சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்..வீட்டில் அதிர்ஷ்ட மழை!
அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறீர்கள்..பண வருமானம் அதிகம் வந்தாலும் கடன் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்திலும் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டில் நவகிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறார்கள். சனி, குரு, ராகு கேதுவின் பயணங்களால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சோபகிருது தமிழ் புத்தாண்டில் சனி பகவான் கும்பம் ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். முக்கியமான கிரகங்களான குரு, ராகு கேதுவின் பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படப்போகின்றன.
குரு பகவான் சித்திரை மாதத்திலேயே மேஷ ராசியில் உள்ள ராகு உடன் இணையப்போகிறார். ஐப்பசி மாதத்தில் ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். கிரகங்களின் இந்த இடப்பெயர்ச்சியால்

மேஷ ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு ஆரம்பத்திலேயே குரு பகவான் உங்கள் ராசிக்கு வருகிறார். ஜென்ம குருவினால் உங்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கப்போகிறது. ஜென்ம ராசியில் அமரப்போகும் குருபகவான் உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரப்போகிறார். உங்கள் ராசியில் 5,7,9ஆம் இடங்களை பார்வையிடுவது சிறப்பு. மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத பயணங்கள் நடைபெறும். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள்.
காதல் திருமண யோகம் கைகூடி வரும். காதல் கனிந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்காக தவம் இருப்பவர்களுக்கு வரமாக இந்த ஆண்டு புத்திரபாக்கியம் கைகூடி வரப்போகிறது. நிறைய பண வருமானம் வரப்போகிறது. சொந்த பிசினஸ் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். பெரிய அளவில் கடன் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அகலக்கால் வைத்து விட்டு அவதிப்படாதீர்கள். இந்த ஆண்டு நிறைய ஆன்மீக பயணம் செல்வீர்கள்.
பெரிய கம்பெனிகளில் நல்ல வேலை கிடைக்கும். அலுவலகம் வேலை செய்யும் இடத்தில் மாற்று பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. குரு பகவான் பயணம் மற்றும் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதுவரை பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடாதீர்கள். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம். புதிய பதவிகள் தேடி வரும்.

சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டினை சனிபகவான் பார்ப்பதால் கடன் பிரச்சினைகள் நீங்கும், நோய்கள் முடிவுக்கு வரப்போகிறது. சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை. கேது பகவான் 7ஆம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார் எனவே கவனமும் பொறுமையும் அவசியம். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும், ஜாக்பாட் மூலம் பெரிய அளவில் பண வருமானம் வரப்போகிறது என்றாலும் பண விசயங்களில் கவனம் அவசியம்.
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடிவரப்போகிறது. வெளிநாடு சென்று படிப்ப நல்ல காலம் கைகூடி வரப்போகிறது. குருவின் பயணத்தால் உங்களுக்கு உயர்வுகள் நிச்சயம் கிடைக்கும். ஐப்பசி மாதத்திற்குப்பிறகு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு இடமாற்றமும் ஊர் மாற்றமும் ஏற்படும். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் அருள் உங்களுக்கு கிடைக்கிறது. சனிக்கிழமை நாளில் அனுமனையும், விநாயகரையும் வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications