சனிப்பெயர்ச்சி 2025: தனுசு ராசிக்காரர்களே பண வரவு கொட்டும்.. ஆனா இதுல மட்டும் கவனமா இருங்க
சனிப்பெயர்ச்சி பலன் 2025: தனுசு ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் சனி பகவான் வந்து அமர்கிறார். அதேபோல, ஏழாம் பார்வையாக குரு பார்க்கிறார். இதனால், திருமணம், குழந்தை பாக்கியம், பணவரவு என என்னென்ன அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போகிறது, எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Sani Peyarchi for dhanusu)
வரும் 2025 புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடையவுள்ளார். அஷ்டம குருவால் பல்வேறு கஷ்டங்கள், துன்பங்களால் தவித்து வந்தவர்களுக்கு பல்வேறு நல்ல பலன்களை கொடுத்து ஏற்றம் அடையச் செய்யவுள்ளார் சனி பகவான்.

நீங்கள் செய்யும் நல்லது, கெட்டது என அனைத்து கர்மங்களுக்கும் ஏற்ற அனைத்துப் பலன்களையும் அள்ளித் தருவார் சனி பகவான். சனி பகவான் துலாம் ராசியில் உச்சமடைகிறார். அதாவது, பிளஸ்ஸாக இருந்தாலும், மைனஸாக இருந்தாலும் மொத்தமாக கணக்கைத் தீர்ப்பவர் சனி பகவான்.
அந்த வகையில், சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு பல்வேறு நல்ல பன்கள் கிடைக்கப் பெற்றாலும், பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். (Sani Peyarchi for dhanusu).
தனுசு ராசியைப் பொருத்தவரையில் ஏழரை சனி முடிந்துவிட்டது. ஆனால், அர்த்தாஷ்டம சனி ஆரம்பமாகிறது. இதனால், நான்காம் வீட்டில் சனி பகவான் வந்து அமர்கிறார். இரண்டாம் அதிபதி, மூன்றாம் அதிபதி 4 ஆம் வீட்டுக்கு வந்து அமர்கிறது. ஏழரை சனியில் வந்த பாதிப்புகளின் பாதி இந்த அர்த்தாஷ்டம சனியில் வரும். ஆனால், சனி பகவான் குருவின் வீட்டில்தான் அமர்ந்திருக்கிறார்.
ஏழாம் பார்வையாக குரு பார்ப்பதால் நிலம், வீடு போன்றவற்றை விற்பதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். வீட்டில் சங்கடங்கள் தீரும். பணத் தட்டுப்பாடுகள் நீங்கும். லாபம் பெருகும். ராசி, லக்னத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் ராகு அமருவதால் தைரியம் பெருகும். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும்.
திருமண பாக்கியம், குழந்தை செல்வம் உண்டாகும். குடும்பமும், மகிழ்ச்சியும், சந்தோஷமும், குல தெய்வ வழிபாடும் என ஆசிர்வாதம் நிறைந்த ஆண்டாக இருக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் லாபங்கள் உண்டாகும். பண வரவு, பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அலுவலக வேலைகளில் அழுத்தம் அதிகரிக்கும்.
சனி பகாவன் நாலாம் வீட்டில் அமர்வதால், வாகனம், மனை போன்ற விஷயங்களில் சிறு நெருடல்கள் ஏற்படும். மாத்ரு ஸ்தானம், இடம், வாகனம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். வீடு, நிலம், கட்டுமானத் துறை, வங்கித் துறை, ஆசிரியர் துறை, உற்பத்தி துறை போன்றவற்றில் சாதிப்பீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: வார்த்தைகளைக் கொடுக்கும்போது பக்குவமாக யோசித்துதான் பயன்படுத்த வேண்டும். சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும்போது ராசியாதிபதி, நட்சத்திராதிபதி, உத்திரட்டாதிக்கு அதிபதிக்கு சனி தனுசுக்கு மூன்று அதிபதியாக வருவதால் சகோதரர்களுடனான பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, இடம், பாகப்பிரிவினை போன்ற விஷயங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி, வியாபார கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நெருடல்கள் வராமல் தங்களை புத்திசாலித்தனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தனுசு ராசிக்காரர்கள் உங்களுடைய விஷயம் என்னிடம் இருக்க கூடாது, என்னுடைய விஷயம் உங்களிடம் இருக்க கூடாது என்று பர்ஃபெக்டாக இருப்பார்கள்.
தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். கடன் வாங்குவதற்கு சனி உங்களைத் தூண்டும். நான்காம் இடத்தில் இருக்ககூடிய சனி பகவான் மூன்றாம் பார்வையாக ஆறாம் இடத்தை பார்க்கிறது. எனவே, கடன் வாங்குவது தேவையா, அபிவிருத்தி ஏற்படுமா என்பது போன்ற விஷயங்களை புத்திசாலித்தனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நான்காம் இடத்தில் இருக்கக்கூடிய சனி ஜென்ம ராசியை பத்தாம் பார்வையாக பார்ப்பதால் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள்: கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாளை பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிவைக்க கூடாது. ராசியை இந்த காலகட்டங்களில் குரு பார்க்கிறது. எனவே, குருவின் ஆலோசனையைக் கேட்டு செல்வது நன்மை இயக்கும்.
ராசிக்கு குரு பார்வை இருப்பதால் பெண்களுக்கு சுப காரியங்கள் நடக்கும். புத்திரர்கள் விஷயங்களில் டென்ஷனாகாமல் யோகா, தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். வெளிநாட்டு வாய்ப்பாக இருப்பினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பரிகாரங்கள்: கடினமான உடல் உழைப்பை வெளிப்படுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும். துப்புரவுத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது, வாழ்வை இழந்த நபர்களுக்கு உதவுவது, பைரவருக்கு உணவிடுவது, காகத்துக்கு உணவிடுவது ஆகியவற்றை செய்வது நல்ல பலனைத் தரும். குரு வழிபாடு, ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு, நரசிம்மர் வழிபாடு அனுகூலத்தை உண்டாக்கும். இந்த 2025 சனிப்பெயர்ச்சி 100க்கு 65 சதவீத நல்ல பலன்களைக் கொடுக்கும்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications