சனிபகவானின் பார்வையால் படிப்பில் மந்தமா? அனுமனை சரணடையுங்கள்! #சனிப்பெயர்ச்சி

நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட திடீர் என்று படிப்பில் மந்தமாகிவிடுவார்கள் அதற்குக் காரணம் தசாபுத்தி, சனிபகவானின் பார்வை, சஞ்சாரம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சனிப்பெயர்ச்சி 2017-2020: புதிய வேலைவாய்ப்பு, வெளிநாட்டு யோகம் யாருக்கு?

    சென்னை: படிப்பில் திடீரென குழந்தைகள் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்கள். ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் புத்தியில் ஏறவே ஏறாது. இதற்குக் காரணம் சனிபகவானின் தாக்கம்தான். பரிகாரம் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

    சனிபகவான் மந்தமான கிரகம். எனவே சனிபகவானின் பார்வை, சஞ்சாரத்தைப் பொருத்து படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும். எனவே பெற்றோர்கள் ஜாதக நோட்டை எடுத்துக்கொண்டு போய் என்ன பிரச்சினை அதற்கு பரிகாரம் செய்வது பற்றி கேட்பார்கள்.

    விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஏழரை சனி காலமாகும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அட்டம சனியாகவும், மிதுனம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாகவும், கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் இருக்கிறார் சனிபகவான். இவர்கள் ஆஞ்சநேயரையும், முழுமுதற்கடவுள் விநாயகரையும் வணங்கவும்.

    படிப்பில் கவனம்

    படிப்பில் கவனம்

    சனிபகவான் 7வது இடத்தில் இருந்து 8வது இடத்தில் கண்டக சனியாக இருந்தவர் அஷ்டமத்து சனியாக மாறுகிறார். சனிபகவான் யோகாதிபதி உங்களுக்கு சோதனை தருவார் வேதனை தரமாட்டார். படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை புரிந்து படிக்க வேண்டும்.

    அக்கறை காட்டவும்

    அக்கறை காட்டவும்

    சனிபகவான் தனது 10வது பார்வையாக உங்கள் ராசிக்கு 5வது இடத்தை பார்க்கிறார். இது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் உங்கள் குழந்தைகள் இடத்தில் எச்சரிக்கை தேவை. அவர்கள் படிப்பில் அக்கறை காட்டவும். விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் துன்பங்களில் இருந்து விடுபடலாம். இது பொது பலன்தான். தசாபுத்தி சரியாக இருந்தால் நன்மையே நடக்கும்.

    நோய் நொடிகள் தீரும்

    நோய் நொடிகள் தீரும்

    சனிபகவான் இதுநாள் வரை 4வது இடத்தில் அர்த்தாஸ்டம சனியாக இருந்து தொல்லைகள் கொடுத்தார். டிசம்பர் 19 முதல் 5வது இடத்திற்கு வருகிறார். இதுநாள்வரை சிரமத்தில் இருந்தவர்கள் விடுதலை பெறுகிறார்கள். நோய் நொடிகள் பிரச்சினைகள் தீரும்.

    குழந்தைகளை கவனியுங்கள்

    குழந்தைகளை கவனியுங்கள்

    பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அல்லல்பட்டவர்களுக்கு வியாதிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் நாட்டம் குறையும். குழந்தைகளை கண்காணியுங்கள். திருவாதவூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரனை வழிபடலாம்.

    அச்சம் வேண்டாம்

    அச்சம் வேண்டாம்

    ராசியின் 3வது இடத்தில் இருந்து ராசிக்கு 4வது இடத்திற்கு அர்த்தாஸ்டம சனியாக இடம் பெயர்கிறார். சனிப்பெயர்ச்சி பல மாற்றங்களை ஏற்படும். புதனும், சனியும் நண்பர்கள் என்பதால் தொல்லைகள் ஏற்படும் என்று அஞ்ச வேண்டாம்.

    மாணவர்கள் கவனம்

    மாணவர்கள் கவனம்

    மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். எனவே படிப்பில் மந்தமாக இருக்கும். சின்னச் சின்ன உடல்வலிகள் வந்து நீங்கும்.கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சனிபகவானை வணங்கினால் ஏற்றங்கள் ஏற்படும்.

    விருச்சிகம் கவனம் தேவை

    விருச்சிகம் கவனம் தேவை

    ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கும் உங்களுக்கு இனி பாத சனியாக இரண்டரை ஆண்டுகள் பயணிக்கப் போகிறார். ஏழரை முடியும் போது பலவித நல்ல பலன்களை கொடுத்து விட்டு செல்வார் சனிபகவான். துன்பங்கள் குறையும், நன்மைகள் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு கவனச்சிதறல்

    மாணவர்களுக்கு கவனச்சிதறல்

    மாணவர்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 4வது ஸ்தானத்தை பார்ப்பதால் படிப்பில் கவனம் தேவை. ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வார்த்தைகளில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை வணங்கலாம்.

    படிப்பில் மந்தநிலை

    படிப்பில் மந்தநிலை

    ராசிக்கு ஜென்மத்தில் அமர்கிறார் சனிபகவான். சனிபகவான் ஜென்மசனியாக தொடர்கிறார். 11வது இடத்தில் இருக்கும் குரு பகவானால் நன்மையே கிடைக்கும்.
    தைரிய ஸ்தானதிபதி சனிபகவான் உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். எனவே பயம் வேண்டாம். அதே நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஏழரை சனி காலமாக இருப்பதால் முதல் சுற்றில் உள்ள மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலையே ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும்.
    ஈச்சனாரி விநாயகப் பெருமானை வழிபடுங்கள். ஏழரை சனியினால் ஏற்படும் துன்பங்கள் விலகிடும்.

    வம்பு வழக்குகள் வரலாம்

    வம்பு வழக்குகள் வரலாம்

    சனிபகவான் 12வது இடத்தில் விரைய சனியாக அமைகிறார். ஏழரை சனி ஆரம்பிக்கிறது.
    பயம் வேண்டாம். சனி பகவான் இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. நாக்குல சனி என்பார்கள். வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். எதை பேசினாலும் பிரச்சினை வரலாம் என்பதால் வாயை மூடி பேசவும்.

    உணவில் கவனம்

    உணவில் கவனம்

    ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். எனவே நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மாணவர்கள் வெளியில் விற்கும் உணவுகள் கண்டதையும் வாங்கி சாப்பிட வேண்டாம். கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவலில் சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்கினால் நன்மை கிடைக்கும்.

    கருமசனியில் கவனம்

    கருமசனியில் கவனம்

    ராசிக்கு 9வது இடத்தில் இருந்து சனிபகவான் 10வது இடத்திற்கு வருகிறார். இது கரும ஸ்தானம். வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். வேலை கசக்கி பிழியும். எனவே உடலில் அசதி ஏற்படும். மாணவர்கள் கெட்ட நண்பர்களின் சகவாசத்தை வெட்டி விடுங்க. மலைபோல் வரும் துன்பங்கள் பனிபோல விலக காக்கைக்கு எள் சாதம் வைக்க வேண்டும். ஆஞ்சநேயரின் அம்சமாக உள்ள ராகவேந்திரர் ஸ்வாமிகளை வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள் நன்மையே நடக்கும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+