Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்பிக்கைத் துரோகத்திற்கு தண்டனை...காலம் பார்த்து தண்டிப்பார் சனி - எச்சரிக்கை!

சனிபகவான் யாரை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி தண்டனை தருவார் தெரியுமா? நம்பிக்கை துரோகம் செய்பவர்களை நேரம் பார்த்து தண்டிப்பார் சனிபகவான்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனி பகவானுக்கு பிடிக்கும். அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படுபவர்களை ஏழரை சனி காலத்தில் பிடித்து அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி விடுவார் சனிபகவான்.

சிலருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்படும். மன நலம் கூட பாதிக்கப்படும். காரணமே இல்லாமல் வேலை போகும். என்ன ஆச்சு நேரம் சரியில்லையே என்று யோசிப்பார்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் ஜோதிடர்களிடம் பார்ப்பார்கள். அவர்களுக்கு நடைபெறும் தசாபுத்தி, கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பலன் சொல்வார் ஜோதிடர். சனிபகவானை வைத்து நன்மை, தீமைகள் பலரும் நடைபெறும் எனவேதான் சனி பெயர்ச்சியை எல்லோரும் ஒருவித அச்சத்தோடும் ஆர்வத்தோடும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

சனியின் பார்வை படும் இடம் பாழ் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் நல்ல மனம் படைத்தவர்கள், உதவி செய்யும் குணம் கொண்டவர்களை சனிபகவான் தண்டிக்க மாட்டார். நவ கிரகங்களில் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகம். இரண்டரை ஆண்டுகாலம் ஒருவரின் ராசியில் தங்கியிருந்து நல்லதும் கெட்டதுமாக பலன்களை கொடுப்பார் சனிபகவான்.

சுத்தம் இல்லாத வீடுகள்

சுத்தம் இல்லாத வீடுகள்

விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்கள் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். சுத்தம் இல்லாத குப்பைகள் நிறைந்த இடம் சனி பகவானுக்கு அதிகம் பிடிக்கும். அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி பகவான் நீங்காமல் நிரந்தரமாக இருப்பார். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார். குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனி பகவானுக்கு பிடிக்கும். அவர்களை பிடித்துக்கொள்வார்.

யாரை சனிக்கு பிடிப்பார்

யாரை சனிக்கு பிடிப்பார்

உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனி பகவானுக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார். ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனி பகவான்க்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார். முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி பகவான் மிகவும் பிடிக்கும். தலைக்கனம் கொண்டவர்களைப் பிடித்து தலையில் தட்டி குட்டி வைப்பார் சனிபகவான்.

சனி கொடுக்கும் தண்டனை

சனி கொடுக்கும் தண்டனை

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனி பகவானுக்கு பிடிக்கும். மாற்றான் மனைவியை அநியாயமாக அடைய நினைக்கும் சன்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனி பகவானுக்கு நிகர் சனியே.

தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து சரியான தண்டனை தருவார். பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தருவார் சனிபகவான்.

காகத்திற்கு உணவு கொடுக்கள்

காகத்திற்கு உணவு கொடுக்கள்

கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் கொண்டு இறைவனை பூஜிப்பவர்களை சனி எதுவும் செய்யமாட்டார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை. காகத்திற்கு எள் கலந்த வைத்து என்னாளும் துதிப்பவரை சனி பகவான் நெருங்குவதே இல்லை. வலம்புரி சங்குள்ள வீடு சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி பகவான் படுத்துவதில்லை.

ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு பிடித்தமானது.

மன சுத்தம் அவசியம்

மன சுத்தம் அவசியம்

சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் அன்னை மகாலட்சுமி. அந்த இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி பகவான். எனவே உடல் சுத்தம் மட்டுமல்லாது மனது சுத்தத்தோடு இருப்பவர்களை சனி தண்டிக்க மாட்டார். சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார் சனிபகவான்.

சனி பகவானின் பாசப்பார்வை

சனி பகவானின் பாசப்பார்வை

நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை. பிரதோஷ வழிபாடு செய்பவர்களை சனி பிடிப்பதில்லை. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி பகவான் கருணையுடன் பார்ப்பார். ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி பகவான் நேசிப்பார். ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பகவான் பீடிப்பதில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+