For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விருச்சிகத்தில் சனி இருந்தால்.. தமிழகத்தில் விபரீதம் நேரிடும்? #சனிப்பெயர்ச்சி2017

விருச்சிக ராசியில் சனிபகவான் வந்து அமர்ந்த போதெல்லாம் தமிழக அரசியலில் பல விபரீத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    அட்டம சனி, அர்த்தாஷ்டம சனியா?...கலங்க வேண்டாம்- வீடியோ

    சென்னை: சனிபகவான் செவ்வாய் வீடான விருச்சிகத்தில் சஞ்சாரிக்கும் பொழுதெல்லாம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

    செவ்வாயும் சனியும் பகை கிரங்கள். பகை வீட்டில் சனி சஞ்சாரிக்கும் போதெல்லாம் மிகப்பெரிய மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன.

    விருச்சிகம் நீர் ராசி இந்த ராசியில் நெருப்பு கிரகமான செவ்வாய் சனியோடு இணைந்திருக்கும் போது பெருவெள்ளம், புயல் நிகழ்ந்திருக்கிறது.

    சனிபகவான் மேஷம் - சிம்மம் - விருச்சிகம் ஆகிய ராசிகளில் சஞ்சாரம் செய்யும்போது நாட்டில் புயல், கனமழை, வறட்சி, ஆட்சியில் மாற்றங்கள் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும். செவ்வாய், சூரியன் சனிக்கு பகை என்பதனால்தான் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    தனுசுக்கு இடம்பெயரும் சனி

    தனுசுக்கு இடம்பெயரும் சனி

    சனிபகவான் பெயர்ச்சி ஆகி ரிஷபம் - கன்னி - தனுசு ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கும்போது சிக்கல்களுக்கு தீர்வுகள் ஏற்படும். சனிபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைய உள்ளார்.

    1955 டிசம்பர் சனிப்பெயர்ச்சி

    1955 டிசம்பர் சனிப்பெயர்ச்சி

    1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி சனி பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறினார்.

    1956 நவம்பரில் 200 பேரை பலி கொண்ட அரியலூர் ரயில் விபத்து நிகழ்ந்தது.

    1957 ஏப்ரல் மாதம் ஒரணா இரண்டணா என்று இருந்த நயா பைசா முறை ஒழிந்து, தசம நாணய முறைக்கு நாடு மாறியது. ஒரு ரூபாய்க்கு 100 காசுகள் என்ற நடைமுறை வந்தது.

    1957ஆம் ஆண்டு கடும் வறட்சி நிலவியது.

    எம்ஜிஆர் மரணம்

    எம்ஜிஆர் மரணம்

    1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி அன்று வியாழக்கிழமை சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். 1986 - 1987 ஆம் ஆண்டு கடும் வறட்சி நிலவியது.

    1987 டிசம்பர் மாதம் எம். ஜி. ஆர் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அதிமுக பிளவுபட்டது.

    வறட்சியும் வெள்ளமும்

    வறட்சியும் வெள்ளமும்

    2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.44க்கு சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். 2015ஆம் ஆண்டு நூற்றாண்டுகளில் இல்லாத மழை வெள்ளம் ஏற்பட்டது. 2016 ஆம் ஆண்டு மழை குறைந்து கடும் வறட்சி ஏற்பட்டது. சென்னையை வர்தா புயல் தாக்கியதில் தலைநகர் சிதைந்து சின்னாபின்னமானது.

    ஜெயலலிதா மரணம்

    ஜெயலலிதா மரணம்

    2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது.

    2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார்.

    2016 பிப்ரவரி மாதம் அதிமுக பிளவு பட்டது. கட்சியும், கொடி, சின்னம் முடக்கப்பட்டது.

    English summary
    MGR and Jayalalithaa death connection with Sani transits in Viruchigam rasi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X