தேய்பிறை அஷ்டமி: ராகு தோஷம் நீக்கும் சூலினி துர்க்கா ஹோமம் - மனப்பதற்றம் நீங்கும்

தன்வந்திரி பீடத்தில் ராகு தோஷத்தை நீக்கி துஷ்ட சக்திகளை விரட்டும் சூலினி துர்கா ஹோமம் மற்றும் திருஷ்டி துர்கா ஹோமம். நடை பெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் ராகு தோஷத்தை நீக்கி துஷ்ட சக்திகளை விரட்டும் சூலினி துர்கா ஹோமம் மற்றும் திருஷ்டி துர்கா ஹோமம் நடை பெறுகிறது. உறவு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும், தீய விளைவுகள் நீங்கவும், ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறவும், மன அழுத்தம், பதட்டம்‌ குறையவும், அனைத்து செயல்களிலும் நம்பிக்கை கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கவும் இந்த ஹோமம் நடத்தப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு நாளை 13.07.2020. திங்கள் கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சூலினி துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.

Sri Trishti Durga Soolini Durga Homam on Theipirai Ashtami

சகல திருஷ்டிகளையும், தோஷங்களையும் நீக்கி விரைவில் திருமணம் கைகூடும் ஹோமம் சூலினி துர்கா ஹோமம் ஆகும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் நம்மை வாட்டி வதைக்கும் அனைத்து தீமைகள், சந்தேகம், குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, வலுவான பாதுகாப்பு பெறலாம்.

காரியத்தடைகள் நீங்கும், தீய சக்திகள் அகலும், முற்பிறவி சாபம் விலகும், பிதுர் தோஷம், சாபங்களை போக்கும் உன்னத யாகமே சூலினி துர்கா யாகமாகும். நவக்கிரக தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இந்த சூலினி துர்கா ஹோமம் நடைபெறுகிறது.

ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி தேவியின், ஆசிகளைப் பெற இந்த ஹோமம் நடத்தப்படுகின்றது. மண வாழ்க்கை மற்றும், உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம் கோபம், பொறாமை, ஆணவம், சுயநலம், வெறுப்பு போன்ற தீமைகள் அகலும் பெரும் சக்தி வாய்ந்த துர்கா தேவியின் அளப்பரிய, தெய்வீக ஆற்றலை உணரவும், அதைப் பெற்று, அன்றாட வாழ்க்கையில் பயன் பெறவும் வகை செய்கிறது.

நாளைய தினம் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. ஊரடங்கு அமுலில் உள்ளதால் பொது மக்கள் யாரும் நேரில் கலந்து கொள்ள அனுமதியில்லை தொலைபேசி மூலம் ராசி, நட்சத்திரங்களை தெரிவித்து சங்கல்பம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+