செவ்வாய் சனி பார்வை: சுரங்க விபத்தில் அதிகரிக்கும் உயிர்பலிகள் - முன்பே எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம்
சுரங்க விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இது ஆறு மாதத்திற்கு முன்பே அச்சிடப்பட்ட பஞ்சாங்கம் என்பதுதான் சிறப்பம்சம்.
சென்னை: விபத்துக்களால் உயிர்பலிகள் அதிகரித்து வருகின்றன. சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இன்று மியான்மரில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்து விட்டனர். சுரங்க விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இது ஆறு மாதத்திற்கு முன்பே அச்சிடப்பட்ட பஞ்சாங்கம் என்பதுதான் சிறப்பம்சம்.
மியான்மரின் வடக்குப் பகுதியில் கச்சின் மாநிலத்தில் பாகந்த் என்ற இடத்தில் விலையுயர்ந்த பச்சை மரகதக் கல் எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வேகமாக மணல் காற்று வீசியது. இதைத் தொடர்ந்து பலத்த மழையும் பெய்தது. அப்போது சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மணலால் மூடி இறந்தனர்.
இந்த சுரங்க விபத்து பற்றி ஏற்கனவே சார்வரி வருடத்திய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் என்பது நிலத்தின் காரகன். தற்போது செவ்வாய் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள செவ்வாய் பகவானை மகரம் ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிக்கும் சனி பார்வையிடுகிறார்.
செவ்வாயும் சனியும் பகை கிரகங்கள் இரண்டு கிரகங்களும் ஒன்றாக சஞ்சரித்தாலோ, பார்வை விழுந்தாலோ பாதிப்புகள் ஏற்படும். இன்றைய சுரங்க விபத்து மட்டுமல்ல கடந்த ஒருவார காலமாகவே காவல்துறையினருக்கு நேரம் சரியில்லாமல்தான் இருக்கிறது.
அடிக்கடி சுரங்க விபத்துக்கள் ஏற்படும் என்று பஞ்சாங்கத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பூமி காரகன் செவ்வாய்
செவ்வாய் பூமிக்கு காரகமான கிரகம். இந்த கிரகம் இந்த ஆண்டு எந்த பதவியிலும் இல்லை. சார்வரி ஆண்டு பிறக்கும் போது செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெற்றிருந்தார். கூடவே குரு நீச நிலையிலும் சனி ஆட்சி பெற்றும் இருந்தார். இந்த கிரகங்களின் கூட்டணியால் இந்தியாவின் பலம் உயரும் அண்டை நாடுகள் நம் நாட்டைப் பார்த்து பயப்பட நேரிடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

அடிக்கடி விபத்துக்கள்
பூமியில் இருந்து எடுக்கும் பொருட்களில் விலை குறையும். அடிக்கடி சுரங்க விபத்துக்கள் ஏற்படும். வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் கணித்தது பலித்தது
கடந்த ஆண்டுகாலங்களில் மழை, வெள்ளம் பற்றியும், தற்போது கொரோனா வைரஸ், வெட்டுக்கிளிகளால் ஏற்படும் பாதிப்பு வரை பஞ்சாங்கம் கணித்தது பலித்துள்ளது. அதே போல தற்போது சுரங்க விபத்துக்களும் அடிக்கடி நடக்கும் என்று கணித்திருப்பது போல பலித்துள்ளது.

சார்வரியில் மழை வெள்ளம்
சார்வரி வருடத்தில் மழை வெள்ளம் பலமாக இருக்கும் கல்கத்தா, மும்பை, கேரளா, தமிழ்நாடு வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும் என்று கணித்துள்ளது பஞ்சாங்கம். இந்த கணிப்பு பலிக்குமா என்று பார்க்கலாம்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications