பாவங்களாகும்.

ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனும் செவ்வாய்தான் என்கிறது மருத்துவ ஜோதிடம். இளம்பெண்களுக்கும் செவ்வாய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்குங்க! தனக்கு வரப்போகும் கணவர் இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைக்கேற்ப்ப கணவனை குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான் என்கிறது பாரம்பரிய ஜோதிட சாஸ்திரம்.

எந்த ஒரு பெண்ணும் வீரமுள்ள ஆண்மகனையே கணவனாக அடைய விரும்புவாள். எனவே வீரத்தை குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான். ஒருபெண்ணுக்கு சந்தோஷமான தருனமான பூப்படையும் தன்மையை ஏற்படுத்துவதும் செவ்வாய்தாங்க.

Ruthu Horoscope And Marriage Matching

ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடம்பை குறிக்கும் கிரகமாகும். செவ்வாய் ரத்தத்தை குறிக்கும் கிரகமாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கோசார செவ்வாய் வயது வரும் பருமடைந்தவுடன் லக்னத்தையும் சந்திரனயும் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும்போது பருவமடைகிறாள் என மருந்துவ ஜோதிடம் கூறுகிறது.

ஒவ்வொரு மாத சுழற்சியில் ஜாதகத்தில் ஜனன செவ்வாயை கோசார சந்திரன் தொடுவதற்க்கு 5 மணி நேரத்திலிருந்தும் சந்திரன் செவ்வாயை கடந்து 5 மணி நேரம் வரையும் மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படும் என்கிறது மருத்துவ ஜோதிடம். அதாவது ஒரு ராசியில் சந்திரன் இரண்டரை நாள் பயனம் செய்வார். அவர் ராசியை அடைவதற்க்கு முன்பும் கடந்த பின்புமாக மொத்தம் மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்படுவதின் காரணம் செவ்வாய் சந்திர தொடர்பே என்கிறது ஜோதிடம்.

ஒரு பெண்விரும்பாத தருணமான அதிக உதிரப்போக்குடன் கூடிய பெரும்பாடு எனப்படும் மாதவிடாய் கோளாரினை ஏற்படுத்துவதும் சந்திரன் செவ்வாய் சேர்க்கைதான்.

காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகத்தை ரத்தத்தின் தொடர்புள்ள பாவமாகவும் சந்திரனையும் ரத்தத்தின் அதிபதியாகவும் கூறப்படுகினறது.

ரத்த சோகைநோய்க்கான கிரக சேர்க்கைகள்:

அசுபத்தன்மை பெற்ற செவ்வாய், தேய்பிறை சந்திரன் சேர்க்கை,செவ்வாய் குரு சேர்க்கை, செவ்வாய் சனி சேர்க்கை கடகத்தில் ஏற்படுவது, சனி சந்திரன் சேர்க்கை, சனி கடகத்தில் நிற்பது, எந்த விதத்திலேனும் புணர்ப்பு தோஷம் பெருவது, சூரியன் சனி சேர்க்கை போன்றவை ரத்த சோகை நோயை ஏற்படுத்தும் அசுபத்தன்மை பெற்ற செவ்வாய் ஹீமோகுளோபின் எனும் இரும்பு சத்தின் அளவை குறைத்து ரத்த சோகையை ஏற்படுத்தும். மீனம் அல்லது 12ம் வீட்டில் செவ்வாய் நிற்பது அல்லது சேர்க்கை பெருவது அதிக உதிரப்போக்குடன் கூடியதும் அதிக வலியுடன் கூடியதுமான மாதவிடாய் ஏற்படுத்துகிறது.

Ruthu Horoscope And Marriage Matching

மலட்டு ராசி மற்றும் காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னியில் செவ்வாய் சந்திர சேர்க்கை ஏற்படும்போது உதிரத்தை வெளிப்படுத்தாத மாதவிடாய் கோளாரை ஏற்படுத்துகிறது. நீச சுக்கிரனும் சேர்க்கை பெற்றால் வெள்ளை படுதல் எனும் நோய் ஏற்படுகிறது. காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று நீச சந்திரன் மற்றும் சனியோடு சேர்க்கை பெரும்போது கருப்பை கோளாருகள், கருப்பை அகற்றுதல் ஆகியவை ஏற்படுகிறது.

மாதவிலக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிரக நிலைகள்:

ரத்ததிலுள்ள சிகப்பு அணுக்களுக்கும் இரும்பு சத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான் ஆவார். அவருடன் சந்திரபகவான் அசுப தொடர்பு கொள்ளும்போது ஜாதகருக்கு ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. அதனால் மாதவிலக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

1. சந்திரனின் வீடான கடகத்தில் செவ்வாய் நீச நிலையில் நிற்பது மற்றும் சனியின் பூச நக்‌ஷத்திர சாரம் பெற்று நிற்பது.

2. காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் சந்திரன் நீசமடைந்து நிற்பது மற்றும் சனியின் அனுஷ நக்‌ஷத்திர சாரத்தில் நிற்பது.

3 . செவ்வாய் மற்றும் சனியின் அசுப தொடர்புகள் ரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது. மருத்துவ ஜோதிடத்தில் விட்டமின் சியின் காரகர் சனைச்சர பகவான் ஆவார். இரும்பு சத்து சரியான விகிதத்தில் ரத்ததில் சென்றடைய விட்டமின் சி அவசியமாகும். செவ்வாய் மற்றும் சனியின் அசுப தொடர்புகள் விட்டமின் சி குறைபாட்டை ஏற்படுத்தி அதனால் ரத்த சோகை நோயை ஏற்படுத்துகிறது.

4. மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒன்று. இக்காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மேலும் மாதவிடாய் காலத்தின்போது, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வார்கள். இதற்கு காரணம் மனோகாரகன் சந்திர செவ்வாயுடன் இணைவதே ஆகும்.

Ruthu Horoscope And Marriage Matching

5. மாதவிலக்கு ஏற்படுவதற்க்கு காரணமான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனுக்கு காரகர் சுக்கிரபகவானாகும். ஒருவருடைய ஜாதகத்தில் சினை முட்டை உருவாவதற்க்கும் காரகர் சுக்கிர பகவானே ஆகும். சுக்கிர பகவான் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 6/8/12 மற்றும் அசுப தொடர்புகள் பெற்று செவ்வாயோடு தொடர்பு கொள்ளும்போது ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டினால் மாதவிலக்கு சீரற்ற நிலையில் ஏற்படுகிறது.

6. பாலிசிஸ்டிக் ஒவரிஸ் டிஸிஸ் (பிசிஓடி) எனப்படும் கருப்பையில் ஏற்படும் நீர் கொப்புளங்களால் சிலருக்கு மாதவிடாய் கோளாருகள் ஏற்படுகின்றன. சுக்கிரன் காற்று கிரஹங்களான புதன், மற்றும் சனியுடன் சேர்ந்து

காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் கருப்பையை குறிக்கும் விருச்சிகம் மற்றும் ஜெனன ஜாதக எட்டாம் வீட்டில் நிற்கும்போது பிசிஓடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.

7. சினைமுட்டையை குறிக்கும் சுக்கிரபகவான் கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேதுவின் திரிகோண பார்வையில் நிற்பது, கேதுவின் சாரம் பெற்று நிற்பது ஆகியவை கருப்பையில் சிறு கொப்புளங்களை ஏற்படுத்தி அதனால் சினை முட்டை உற்பத்தியில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு மாதவிடாய் எளிதில் ஏற்படுவதில்லை. பல முறை கருகலைப்பு செய்தவர்களுக்கு கர்ம வினையின் காரணமாக இதுபோன்ற அமைப்பு ஏற்படுகிறது.

மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும் தெய்வீக ஸ்தலங்கள்:

சிதம்பரத்தை அடுத்த வைதீஸ்வரன் கோயில் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் கிழமைகளில் இந்த திருத்தலத்திற்க்கு வந்து வணங்குவது சிறந்த பரிகாரமாகும். மேலும் ரத்தத்தில் குறைபாடு உள்ளவர்கள் செவ்வாய் எனும் அங்காரகனின் அதிதேவதையான முருகப்பெருமானின் வாகனமான கோழி மற்றும் சேவல் இறைச்சி சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட வேண்டும்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ளது காமாக்யா தேவி கோயில். இந்த கோவிலின் கருவறையில் கடவுளுக்கு சிலைகள் எதுவும் கிடையாது மாறாக ஒரு பாறையில் யோனியை செய்து அதையே தெய்வமாக வழிபடுகின்றனர். இந்த பாறையில் இருந்து எப்பொழுதும் நீர் கசிந்துகொண்டிருக்குமாம். மாதாமாதம் பெண்களுக்கு எப்படி உதிரி போக்கு இருக்கிறதோ அதே போல் வருடத்தில் மூன்று நாட்கள் இந்த கோவிலில் உள்ள தேவி தீட்டாகும் நாட்களாம்.

Ruthu Horoscope And Marriage Matching

அதனால் இங்கு ஓவ்வொரு வருடமும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் கருவறையை அடைத்துவிடுவார்கள். அந்த மூன்று நாட்களும் தேவி குளிப்பாட்டப்பட்டு, சிகப்பு நிற ஆடை அணிவிக்கப்பட்டு பழங்கள் மற்றும் பூக்களை வைத்து வணங்கப்படுவாள்.இந்த மூன்று நாட்களும் சிகப்பு நீர் கசிவதாக நம்பப்படுகிறது. மூன்று நாட்கள் கழித்து நான்காவது நாள், பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவிலின் கருவறை திறக்கப்படும்போது, தண்ணீரில் சிகப்பை கலந்து அதை பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கின்றனர். இந்த கோயிலில் உள்ள பார்வதியம்மனை வணங்கினால் நீண்ட நாட்களாக அவதியை தரும் மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.

கேரள மாநிலம் செங்கண்ணூர் எனும் ஊரிலுள்ள பகவதி கோயில் தலத்தில் பார்வதிதேவி பூப்படைந்தாள் என்றும், இதையொட்டி இங்கு ருதுசாந்தி கல்யாணம் (பூப்புனித நீராட்டு விழா) நடைபெற்றது என்று தலபுராணம் கூறுகிறது. இத்தலத்திலுள்ள பகவதியம்மன் பெண்களைபோலவே மாதந்திர விலக்கு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இத்தலத்திலும் பெண்கள் வணங்குவது அவர்களின் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் தீரும் என கூறுகிறார்கள்.

தமிழ் நாட்டில் திருச்சி சமயபுரம், சென்னை மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன், திருவேற்காடு மாரியம்மன் போன்ற ஸ்தலங்களில் செவ்வாய் கிழமைகளில் சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி குங்கும அர்ச்சனை செய்வது மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்கும் எளிய பரிகாரங்களாகும்.

இரும்பு சத்தின் காரகர் செவ்வாய் ஆகும். தகுந்த மருத்துவ ஆலோசனையோடு இரும்பு சத்து அதிகரிக்கும் மருந்துகள் சாப்பிடுவது, சனைச்சர பகவானின் காரகம் பெற்ற ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடுவாது சிறந்த பலனளிக்கும்.

ஆயுர்வேத மருந்துகளில் அசோகாரிஷ்டம், ரஜப்ரவர்தனி வடி, புஷ்யானுக சூர்ணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனளிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+