சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ராஜாவாக வாழப்போகும் ராசிக்காரர்கள்..வெற்றி யாருக்கு வசமாகும்?
சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு ராஜாதி ராஜாவாகும் யோகத்தை தரப்போகிறது. காரிய வெற்றிகள் கைகூடி வரும் நினைத்த காரியத்தை நிறைவேற்றும். சனி, குரு, ராகு கேது ஆகிய நான்கு ராஜ கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் பயணத்தால் சிம்மம், கன்னி,துலாம்,விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு சோபகிருது ஆண்டில் என்னென்ன நன்மைகள் நடைபெறப்போகிறது என்று பார்க்கலாம்.
சோபகிருது என்றால் மங்கலகரமான செயல்களை செய்யக்கூடிய ஆண்டு. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்திலும் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டில் நிறைய மங்கலகரமான செயல்கள் அதிகம் நடைபெறும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்வார். ராகு பகவான் ஐப்பசி மாதம் வரை மேஷ ராசியிலும் கேது பகவான் ஐப்பசி மாதம் வரை துலாம் ராசியில் பயணம் செய்வார். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.
நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சியாகும் சோபகிருது புத்தாண்டில் பல சுப காரியங்கள் நிகழப்போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும்? தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பண வருமானம் அதிகரிக்கும் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பார்க்கலாம். என்று பார்க்கலாம்.

சிம்மம்
சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய மகிழ்ச்சியும் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். இந்த புத்தாண்டில் நிஜமாகவே நீங்கள் ராஜாதான். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை சாதிக்கப்போகிறீர்கள். ராகு உடன் குருவும் இணைந்திருப்பதால் உங்களுக்கு ராஜயோகம்தான். நிறைய பண வரவு வரும். புதிய தொழில், வியாபாரம் தொடங்குவது வெற்றியைத் தரப்போகிறது. சொந்த பந்தங்களுக்காக ஓடி ஓடி உழைப்பீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். புத்திரபாக்கியம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வந்து விட்டது. நரசிம்மர் வழிபாடு நாளெல்லாம் நன்மை செய்யும். வாகன பயணங்களில் நிதானம் தேவை. சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர அதி அற்புதமான யோகத்தை சோபகிருது புத்தாண்டு அளிக்கப்போகிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் உங்களுக்கு ஆண்டு கோள்களாக சனி, குரு, ராகு, கேதுவின் பயணங்களைப் பார்த்தால் ஒவ்வொரு செயலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டியிருக்கும். எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். திடீர் யோகங்கள் வரும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். திடீர் பண வருமானம் வரும் நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சினைகள் நீங்கும். குருவும் ராகுவும் அஷ்டமத்து ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வேலையில் இருப்பவர்கள் கவனமாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டிய காலமாகும். பொறுப்புகள் கூடும், உடலில் அசதியும் சோர்வும் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. பொது இடங்களிலும் வேலை செய்யும் இடங்களிலும் எதிர்பாலினத்தவர்களிடம் கவனமாகவும் நிதானமாகவும் பேசுவது அவசியம். அரசு விசயங்களில் கவனம் தேவை. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு திருமண யோகம் கைகூடி வரும். கேது உங்கள் ராசிக்கு வருகிறார் ராகு ஏழாம் வீட்டில் அமரப்போவதால் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். சொந்த பந்தங்களுடன் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நிறைய ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். முன்னோர்கள் கடன்களை தீர்த்து சாப விமோசனம் பெறுவீர்கள். குடும்பத்தோடு ராமேஸ்வரம் சென்று வர அற்புதமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழப்போகிறது.

துலாம்
குரு பகவான் உங்களுக்கு அற்புதமான மாற்றங்கள் தரப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் ராகு உடன் இணைகிறார். உங்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான கால கட்டமாக இருக்கப்போகிறது. குருபகவானின் அற்புதமான பார்வை நேரடியாக கிடைக்கிறது. உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வாழ்க்கை துணையினால் வசந்தகாலம் வீசப்போகிறது. மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குல தெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். ராகு பகவான் அக்டோபர் மாதம் ஆறாம் வீட்டிற்கு வரப்போவதால் கடன் பிரச்சினைகள் நீங்கும். எதிரி, தொல்லை, வம்பு வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. பொருளாதார வளம் அற்புதமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் உதவி மாணவர்களுக்கு தேடி வரும். உயர்கல்வி யோகம் கைகூடி வரப்போகிறது. மொத்தத்தில் துலாம் ராசிக்காரர்கள் சோபகிருது புத்தாண்டில் ராஜாவாக வாழப்போகும் யோகம் கைகூடி வரப்போகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே..உங்களுக்கு யோகங்கள் நிறைந்த ஆண்டாக உள்ளது. சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள். வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது. ஏழரை சனி முடிந்த பின்னரும் அடுத்தடுத்து எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்தீர்கள். இப்போது நான்காம் வீட்டில் உள்ள சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக மாறி சங்கடங்களை தந்து கொண்டிருக்கிறார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். மன ரீதியாக உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக மாறுவீர்கள். எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும் அதை எளிதில் புறந்தள்ளி விடுவீர்கள். இந்த ஆண்டில் முக்கியமாக தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். ஆறாம் வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவ, மாணவிகள் படிப்பில் கவனமாகவும் அக்கறையுடனும் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் கவனம் தேவை. அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. கால பைரவரை ராகு காலத்தில் நல்லெண்ணெயில் மிளகு தீபம் ஏற்றி வணங்குங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications