Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பிரதோஷம்.. ஆனி பவுர்ணமி.. சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க டிக்கெட் போடுங்க

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சனி பிரதோஷம், ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மழை பெய்யும் பட்சத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலையில் உள்ள புகழ்பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு.

Sani Pradosham, Aani Pournami devotees are allowed to Sathuragiri sundaramahalingam temple

நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது சதுரகிரி. மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், பஞ்சபூத லிங்கம் என்பர். இந்த மகாலிங்க மலையை 'சித்தர்கள் வாழும் பூமி' என்று அழைக்கின்றனர்.

சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது.

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர், சித்தர்கள் நிறைந்த பூமியை தரிசிக்க ஏராளமானோர் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சதுரகிரிக்கு வந்து செல்கின்றனர்.

பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமான இந்த கோவிலுக்கு மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட பகுதிகளில் பாதை உள்ள போதிலும் தற்போது விருதுநகர் மாவட்ட தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து தான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் பிரதோஷம் பௌர்ணமி அமாவாசை என மாதம் 8 நாட்கள் மட்டுமே இங்கு மலையேறி சாமி தரிசனம் செய்ய முடியும். அந்த வகையில் தற்போது சனி பிரதோஷம், ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு வரும் ஜூலை 1 முதல் 4 வரையிலான நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Sani Pradosham, Aani Pournami devotees are allowed to Sathuragiri sundaramahalingam temple

ஜூலை 1ஆம் தேதி சனி பிரதோஷம், 2ஆம் தேதி சிவராத்திரி, 3ஆம் தேதி ஆனி பவுர்ணமி குருபூர்ணிமாவாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சதுரகிரி மலையேறி சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்யலாம். 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்து உள்ளது. சனி பிரதோஷத்தை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+