சனி பெயர்ச்சி பலன் 2023 - புண்ணிய சனி..திடீர் ஜாக்பாட் அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். துலாம் ராசிக்காரர்களே உங்களை ஆட்டி வைத்த அர்த்தாஷ்டம சனி முடியப்போகிறது. புண்ணிய சனி தொடங்கப்போவதால் இதுநாள்வரை இருந்த தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும் காலம் வரப்போகிறது.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 4 மற்றும் 5ஆம் அதிபதி. அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார்.
முன்ஜென்ம புண்ணியங்கள் உங்களுக்கு கிடைக்கப்போகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் ஆறாம் இடத்தில் பயணம் செய்வது சிறப்பு. நிறைய ஆதாயங்கள் கிடைக்கப்போகிறது. கும்ப சனி குதூகலத்தை தரப்போகிறார்.

பூர்வ புண்ணிய சனியால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும், குதூகலம் கூடும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது. அதிர்ஷ்ட சனியாக அமையப்போகிறது. சனி பகவான் ஆயுள்காரகன். உங்கள் ராசியில் உச்சம் பெறக்கூடியவர். உங்களுக்கு நன்மையே செய்யக்கூடியவர். வேலையில் பதவியில் முன்னேற்றம் புரமோசன் ஏற்படும்.

துலாம் ராசி புண்ணிய சனி

துலாம் ராசி புண்ணிய சனி

சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் உங்கள் அறிவும் திறமையும் வளர்ச்சி அடையும். சனிபகவானின் பார்வை கும்பம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. பிள்ளைகள் மூலம் முன்னேற்றம் அதிகரிக்கும். நிறைய நல்லது நடக்கப்போகிறது.
மாணவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. வெளியூர், வெளிநாடு பயணம் செல்வதற்கான நேரம்வந்து விட்டது.

பண வரவு

பண வரவு

கணவன் மனைவி இடையே சில நேரங்களில் கார சார விவாதங்கள் வரக்கூடும். குடும்ப தேவைகள் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். வீடு மனை வாங்குவீர்கள். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். உங்களுக்கு அதிக நன்மைகள் நடக்கப்போகிறது. தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும், திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும். வீட்டில் எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும்.

சுப காரியங்கள்

சுப காரியங்கள்

அர்த்தாஷ்டம சனியால் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். இன்னும் சில மாதங்கள்தான் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

வீடு, வாகனம் வாங்க நல்ல காலம்

வீடு, வாகனம் வாங்க நல்ல காலம்

வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் நம்பினால் வெற்றி பெற முடியும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகவோ அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது எனவே பத்திரப்படுத்துங்கள்.

பண விசயங்களில் கவனம்

பண விசயங்களில் கவனம்

பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு செய்யக் கூடாது. ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவர். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும் என்பதால் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும்.

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்

பெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் குதூகலமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் ஏற்படும்.

சனி பார்வையால் சந்தோஷம்

சனி பார்வையால் சந்தோஷம்

சனிபகவான் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சுபகாரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களின் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யும் காலமாக அமையும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து வர அதிக நன்மைகள் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+