For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்யாணம் கைகூடி வர சீனிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேச பெருமாளை தரிசியுங்கள்

திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் மாசி மாத வருடாந்திர பிரம்மோற்சவமும் கபிலேஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் கோலகலமாக தொடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

திருப்பதி: ஏழுமலையான் கோவில் வாசம் செய்யும் திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கோலகலமாக துவங்கியுள்ளது. திருப்பதியில் கபில தீா்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள கபிலேஸ்வரா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

திருமலையில் ஏழுமலையான் தனியாகவும், அலுமேலு மங்காபுரத்தில் பத்மாவதி தாயார் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர். சீனிவாசமங்காபுரத்தில் ஏழுமலையான் பத்மாவதி தாயாருடன் கல்யாண வெங்கடேச பெருமாளாக அருள்பாலிக்கிறார். திருமண வரம் வேண்டுபவர்கள் இந்த பெருமாளை வணங்கி திருக்கல்யாணத்தை தரிசித்தால் கல்யாணம் கை கூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவேதான் நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா்.

இந்த ஆலயத்தில் பல திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொடியேற்ற நாளான நேற்று
இதையொட்டி காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வரா் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்து கொடிமரத்துக்கு அருகில் எழுந்தருளினாா்.

புளியோதரை சர்க்கரைப்பொங்கல், பாயசம் எந்த கடவுளுக்கு என்ன நைவேத்தியம் படைக்கலாம்புளியோதரை சர்க்கரைப்பொங்கல், பாயசம் எந்த கடவுளுக்கு என்ன நைவேத்தியம் படைக்கலாம்

பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம்

கொடிமரத்துக்கு திருமஞ்சனம் நடத்தி அதை மலா்கள், தா்ப்பைப் புல், மாவிலை, பட்டு வஸ்திரம் உள்ளிட்டவற்றால் அலங்கரித்தனா். அதையடுத்து, மஞ்சள் பூசிய கயிற்றின் மூலம் கொடிமரத்தில் கருடக் கொடி ஏற்றப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையாக பெரியசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வரா் மாடவீதியில் வலம் வந்தாா். இன்று காலையில் சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்த பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாடவீதியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணமும் நடத்தப்பட்டது.

திருப்பதி கபில தீர்த்தம்

திருப்பதி கபில தீர்த்தம்

திருப்பதியில் கபில தீா்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள கபிலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வரும் 21ஆம் தேதி மகாசிவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோயிலில் வெள்ளிக்கிழமை காலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நந்திக்கொடி

நந்திக்கொடி

நேற்று காலையில் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா், காலபைரவா், சோமாஸ்கந்தா், காமாட்சி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு பால், தேன், தயிா், இளநீா், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் மலா்கள், தா்ப்பைப் புற்களால் அலங்கரித்து வெள்ளைத் துணியில் வரையப்பட்ட நந்திக்கொடி கும்ப லக்னத்தில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

வீதி உலா வந்த கபிலேஸ்வரர்

வீதி உலா வந்த கபிலேஸ்வரர்

பஞ்ச பூதங்களையும், முப்பத்து முக்கோடி தேவா்களையும் பிரம்மோற்சவத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது வேத பாராயணமும் நடைபெற்றது. அதன் பின் கபிலேஸ்வரா் மற்றும் காமாட்சி அம்மன் தனித்தனி பல்லக்குகளில் மாடவீதியில் வலம் வந்தனா். பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, பழங்களை நிவேதனம் செய்து வாகனச் சேவையை வணங்கினா்.

அன்னப்பறவை வாகன சேவை

அன்னப்பறவை வாகன சேவை

பிரம்மோற்சவத்தின் தொடக்கத்தையொட்டி, கோயிலில் 4 டன் மலா்களாலும், பலவகையான மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் முதல் நாள் வாகனச் சேவையாக சோமாஸ்கந்தா் அன்னப்பறவை வாகனத்தில் மாடவீதியில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை வலம் வந்தாா். இந்த வாகனச் சேவையில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

English summary
Sri Kalyana Venkateswara Swamy temple is located 12kms to the west of tirupati in Srinivasa Mangapuram. According to history, Lord Venkateswara stayed temporarily in Srinivasa Mangapuram with Sri Padmavathi Devi, before shifting to Tirupati Tirumala. Brahmorchavam is the famous festival celebrated every year in the Month of Masi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X