சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: கன்னி ராசிக்காரர்களே... கவனம் தேவை!
கன்னி ராசியில் உத்திரம், ஹஸ்தம் சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் அறிந்து கொள்வோம்.
Recommended Video

சென்னை: சனிபகவான் இதுநாள்வரை கன்னி ராசிக்கு 3வது இடமான விருச்சிகத்தில் அமர்ந்திருந்தார் இனி 4 ஆவது இடமான தனுசு ராசியில் அர்த்தாஸ்டம சனியாக சஞ்சாரம் செய்கிறார்.
கன்னி ராசியில் உத்திரம், ஹஸ்தம் சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் அறிந்து கொள்வோம்.
டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

அர்த்தாஸ்டம சனி
ராசியின் 3வது இடத்தில் இருந்து ராசிக்கு 4வது இடத்திற்கு அர்த்தாஸ்டம சனியாக இடம் பெயர்கிறார். புதனும், சனியும் நண்பர்கள் என்பதால் தொல்லைகள் ஏற்படும் என்று அஞ்ச வேண்டாம். சனிபகவானின் 10வது பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு 6வது இடத்தை 3வது பார்வையாகவும், உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தின் மீது சம சப்தம பார்வையாக விழுகிறது.

திருப்தியுடன் செயலாற்றுங்கள்
உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும் 6ம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும்.

மாற்றம் தரும்
4ம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும். அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும்.

மாற்றம் தரும் பெயர்ச்சி
தொல்லைகள், துயர்கள் எதுவும் ஏற்படாது. தனவரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழைய வாகனங்களை விற்று விட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சனி பெயர்ச்சி பல மாற்றங்களை ஏற்படும்.

உறவுகளிடம் அனுசரிப்பு
கணவன் மனைவி உறவில் சில விரிசல்கள் ஏற்படும். அனுசரித்து விட்டுக்கொடுத்து போகவேண்டும். பெண்களுக்கு வீட்டிலும் வெளியிடத்திலும் மதிப்பும், மரியாதையும் ஏற்படும். 4வது இடத்தில் வருவதால் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.

கடுமையான போராட்டம்
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். எனவே படிப்பில் மந்தமாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்த கூடாது. கல்விக் கடன் கிடைப்பதில் இழுபறியாக இருந்து வரும். கூடிய வரை தேவையற்ற நட்பு வட்டாரத்தை தவிர்க்கவும். நல்ல மதிப்பெண் எடுக்க கடுமையாக உழைக்க வேண்டியது வரும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க கடுமையாகப் போராட வேண்டி வரும்.

கொடுமுடி சனிபகவான்
உங்களுடைய ராசிக்கு 6வது இடத்தை சனிபகவான் பார்ப்பதால் நோய் நொடிகள் ஏற்படும். எதிரிகளிடம் கவனம் தேவை. சனிபகவான் உங்கள் ராசியை 10வது பார்வையாக பார்ப்பதால் சின்னச் சின்ன உடல்வலிகள் வந்து நீங்கும். கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சனிபகவானை வணங்கினால் ஏற்றங்கள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரம்
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களே சனிபகவான் 4ம் இடத்தில் சஞ்சரிப்பது ஓரளவு சுமாரான பலனையே தரும். இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள் இவற்றில் முதலீடு செய்ய வேண்டி வரும். வேலையில் தேவையற்ற மன உலைச்சல்கள் ஏற்படும். வெளிநாடு செல்வதில் தடை ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரம்
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு வீடு, வண்டி, வாகனங்கள் நிலம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பான காலமாகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும் காலம். வெளியூர், வெளிநாடு செல்லவும் மற்றும் உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். அந்நிய மனிதர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரம்
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் தேவையற்ற ஜாமீன் கையெழுத்து கூடாது. வேலையாட்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் விஷயத்தில் கவனம் தேவை. உங்களைப் பற்றிய வீண் வந்தந்திகள் பரவுகின்ற காலம். மனதில் உறுதியாகவும் தைரியமாகவும் எந்த ஒரு காரியத்திலும் இறங்க வேண்டும். வெளிநாடுப் பயணங்களில் அதிக முன் எச்சரிக்கை தேவை.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications