புத்தாண்டு ராசி பலன் 2025: எல்லா பிரச்னைக்கும் எண்டு.. விருச்சிக ராசிக்கு இனி கொட்டப் போகுது பண மழை
சனிப்பெயர்ச்சி பலன் 2025: ஏழரை சனி முடிந்து இனி நல்ல காலம் தான் என்று யோசித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு. அடுத்ததாக அர்த்தாஷ்டம சனி தொடங்கி பல்வேறு பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள். வரும் 2025 புத்தாண்டு சனிப்பெயர்ச்சியால் பட்ட துன்பங்களில் இருந்து விடுபடப் போகிறீர்கள்.. 2025 புத்தாண்டு சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள் என்ன?.. எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.. சனி பகவான் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்யப் போகிறார் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Elarai sani for viruchigam)
2025 புத்தாண்டு வருவதற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. வரும் புத்தாண்டில் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியாகிறார் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் ஐந்து ராசிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார் சனி பகவான். அந்த ஐந்து ராசிகளில் விருச்சிக ராசிக்காரர்களும் ஒருவர். (Sani Peyarchi for viruchigam).

ஏழரை சனியால் பாதிக்கப்பட்டு வந்த நீங்கள் அதற்கடுத்ததாக வந்த அர்த்தாஷ்டம சனியால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்திருப்பீர்கள். வரும் 2025 சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி விலகுகிறது. அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகிறார் சனி பகவான். அந்த வகையில், என்னென்ன நற்பலன்களை சனி பகவான் அள்ளித் தரப் போகிறார், எதில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக்காரர்களின் ராசி அதிபதி செவ்வாய். செவ்வாய் என்பது சக உதிரகாரகரன், போர்காரகன், ரத்த காரகன், நிலமகன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு ஆறாம் வீட்டுக்கும் அதிபதியாக வருகிறார். பொதுவாக விருச்சிகக்காரர்களைப் போல யோகம் செய்தவர்கள் யாரும் இல்லை. அதேசமயம் பிரச்னைகளைச் சந்திப்பவர்களும் யாரும் இல்லை என்று சொல்லலாம்.
இவர்களுடைய பல விதமான பிரச்னைகளுக்கு இவர்களே மூலக் காரணம் என்றே சொல்லலாம். ராசியாதிபதியே ஆறாம் வீட்டுக்கும் அதிபதியாக வருவதால் இவர்களுடைய நோய், வழக்கு, எதிரி இவர்களே காரணமாக அமைவார்கள். இவர்களுடைய எதிரிகளை இவர்களே உருவாக்குவார்கள். பின்னர், அவர்களை மெதுவாக வெற்றி அடைவார்கள். இதற்கு முன்பு ஏழரை சனியில் இருந்தபோது ஏராளமான பிரச்னையை சந்தித்திருப்பார்கள்.
ஏழரை சனி முடிந்த உடனேயே அர்த்தாஷ்டம சனி தொடங்கியது. இப்போது இவர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. ராசிக்கு குரு பார்வை கிடைத்ததால் உங்களுடைய விஷயங்கள் ஏதோ நடந்து கொண்டிருக்கும். ஆனால், கைகளுக்கு எந்தப் பலன்களும் வந்திருக்காது. சனி ஆறாம் வீடு, பத்தாம் வீடு, ஜென்ம ராசியைப் பார்ப்பதால் ஜான் ஏறினால் முழம் சறுக்குகிற நிலை இருந்திருக்கும்.
இவர்களது இடம், வீடு, வாகனம் தொடர்பான சொல்லிக் கொள்ள முடியாத பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் 2025 சனிப்பெயர்ச்சியால் அர்த்தாஷ்டம சனி பூரணமாக விலகுகிறது. இதனால், குழந்தைகள், வீடு, வாகனம், தாய் தொடர்பான விஷயங்கள், ஆடம்பரம் போன்ற அனைத்து விஷயங்களிலும் இவர்களுக்கு ஏற்றம் இல்லை என்றாலும் எந்தவொரு இறங்குமுகமும் இருக்காது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் சுப பலன்கள் உண்டாகும்.
சனி 11 ஆம் வீட்டை பார்ப்பதால் லாபம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்பில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சனி குருவின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தன ஸ்தானத்தில் பிராப்தம் ஏற்படும். கடன்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். லாபம் அதிகரிக்கும். நிலம், வீடு வாங்க வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய தொடங்குவீர்கள்.
கணவன், மனைவிக்கிடையே சண்டை, சச்சரவுகள் வருவதைத் தடுக்க வேண்டும். உங்களுடைய ஜாதகத்துக்கு அனுகூலமான பலன்களை ஐந்தாம் இடத்தில் சனி பகவான் அமர்ந்து கொடுக்கவுள்ளார். சத்ரு தொல்லை, எதிரி தொல்லை, நோய் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கவனமாக இருக்க வேண்டியவை: முதலீடு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குரு அஷ்டமத்தில் மறைகிறார். நான்காம் இடத்தில் ராகு இருந்தாலும் குரு பார்வையில் இருக்கிறார். குறிப்பாக, கடன் கொடுப்பது, முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
கல்வி: மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் ஏற்படும். புதிய முயற்சிகள், தொழில்நுட்பத் துறை, சட்டத் துறை, தகவல் தொடர்புத் துறை போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல அபிவிருத்தியான காலகட்டமாக இருக்கும்.
பெண்கள்: விருச்சிக ராசி பெண்களுக்கு ராசியாதிபதி செவ்வாய் அஷ்டமத்தில் மறைகிறது. செவ்வாய் என்பது கணவனைக் குறிக்கும். அதனால், உடல் நிலை, கணவர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் மனதில் பட்டதை பேசுவார்கள். யாரிடம் பேசினாலும் கவனமாகப் பேசுவது நல்லது. செவ்வாய் என்பவர் தொடக்கத்தில் 9 ஆம் வீட்டில் நீச்சம் என்பதால் தந்தையின் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரங்கள்: ராசியாதிபதி செவ்வாய் என்பதால் பொதுவாக இவர்களுக்கு முருக வழிபாடு மற்றும் குரு வழிபாடு கைகொடுக்கும். சனி கிரகத்திற்கு பிரத்யேக வழிபாடு தேவையில்லை. அதனால், ஸ்கந்த வழிபாடு, யாரை குருவாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை குரு வழிபாடு செய்வது நல்ல அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். 100க்கு 90 சதவீதம் இவர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications