தென்னைய வச்சா இளநீரு... பிள்ளையப் பெத்தா கண்ணீரு
கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க ஜோதிட ரீதியான பரிகாரங்களை ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் (9498098786)
சென்னை: ஏப்ரல் தொடங்கும்போதே, கோடையும் அதிரடியாக தொடங்கி இப்போதே வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்துவிட்டது. கோடை கால நோய்களான அம்மை, வியர்குரு, சிறுநீர் கடுப்பு வாட்டி வதைக்கிறது. இவற்றை சமாளிக்க சில பரிகாரங்களை ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
குழந்தைகளும், வயதானவர்களும், நோயாளிகளும் இப்போதே வெயிலின் கொடுமையால் வதங்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் இந்த கோடை வெயில் பாதிக்காத அளவிற்கு எல்லோருமே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
போதிய மழை இல்லாமல், வெயில் தலைகாட்ட முடியாத அளவுக்கு கொளுத்திக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் வறட்சி மிகுந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டோடு கோடைகால நோய்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

வெப்பதளர்ச்சி நோய்:
மனித உடலின் இயல்பான வெப்பநிலை வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, இயல்பு நிலையிலிருந்து அதிகமாகிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும், களைப்பு உண்டாகும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

சிறுநீர்க் கடுப்பு
கோடையில் பல பேருக்கு அதிக அளவில் தொல்லை தருவது சிறுநீர்க் கடுப்பு. தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. குடிக்கும் தண்ணீரின் அளவு குறையும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடுகிறது. இதன் விளைவால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும்.

வியர்க்குரு
கோடையில் சுற்றுப்புற வெப்பநிலை சர்வசாதாரணமாக 40-லிருந்து 45 டிகிரியைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க வழக்கத்தைவிட, மூன்று மடங்கு வியர்வை சுரக்கிறது. இந்த வியர்வையை அவ்வப்போதுத் துடைத்து உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.

அம்மை நோய்கள்
கோடை வெப்பத்தால் நிலம் உஷ்ணம் அடையும்போது குப்பை, கூளங்களில் குடியிருக்கும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்றின் மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் 'வேரிசெல்லா ஜாஸ்டர்' எனும் வைரஸ் கிருமிகள். இந்தக் கிருமியால் நமக்குச் சின்னம்மை ஏற்படுகிறது. அந்நோய் வந்து குணமான பின்னரும் சிலருக்கு இந்த நோய்க் கிருமிகள் நரம்புகளில் தங்கி, பல ஆண்டுகள் கழித்து 'அக்கி அம்மை'யை ஏற்படுத்தும். இதுபோல் மீசில்ஸ் வைரஸ், தட்டம்மை நோயை ஏற்படுத்தும்.

நோய்களும் ஜோதிட தொடர்பும்
இந்த கோடையில் ஏற்படும் நோய்களுக்கும் ஜோதிடத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என பார்த்தால் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது.
கோடையில் ஏற்படும் நோய்களுக்கு முக்கூட்டு கிரகங்களான சூரியன்-புதன்-சுக்கிரன் ஆகிய மூன்று கிரங்களோடு செவ்வாயும் சேர்ந்து அதிக விளைவுகளை ஏற்படுத்தினாலும் அனேக வியாதிகளுக்கு சுக்கிரனே காரணமாக கிரகமாக அமைந்துள்ளது. கோடைகாலத்தில் உடம்பில் நீர்சத்தின் அளவு குறையும்போது காய்ச்சல் ஏற்படுகிறது. உடம்பிலுள்ள நீர்சத்திற்கும் உஷ்ண காய்சலுக்கும் சுக்கிரனே காரக கிரகம் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

துலாம் ராசி
கால புருஷனுக்கு ஏழாம் வீடாகிய துலாம் ராசி சிறுநீரகம் சம்மந்தமான வியாதிகளை குறிக்குமிடமாகும். எனவே ஒருவர் ஜாதகத்தில் துலாராசியில் கிரகங்கள் இருக்கும் நிலையை கொண்டும் சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் நிலையை கொண்டும் ஒருவரது சிறுநீரக பிரச்சனைகளை அறியமுடியும்.

சிறுநீர் கோளாறுகள்
கோடைகாலத்தில் பலருக்கும் அடிக்கடி சிறுநீரக கோளாறுகள், மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. இதனால் உடலிலுள்ள கழிவுகள் வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. சிறுநீரகத்தின் வழியாக வெளியேறமுடியாத கழிவுகள் வியர்வை துவாரங்களின் வாயிலாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு கழிவுகள் வெளியற முடியாத நிலையில் அவை சருமங்களில் கொப்புளம், அம்மை, அக்கி போன்ற தோல் நோய்களை ஏற்படுத்தி விடுகிறது. எனவே பலவிதமான சரும நோய்களுக்கு சுக்கிரன் காரக கிரகமாகின்றது.

ஒற்றைத்தலைவலி
தலையில் படும் நேரடி வெயிலினால் (சூரியன்) மூளை நரம்புகள் பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்த நிலையில் சந்திராவர்த்தம், சூரியாவர்த்தம், ஒற்றை தலைவலி (Migraine), மற்றும் பார்வை கோளாறுகள் (சுக்கிரன்),முடி கொட்டுதல் (சுக்கிரன்) ஏற்படுகின்றது.

கோடை நோய்களுக்கான தீர்வு
கோடை நோய்களுக்கு காரக கிரகமான சுக்கிரனே அதற்கான தீர்வையும் காட்டுகிறார். கோடை நோய்களை தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை நிறைய குடித்துவந்தாலே பல பல வியாதிகளை தவிர்த்துவிடலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது. மேலும் இரண்டுமுறை குளித்து சுத்தமான பருத்தி ஆடைகள் அணிவதும் கோடைகால சரும நோய்களை தவிர்க்க வழிசெய்கிறது.

இளநீர் பருகுங்கள்
இன்று பலரும் தாகமெடுக்கும்போதெல்லாம் ரசாயனம் கலந்த பன்னாட்டு குளிர்பாணங்களை (சுக்கிர ராகு சேர்க்கை) பருகி உடல் நலத்தை கெடுத்துக்கொள்வதோடு காசையும் விரயமாக்கி வருகின்றனர். இயற்கை நமக்களித்த பலவித செல்வங்களில் ஒன்று இளநீராகும். முற்றிய நிலையான தேங்காய் குருவின் அம்சமாகும். அதனால்தான் அதனை பூஜைகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால் இளநீரின் காரகர் சுக்கிர பகவானாவார்.

ஆயுர்வேதம் சொல்வதென்ன?
கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் (அதிபதி சுக்கிரன்) என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.

அம்மை நோய்கள் குணமாகும்
ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம். இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும்.

குளு குளு கோடை
உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும். சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது. சுக்கிரனின் ரிஷப லக்னத்தை கொண்ட விவசாய நாடான நமது நாட்டில் இயற்கையாக விளையும் இளநீரை பருகி கோடையை குளு குளு கோடையாக மாற்றுவோம்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications