இதுதாண்டா உலகம்... இப்படித்தான் வாழ்க்கை என புரிய வைக்கும் சனி பகவான் - என்ன பரிகாரம்?
திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் இப்போது மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளும் சில ராசிக்காரர்களுக்கு யோகமும் சிலருக்கு பாதிப்பும் ஏற்படும். இந்த
சென்னை: சனி இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் பாழ் என்பார்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் இப்போது மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் பார்வை இப்போது மீனம், கடகம்,துலாம் ராசிகளின் மீது விழுகிறது. சனி பகவான் மேஷம் முதல் மீனம் 12 ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களை தருவார். சனி பகவான் கோச்சார ரீதியாக 3,6,9,10,11 ஆகிய இடங்களில் அமரும் போது அற்புதமான பலன்களை தருவார். அதே நேரம் ஏழரை சனி காலமான ஜென்ம சனி, பாத சனி, விரைய சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி காலகங்களில் சில கஷ்டங்களை கொடுத்து உலகம் இப்படித்தான் இதுதான் வாழ்க்கை என்று புரிய வைப்பார். இந்த சனிப்பெயர்ச்சியால் யார் யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. இது உங்களை பயமுறுத்துவதற்காக இல்லை ஒரு எச்சரிக்கை பதிவுதான்.
30 ஆண்டுகள் வாழ்ந்தவர்களும் இல்லை 30 ஆண்டுகள் தாழ்ந்தவர்களும் இல்லை. ஆணவத்தில் ஆடினால் அவர்களின் தலையில் தட்டி அமர வைத்து விடுவார் சனிபகவான். சனீஸ்வரன் நீதிமான். இதுதான் உலகம், இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்பதை ஒவ்வொருவருக்கும் ஒரு கால கட்டத்தில் உணர வைத்து விடுவார். நள சக்கரவர்த்தியை நாட்டை பிடிங்கிக் கொண்டு குடும்பத்தை விட்டு பிரிய வைத்தவர். சனி பகவான் கொடுக்கும் படிப்பினைகளைப் பற்றி எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம்.
சனி பகவானுக்கு ஏன் இத்தனை பயம். சனிப்பெயர்ச்சி வந்தாலே ஏன் எல்லோரும் பரிகாரங்களையும் யாகங்களையும் செய்கிறார்கள் என்று யோசிக்கலாம். சனி பகவான் நீதி தேவன் என்பதால் தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். எளியவர்களிடம் அதிகார திமிரை காட்டினாலோ அவர்களை இருக்கிற இடம் தெரியாமல் உட்கார வைத்து விடுவார் எனவேதான் நவ கிரகங்களில் சனியின் சஞ்சாரம் மட்டும் பலரை பயமுறுத்துகிறது.
சனி பகவான் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். இப்போது கோச்சார ரீதியாக எங்கே சஞ்சரிக்கிறார் என்று பாருங்கள் அதை பொருத்து உங்க வாழ்க்கையில் நடைபெறும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

சனி பெயர்ச்சி 2020
சனிபகவான் இப்போது மகரம் ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் 2020 ஜனவரி 24 தொடங்கி, 2021 ஜனவரி 15ஆம் தேதி வரை சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரத்தினால் மிதுனம் ராசிக்கு அஷ்டம சனியாகவும், கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாகவும், துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் பலன்களை தருவார். தனுசுக்கு பாத சனி, மகரத்திற்கு ஜென்மசனி, கும்பம் ராசிக்கு விரைய சனியாக சஞ்சரிக்கிறார்.

யாரெல்லாம் கவனமாக இருக்கணும்
சனி பகவான் சிலருக்கு சில கஷ்டங்களை கொடுத்து அதன் மூலம் படிப்பினைகளை கொடுப்பார். இதுதாண்ட உலகம் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று புரிய வைத்து விடுவார். கண்டச்சனியை இரண்டரை ஆண்டு காலம் அனுபவித்த மிதுனம் ராசிக்காரர்கள் இப்போது அஷ்டம சனியில் அடி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் இரண்டரை வருடம் வாழ்க்கை ஒரு பக்கத்தை உணர வைத்து விடுவார். ஏழரை சனி ஏழரை வருட கஷ்டம் என்றால் கண்டச்சனி, அஷ்டம சனி என அடுத்தடுத்து மொத்தம் ஐந்து வருடங்கள் அடி பட வைத்து விடுவார் சனிபகவான்.

என்ன செய்யக்கூடாது
கண்டச்சனியோ அஷ்டம சனியோ முதலில் கவனமாக இருக்கணும். புதிய பிசினஸ் எதையும் ஆரம்பிக்காதீங்க. இருக்கிறதை எல்லாம் பிடிங்கிக்கொண்டு விட்டு விடுவார். கடன்காரர்களாக நிற்க வைத்து அவமானப்பட வைத்து விடுவார். சொந்த பந்தங்களின் உண்மை முகங்களை உணர வைத்து விடுவார் எனவே முதல் காரியமாக இருக்கிற வேலையில் செய்யும் தொழிலில் ரொம்ப கவனமாக இருங்க. இருக்கிறதை விட்டு விடு பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க.

எச்சரிக்கை தேவை
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் மிதுனம் ராசிக்கு எட்டில் சனி அதாவது அஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கணும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் சந்தேகங்கள் வரலாம். அதே போல தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். எந்த காரியம்திலும் யாரை நம்பியும் பணம் கடன் வாங்கி கொடுக்காதீங்க. முக்கியமாக ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. ரொம்ப விழிப்புணர்வோட இருக்கணும். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க.

கடகத்தை கைவிட மாட்டார்
கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிடாதீங்க. மனதையும் வாயையும் கட்டுப்படுத்துங்கள். நோய் வந்து விட்டதே என்று பதறாதீர்கள். அதை எப்படி குணப்படுத்துவது என்று பாசிட்டிவ் மனதோடு எதிர்கொள்ளுங்கள். கடக ராசிக்கு கண்டச்சனி இருப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம் கவனமாக கையாளுங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வயிறு பிரச்சினைகள் வரலாம். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். கடவுள் கைவிட மாட்டார்.

சங்கடங்கள் போக்கும் சனிபகவான்
துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி. சனிபகவானுக்கு துலாம் ராசி ரொம்ப பிடிக்கும் காரணம் துலாம் ராசியில்தான் சனிபகவான் உச்சமடைகிறார். அவருடைய உச்ச வீட்டுக்காரர். சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போது முன்னெச்சரிக்கையாக இருங்க. உங்களின் சுகம் கெடும். கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு சில படிப்பினைகளை தந்து விட்டு கடந்து செல்வார்.

சனியை சரணடையுங்கள்
சாட்சிக்காரனை சரணடைவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பல பரிகாரங்கள் இருந்தாலும் ஆஞ்சநேயர், விநாயகர் கோவிலுக்கு போங்க பிரச்சினைகள் தீரும். அதே போல சனிக்கிழமை எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சனி பகவான் மங்கள சனீஸ்வரராக, பாதாள சொர்ண சனீஸ்வரராக அருள்பாலிக்கும் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் சென்று அங்கு நடைபெறும் சனிதோஷ நிவர்த்தி யாகங்களில் பங்கேற்கலாம். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் ரொம்ப அமைதியாக இருங்க இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications