Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2017: மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்,பரிகாரங்கள்

மேஷம் ராசியில் உள்ள அஸ்வினி,பரணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் அறிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சனிப்பெயர்ச்சி 2017: மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்,பரிகாரங்கள்- வீடியோ

    சென்னை: மேஷ ராசிக்காரர்களுக்கும் மேஷ ராசியில் உள்ள நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சனிப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வோம்.

    நவகிரங்களின் பெயர்ச்சி இயல்பானதுதான் என்றாலும் சனிப்பெயர்ச்சி அனைவராலும் அச்சத்தோடு கவனிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார்.

    தனுசு ராசியில் சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் சஞ்சாரம் செய்யப்போகிறார். சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது.

    பொதுவான பலன்

    பொதுவான பலன்

    சனி பகவான் உங்கள் ராசிக்கு 8ஆம் இடமான அட்டமத்தில் இருந்து 9வது இடமான பாக்யதானத்திற்கு செல்கிறார். இதுநாள் வரை சனிபகவான் தனது பகை கிரகமாக செவ்வாய் வீட்டில் இருந்தார். டிசம்பர் மாதம் முதல் ராசிக்கு பாக்ய ஸ்தானத்திற்கு வருகிறார்.
    அட்டமத்து சனியால் அவமானப்பட்ட நீங்கள் இனி அல்லல்பட்ட நீங்கள் இனி நல்லது நடப்பதை காண்பீர்கள்.

    நன்மைகள்

    நன்மைகள்

    நோய் தொந்தரவில் இருந்தவர்கள் இனி அதில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்களை அனுபவித்த நீங்கள் இனி நல்லதை அனுபவிக்கப் போகிறீர்கள். அவமானங்களை பட்ட நீங்கள் அவை அனுபவங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். பாக்யசனி பல நன்மைகளை தருவார்கள்.

    வெளிநாட்டு வாய்ப்பு

    வெளிநாட்டு வாய்ப்பு

    அட்டம சனியால் மந்தநிலையில் இருந்த மாணவர்கள், பாக்ய சனியால் சாதனை படைக்கப் போகும் காலமிது. இதுநாள் வரை தடைபட்டு இருந்த கல்வி 9 ஆம் இடத்து சனியால் விலகி உயர்கல்வி யோகம் கிடைக்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல யோகம் கிடைக்கும். இனி இரண்டரை ஆண்டுகாலம் இந்த சனிப்பெயர்ச்சியை பயன்படுத்திக்கொள்ளுங்கள் மாணவர்களே.

    காரிய வெற்றி

    காரிய வெற்றி

    உங்களுடைய ராசிக்கு 11 வது இடமான லாப ஸ்தானமான கும்பத்தை 3வது பார்வையாக சனி பார்ப்பதால் மூத்த சகோதரர்கள் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள். சனிபகவான் 7வது பார்வையாக உங்களின் 3வது ஸ்தானமான மிதுன ராசியைப் பார்க்கிறார். இது தைரிய ஸ்தானம். சகோதரர், பக்கத்து வீட்டிற்காரர்கள். மனதில் மிகவும் தைரியம் இருக்கும். புதிய வேலை கிடைக்கும்.

    எதிரிகள் தொல்லை நீங்கும்

    எதிரிகள் தொல்லை நீங்கும்

    குழந்தை பாக்கியத்தை தருவார். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 10வது பார்வையாக 6வது இடமான கன்னி ராசியைப் பார்க்கிறார். சுயமாக வேலை கிடைக்கும். எதிரிகள் விலகி ஓடுவார்கள். கூட இருந்தே குழி பறித்தவர்களை அடையாளர் காண்பீர்கள். பணி புரியும் இடங்களில் பாராட்டு கிடைக்கும்.

    தென்றல் வீசும்

    தென்றல் வீசும்

    மேஷ ராசி அரசியல்வாதிகளுக்கு மாற்றம் வரும். சனிக்கிழமைகளில் செய்யும் காரியம் வெற்றி கிட்டும். புயல் விலகியது. தென்றல் வீசப்போகிறது. குச்சனூர் சனிபகவானை சனிக்கிழமை சென்று வழிபட்டு வந்தால் மேன்மை கிடைக்கும்.

    குதூகலம்

    குதூகலம்

    குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்,பெரியவர்களின் ஆசி கிட்டும். வார்த்தைகளில் கொஞ்சம் காரத்தை குறைத்துக்கொண்டால் இனிப்பான விசயங்கள் தேடிவரும். பணவரவு சீராக இருக்கும். வெளிநாடு, வெளியூர் செல்ல வேண்டிய நிலை வாய்ப்பு கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு வீட்டில் மதிப்பு அதிகரிக்கும். பிள்ளையார்பட்டி சென்று வணங்கி வரவும்.

    கஷ்டங்கள் குறையும்

    கஷ்டங்கள் குறையும்

    பணியிடங்களில் உங்களின் திறமைகளை உணர்ந்து அதற்கேற்ப மதிப்பு கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வாக்கில் நிதானம் தேவை. குலதெய்வ வழிபாடு குடும்பத்திற்கு நல்லது. இல்லத்தரசிகள் கூறும் வார்த்தைளை வீட்டில் உள்ளவர்கள் மதித்து கேட்பார்கள். கணபதியை வணங்கினால் கவலைகள் பறந்தோடும்.

    காரிய வெற்றி

    காரிய வெற்றி

    முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும்,குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சோர்வை விரட்டி சுறுசுறுப்பை அதிகரித்தால் நன்மைகள் அதிகரிக்கும். மாணவர்கள் சாதனைகளைப் படைக்கும் காலமிது. வாக்கில் கவனம் தேவை. பழனி ராஜமுருகனை வணங்கி வர வாழ்க்கை வளமடையும்.

    [ மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி ]

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+