சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: கடகம் ராசிக்காரர்களுக்கு இனி எல்லாம் ஜெயமே!
கடகம் ராசியில் உள்ள புனர்பூசம் 4ம் பாதம், பூசம்,ஆயில்யம், ஆசிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் அறிந்து கொள்வோம்.
சென்னை: கடகம் ராசிக்காரர்களுக்கு இது பொற்காலம். உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் அமர்கிறார் சனிபகவான். கடகம் ராசியில் உள்ள புனர்பூசம் 4ம் பாதம், பூசம்,ஆயில்யம், ஆசிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் பார்க்கலாம்.
டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.
சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது.
இது உங்கள் ராசிக்கு 12ஆம் இடம் 3ஆம் இடம், 8 இடத்தின் மீது சனிபகவானின் பார்வை விழுகிறது.

சனிபகவானின் சஞ்சாரம்
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சனி பகவான் கோசாரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். இனி அவர் உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் ஜெயம், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 3,12,8வது இடங்களின் மீது விழுகிறது.

வெற்றிகள் குவியும்
5 வது இடத்தில் இருந்து ராசிக்கு 6வது ராசிக்கு இடம் பெயர்கிறார். அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும். அச்சம் வேண்டாம். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஜென்ம ராகுவினால் நன்மை கிடைக்கும். 6வது இடத்திற்கு வரும் சனியால் எதிரிகள் தெறித்து ஓடுவார்கள். உங்களை வாட்டி வதைத்து வந்த வியாதிகள் நீங்கும். மாபெரும் வெற்றிகள் கிடைக்கும்.

கடன்கள் அதிகரிக்கும்
6வது இடத்திற்கு சனிபகவான் வருவதால் கடன் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டாம்.
வீடுகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.வழக்குகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும். அந்த கடன்களை நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தினால் நன்மையே ஏற்படும்.

மாணவர்களுக்கு வெற்றி
மாணவர்களே நீங்கள் எதிர்பார்த்த பள்ளி கல்லுரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பீர்கள். உயர்கல்வியின் காரணமாக ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். தைரியம், தன்னம்பிக்கை, முயற்சி இவற்றை அதிகரித்துக் கொள்ளல் வேண்டும். கல்வி கடன்கள் எளிதாகக் கிடைக்கும்.

உறவுகளிடம் கவனம்
ராசிக்கு 3வது இடத்தை 10வது பார்வையாக பார்க்கிறார். சகோதர உறவுகளில் பிரிவு வர வாய்ப்பு உள்ளது. எனவே விட்டுக்கொடுத்து போகவேண்டும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போக வேண்டியது அவசியம்.

கவனம் தேவை
3வது பார்வையாக ராசிக்கு 8வது இடத்தை பார்ப்பதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சனிபகவான் 7வது பார்வையாக ராசிக்கு 12வது ஸ்தானத்தை பார்க்கிறார் எனவே பலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும். அது சுகஸ்தானம் என்பதால் உங்களுக்கு உறக்கம் கெடும், சுகம் கெடும்.

வேலையில் மகிழ்ச்சி
இதுவரைக்கும் ஏண்டா இந்த வேலையை செய்கிறோம் என்று நினைத்த நீங்கள் இனி பிடித்த வேலையை செய்யலாம். வேலை மாறி இனிமேல் உங்களுக்கு பிடித்த வேலையில் அமரும் வாய்ப்பு அமையும். அதிக மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும்.

சனிபகவானை சரணடையவும்
நோய்கள் வந்த பின்னர் காப்பதை விட வராமல் கவனித்தல் நலம். சூடு தொடர்பான நோய்கள் வரலாம். உடலில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் வேண்டும். பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள சனிபகவானை வணங்கி வரலாம். அர்த்தநாரீஸ்வரரை வழிபடலாம்.

சமயபுரத்தாள் காப்பாள்
படிப்பு, பயிற்சி முடித்த உடனே வேலை கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும் அதே நேரத்தில் நேரத்திற்கு சாப்பிட முடியாமல் போகும். சம்பாதிக்கும் பணத்திற்கு நல்ல ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம், ஊர் மாற்றம் ஏற்பட உள்ளது. சிலர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். பாஸ்போர்ட், விசா எளிதில் கிடைக்கும். கடன்களும் அதிகரிக்கும். சமயபுரம் மாரியம்மனை சரணடையுங்கள்.

ஆரோக்கியத்தில் கவனம்
இதுநாள்வரை உங்களை கண்டு கொள்ளாமல் இருந்த மேலதிகாரிகள் உங்களை இனி புரிந்து கொள்வார்கள். இனி உங்களுக்கு வரப்போகும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதுங்க. பயணங்கள் அதிகரிக்கும். 8ஆம் இடத்தின் மீது சனிபகவான் பார்வை படுவதால் வாகனப்போக்குவரத்தில் கவனம் தேவை. நிதானம், நேர்மை தேவை.
வழக்குகளில் வெற்றி கிடைக்கும் மனைவிக்கு அடிக்கடி உடல் ஆரோக்ய குறைபாடு ஏற்படும்.
திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனீஸ்வரரை வழிபடுங்க.

மகான் தரிசனம் நல்லது
இடமாற்றம் மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். போட்டிகள் எதிர்ப்புகள் தோன்றி மறையும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். வேலை மாற்றம் காரணமாக நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடலாம். பாஸ்போர்ட், விசா இவற்றில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி வெளிநாடு செல்வதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். மனைவி சொல்லே மந்திரம் என்று நினைங்க. நல்லதே நடக்கும்.
மந்திராலயம் சென்று மகான் ராகவேந்திரரை வணங்கி வாருங்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications