சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் நீங்கதான்!
சோபகிருது தமிழ் புத்தாண்டில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார் என்று பார்க்கலாம். யாருடைய வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும் என்று பார்க்கலாம்.
சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்திலும் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டில் நவகிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறார்கள். சனி, குரு, ராகு கேதுவின் பயணங்களால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சோபகிருது தமிழ் புத்தாண்டில் சனி பகவான் கும்பம் ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். முக்கியமான கிரகங்களான குரு, ராகு கேதுவின் பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படப்போகின்றன.
குரு பகவான் சித்திரை மாதத்திலேயே மேஷ ராசியில் உள்ள ராகு உடன் இணையப்போகிறார்.
ஐப்பசி மாதத்தில் ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். கிரகங்களின் இந்த இடப்பெயர்ச்சியால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் வாழ்க்கை என்றாலே ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான் என்பதை உணர்ந்து இருப்பீர்கள். சோதனைகள் வந்தாலும் அமைதியை கடைபிடித்து வெற்றிக்கனியை பறிப்பீர்கள். இந்த புத்தாண்டு உங்கள் ராசிக்கு நிறைய நன்மைகளைத் தரப்போகிறது.
கணவன் மனைவி இடையே இருந்த கசப்புணர்வுகள் மறைந்து சந்தோஷம் அதிகரிக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த புத்தாண்டில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு ஏற்படும். கூடவே சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும்.
விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் பணவரவு உண்டு. பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பும் மரியாதையும் கூடும். சிலருக்கு பதவி உயர்வும் கூடவே சம்பள உயர்வும் கிடைக்கும். வரவே வராது என்று நினைத்திருந்த பணம் வந்து சேரும். குரு பகவான் பார்வையால் மன நிம்மதியும் குடும்பத்தில் சந்தோஷமும் உண்டாகும். வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
சனி பகவான் ஆண்டு முழுவதும் தொழில் ஸ்தானத்தில் பத்தாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு தேடி வரும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். தொழில் துறையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். நினைத்த காரியம் நிறைவேறும். மாணவர்கள் நன்றாக படித்தால் மட்டுமே நிறைய மதிப்பெண்களை பெற முடியும்.

இந்த ஆண்டு முழுவதும் ராகு கேது சஞ்சாரத்தினால் அதிக அளவு பண வரவு வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும்.
இந்த ஆண்டில் வீடு, மனை, இடங்களை வாங்கும் போது கவனமாக இருக்கவும். அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை வெளிநாடு செல்வதற்கு யோகம் கூடி வரும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். வேலை செய்யும் இடங்களில் கவனமும் நிதானமும் தேவை. ஐப்பசி மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நிகழப்போவதால் பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications