பாவங்கள் போக்கும் ஸ்ரீராமநவமி…. விஷ்ணு ஆலயங்களில் உற்சாக கொண்டாட்டம்!
ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராமநவமி இந்தியா முழுவதும் உள்ள விஷ்ணு ஆலயங்களில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் கோதண்டராமர், மாதவப் பெருமாள் ஆலயங்களிலும், ஆஞ்சநேயர் ஆலயங்களிலும் ஸ்ரீராமநவமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீராம நாமத்திற்கு இணையான ஒரு வேதம் கிடையாது... மகாவிஷ்ணு மனிதனாக அவதரித்து மானிடர்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தவர்.
அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும்.

ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் வாழ்ந்து காட்டிய ராமர், ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டியவர். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம்.
அஷ்டமி - நவமி
‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.
இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், என்றும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராம நவமி
இன்று ஸ்ரீராமபிரானின் அவதாரத் திருநாளாகும். ஸ்ரீராம நவமி விழா விஷ்ணு ஆலயங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன்-பத்து எனவும், பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின்-பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்
இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். ஸ்ரீராம நவமியன்று வைணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். பஜனைகள், இராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.
நீர்மோர், பானகம்
வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு. ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிக்கலாம்.
கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம்
உருவானது.
ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், வனவாசத்தின் போதும் தாகத்திற்கு நீர் மோரும், பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது என்கின்றன புராணங்கள்.
ஸ்ரீராமநவமி விரதம்
ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வதும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது.
காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராமநவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.
ஸ்ரீராம நாமம்
இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ஸ்ரீராமநவமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அன்று ஒருவேளையாவது பட்டினி இருப்பது நல்லது. பகல் முழுக்க உபவாசம் இருப்பவர்கள், வீட்டில் சுத்தமாக தயார் செய்த நீர்மோர் (காரம் சேர்க்காமல்) பருகலாம். மாலையில், உள்ளூர் கோயில் முன்பு ஊர்மக்கள் ஒன்று கூடி, 'ஸ்ரீராம ஜயராம் ஜயஜய ராம்'' என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லியபடியே ஊரைச் சுற்றி வர வேண்டும். கோயிலை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் இதே மந்திரத்தைச் சொல்ல வேண்டும். நீர்மோர், வெள்ளரிக்காய், பானகம் படைத்து ராமபிரான் படத்துக்கோ, சிலைக்கோ பூஜை செய்ய வேண்டும். ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
ராமாயணம் பாராயணம்
ராமநவமிக்கு மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, கம்பராமாயணத்தில் ராம பட்டாபிஷேகத்தை வர்ணிக்கும் பகுதியை பாராயணம் செய்ய வேண்டும். இதை 'புனர்பூஜை' என்பர். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் வால்மீகி ராமாயணத்தில் உள்ள ராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் செய்யலாம்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள மாதவப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீராமநவமி உற்சவம் கடந்த 10 தினங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். நன்மங்கலம் திரிநேத்ர தசபுஜ வீர மங்கள ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் கடந்த 19ஆம்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நோய் நொடிகள் தீரும்
ஸ்ரீராம நவமி தினமான இன்றைய தினம் (சனிக்கிழமை) காலை விஸ்வரூபம் மற்றும் சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணியளவில் சீதா கல்யாண வைபவமும், இரவு 7.30 மணியளவில் ராமர் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணியளவில் ராமநாம எழுத்துப்போட்டி நடக்கிறது. ஏப்ரல் 4 ஆம்தேதி(சனிக்கிழமை) ஆஞ்சநேயர் உற்சவத்துடன் லட்சார்ச்சனை நிறைவுபெறுகிறது.
ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமனை வணங்கி வழிபட்டால் நோய், நொடி விலகும். பாவங்கள் தீரும். வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் நம்மை வந்து சேரும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications