Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா.. கும்பத்திற்கு இடம் மாறும் சனி பகவான்.. யாருக்கு கோடீஸ்வர யோகம்

Subscribe to Oneindia Tamil

திருநள்ளாறு: திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. வாக்கிய பஞ்சாங்கப்படியே திருநள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் முதல் வாரத்தில் சனி பெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ராசிக்கு என்ன சனி நடைபெறுகிறது யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

சனி பகவான்: சனி என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் பயம்தான் நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள்.

Sani Peyarchi Palan 2023: Tirunallaru Shanibhagavan temple gear up Sani Peyarchi vizha

நீதிமான் சனி பகவான்: ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. அதனால்தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை 30 ஆண்டுகள் தாழ்ந்தாரும் இல்லை என்ற கருத்து நிலவுகிறது. சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும். பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது.

சனி பெயர்ச்சி: சனிபெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவானை வேண்டினால் சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை தரிசித்து வருகின்றனர்.

திருநள்ளாறு: சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனிபகவான் கோவில் நிர்வாகம் முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் டிசம்பர் முதல் வாரத்தில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

சனி பெயர்ச்சி எப்போது: சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைந்தார். அந்த நாளில் திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதே போல இந்த ஆண்டு சனி பெயர்ச்சி விழா டிசம்பர் முதல்வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருகை: சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஐஏஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்ப ராசியில் சனி: சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் லாப சனி என பலன்கள் கிடைக்கும். சனிபகவானை பார்த்து நல்லது நடப்பதற்கு நன்றி சொல்லி விட்டு வாருங்கள். மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள்.

மேஷம்: மேஷ ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. தொழில் வியாபாரத்தில் லாபங்களை அள்ளிக்கொடுப்பார் சனிபகவான். சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு சனிபகவான் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தேடி தரப்போகிறார்.

மிதுனம்: சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். அஷ்டமத்து சனி முடிந்து விட்டது. அலைச்சல் நீங்கி விட்டது. நல்ல வேலை கிடைக்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். சனிக்கிழமை காலையில் சனி ஹோரையில் சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்: கண்டச்சனி காலமாக இருந்தாலும் சனி பகவான் உங்களுக்கு சாதகமே செய்வார். ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். சிலர் வேலை விசயமாக குழந்தைகளை விட்டு பிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. பண வருமானம் அதிகரிக்கும். எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும்.

கன்னி: ருண ரோக சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாம் வீட்டில் அமரும் சனியால் அபரிமிதான யோகங்களை பெறப்போகிறீர்கள். பணவரவு சீராக இருந்து வரும். எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு வரும். எதிரிகள் பிரச்சினை, கடன் பிரச்சினை நீங்கும். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

துலாம்: பூர்வ புண்ணிய சனியால் துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு அற்புதமான வாய்ப்பு. கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வங்கியில் கடன் வாங்கி வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும்.

தனுசு: ஏழரை சனி முடிந்து விட்டது அற்புதமான கால கட்டம். நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். பணம் பல வழிகளில் இருந்தும் வரும்.

பரிகாரம்: இந்த சனிப்பெயர்ச்சி காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சனி சாந்தி பூஜை செய்ய வேண்டும். கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்யலாம். எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைக்கலாம். சனிபகவானின் அருளினைப் பெற அனுமன், விநாயகரை வணங்கலாம். சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+